Breaking: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

trump19-1767585863

  செய்திகள்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

News oi-Devika Manivannan By Published: Monday, January 5, 2026, 9:39 [IST] Share This Article

அமெரிக்க ராணுவம் திடீரென வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் கைது சிறை பிடித்து நாடு கடத்தியது தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது. நீண்ட காலமாகவே அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தாலும் டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

வெனிசுலா போதை பொருள் கடத்தல் மையமாக இருப்பதால் தான் அமெரிக்கா இந்த ராணுவ நடவடிக்கையை நடத்தியதாக சிலர் கூறுகின்றன. ஆனால் அமெரிக்காவின் உண்மையான நோக்கம் அது கிடையாது. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் கொட்டி கிடக்கக்கூடிய நாடாக வெனிசுலா இருக்கிறது. அந்த எண்ணெய் வளம் தான் அமெரிக்காவின் குறியே.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

Oil and Gas என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி உலக அளவில் 1.73 லட்சம் கோடி பீப்பாய் அளவிற்கு நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பு உள்ளது. ஒரு பீப்பாய் என்பது 160 லிட்டர் ஆகும். இதில் வெனிசுலா வசம் 30,300 கோடி பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு உள்ளது. அதன்படி உலகிலேயே நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்புகளை அதிகமாக கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது வெனிசுலா.

1970கள் வரை கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்தது வெனிசுலா. ஆனால் அங்கே கம்யூனிச ஆட்சி மலர்ந்து தனியாரிடம், இருந்த எண்ணெய் வளங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இதனால் அமெரிக்க அரசுக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் வெனிசுலா எண்ணெய் வளங்களை அணுகும் வாய்ப்பு போனது. எனவே வெனிசுலா மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்தது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

இதன் காரணமாக வெனிசுலா அரசால் தங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு அமைப்புகளை நவீனப்படுத்தமுடியாமல் போனது. எனவே பெரிய எண்ணெய் வளம் இருந்தாலும் அதனை வருவாயாக மாற்ற முடியவில்லை. இந்த நிலையில் சீனா உதவிக்கரம் நீட்டியது.தொடர்ச்சியாக வெனிசுலாவுக்கு கடன் மற்றும் நிதி உதவிகளை வழங்கியது சீனா. இதற்கு மாற்றாக வெனிசுலா சீனாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது சீனாவிடம் கடனாளியாக இருக்கும் நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. எனவே சீனா வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றிவிட்டால் உலக அளவில் அதன் கை ஓங்கி விடும். எனவே தான் ஓவர்நைட்டில் தாக்குதலை நடத்தி அதிபரையே தட்டி தூக்கி இருக்கிறார் டிரம்ப்.

Also Readவெனிசுலா அட்டாக்.. இந்தியாவுக்கு பிரச்சனையா.. கச்சா எண்ணெய் விலையில் என்ன நடக்கும்..?வெனிசுலா அட்டாக்.. இந்தியாவுக்கு பிரச்சனையா.. கச்சா எண்ணெய் விலையில் என்ன நடக்கும்..?

சீனாவுக்கு செக் வைக்க வேண்டும் , வெனிசுலா எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்ற இரண்டு நோக்கத்தையும் குறியாக கொண்டு தான் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருக்கிறது அமெரிக்கா. தற்போது மதுரோ கைது செய்யப்பட்டு இருப்பதும் வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா தன்னுடைய கட்டுப்பாட்டை கொண்டுவர முயற்சி செய்வதும் சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் .

வெனிசுலா தாக்குதல் குறித்த பேட்டியில் போதை பொருளை விட அங்கு இருக்கும் கச்சா எண்ணெய் வளங்கள் குறித்து தான் அதிகமாக பேசியிருக்கிறார் டிரம்ப். இதுவே அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கான காரணம் என்ன என்பதை நமக்கு விளக்குகிறது . அமெரிக்காவிடம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன, அவற்றை வெனிசுலாவுக்கு அனுப்பி எண்ணெய் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை சரிசெய்து ஏற்றுமதியை அதிகரிப்போம் என்கிறார் டிரம்ப்.

Recommended For Youவெனிசுலா தாக்குதல்.. பஜாஜ் ஆட்டோ பங்குகள் என்னாகும்..?வெனிசுலா தாக்குதல்.. பஜாஜ் ஆட்டோ பங்குகள் என்னாகும்..?

வெனிசுலா மீதான இந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்காவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்வு கண்டிருக்கின்றன. Chevron , Valero, EOG Resources உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பில் 100 பில்லியன் டாலருக்கும் மேல் சேர்ந்து இருக்கின்றன. விரைவில் இவை வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அணுகும் வாய்ப்பை பெறும் என்பதே பங்குகள் மதிப்பு உயர்வதற்கு காரணம்.

Share This Article English summary

Trump’s Venezuela Oil war: how it will impact china’s oil ambition and global oil business?

President Donald Trump’s plan to revive Venezuela’s oil industry involves international politics that targets China’s oil ambition. Story first published: Monday, January 5, 2026, 9:39 [IST] Other articles published on Jan 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *