ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 9:23 [IST] Share This Article
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓசூர் விமான நிலையம் இந்த இரண்டில் எது முதலில் வரப்போகிறது என்ற போட்டி தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக சிறந்த வளர்ச்சியை பெற்று வரக்கூடிய சூழலில் அங்கே விமான நிலையத்தை அமைப்பது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என கருதுகிறது .
ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கர்நாடக மாநில அரசு பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான இடங்களை தேர்வு செய்வதில் தான் கர்நாடக அரசுக்கு தற்போது சிக்கல் நீடிக்கிறது. ஓசூர் விமான நிலையத்திற்கு போட்டியாக தெற்கு பெங்களூர் பகுதியில் பெங்களூரு இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கு கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் தான் தமிழ்நாடு அரசு போட்டியில் முந்தி இருக்கிறது. ஓசூரில் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு சைட் கிளியரன்ஸ் வாங்குவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு இறங்கி இருக்கிறது. பொதுவாக ஒரு விமான நிலையம் அமைப்பது என்றால் மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து இரண்டு விதமான ஒப்புதல்களை பெற வேண்டும். ஒன்று விமான நிலைய தளத்திற்கான அனுமதி, இரண்டாவது கொள்கை ரீதியிலான அனுமதி. அந்த வகையில் தமிழ்நாடு அரசு முதல் அனுமதி கோரி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அனுப்பி வைத்திருக்கிறது.
ஓசூர் விமான நிலைய ஓசூரில் விமான நிலையம் கட்டுவதற்கான முதல் கட்ட அனுமதி கோரி முன்வைக்கப்படும் விண்ணப்பம் இதுவாகும் . சூளகிரி தாலுகாவில் இருக்கக்கூடிய பேரிகை மற்றும் பாகலூர் பகுதியில் இந்த விமான நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு இடத்தை இறுதி செய்திருக்கிறது. இங்கே மு 30 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலையம் கட்ட வேண்டும் என தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆகிய இரண்டுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது .
Also Read
சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே : தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் பணிகள் முடியாமல் இருப்பது ஏன்?
பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம், ஓசூரில் விமான நிலையம் அமைக்க ஏதுவாக வான் வெளி கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என கோரி இருக்கிறது. முன்னதாக ஜூன் மாதத்திலேயே தமிழ்நாடு அரசு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இந்த விண்ணப்பத்தை அனுப்பி இருந்தது. ஆனால் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் ஓசூர் வான்வெளி வருவதால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த விண்ணப்பத்தின் மீது இன்னும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்தது. இந்த சூழல்தான் இரண்டாவது முறையாக தமிழ்நாடு அரசு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்திருக்கிறது.
அதே வேளையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் சைட் கிளியரன்ஸ் விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது . இந்த விண்ணப்பத்தின் மீது அவர்கள் முடிவெடுப்பதற்கு குறைந்தது எட்டு மாதங்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. உதாரணமாக பரந்தூர் விமான நிலையத்தை எடுத்துக் கொண்டால் சைட் கிளியரன்ஸ் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு ஓராண்டு காலம் காத்திருந்தது.
Recommended For You
வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு
முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் இருந்து இந்த சைட் கிளியரன்ஸ் அதாவது இந்த இடத்திற்கான ஒப்புதலை பெற்று விடும் பட்சத்தில் அடுத்ததாக கொள்கை ரீதியிலான ஒப்புதலை பெற வேண்டி இருக்கும். இதன் பின்னர் நிலம் கையகபடுத்தி, கொள்கை ரீதியான ஒப்புதல்களை பெற்று டெண்டர் விடுத்து ஓசூர் விமான நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி அது பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு எட்டு ஆண்டுகள் தேவைப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டின் முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உற்பத்தி மையமாக ஓசூர் மாறி வருகிறது .பல்வேறு நிறுவனங்களும் ஓசூரில் தொடர்ச்சியாக தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்ட வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் ஓசூரில் விமான நிலையம் அமைப்பது ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும். ஓசூர் விமான நிலையம் என்பது தமிழ்நாடு மக்கள் மட்டும் இல்லாமல் பெங்களூரு பகுதி மக்களும் அதிகம் பயன்படுத்தக்கூடிய விமான நிலையமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு பேரிகை பாகலூர் பகுதியில் விமான நிலையத்தை அமைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறது.
ஓசூர் விமான நிலையத்தை பொருத்தவரை ஒரு டெர்மினல் 2 ரன் வே கொண்டதாக இருக்கும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யக்கூடிய வகையில் ஓசூர் விமான நிலையம் திட்டமிடப்படுகிறது 2300 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய பணிகள் கட்டப்பட இருக்கின்றன இதில் 650 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசின் வசம் இருக்கிறது.
Share This Article English summary
Hosur Airport: Tamilnadu government seeks site clearance from Civil Aviation Ministry
The Tamil Nadu government has sent the site clearance application to the Ministry of Civil Aviation seeking the first stage of approval for establishing the airport at Hosur. Story first published: Sunday, November 16, 2025, 9:23 [IST] Other articles published on Nov 16, 2025
