ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என அறிவித்த கூகுள்..! எல்லா புகழும் டிரம்புக்கே..!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, December 20, 2025, 11:29 [IST] Share This Article
அமெரிக்க அரசாங்கம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்கும் , நிரந்தர குடியுரிமை பெறுவதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக புதிதாக விசா விண்ணப்பம் செய்பவர்களுக்கு தற்போது விண்ணப்ப ஆய்வுக்கான அப்பாயிண்ட்மெண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றன. இது புதிதாக விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் மட்டுமல்ல ஏற்கனவே விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரிந்து வெளிநாடுகளுக்கு சென்ற நபர்களுக்கும் தற்போது பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. இவர்கள் ரீ எண்ட்ரி விசாவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் அமெரிக்க விசாவில் வந்து வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறக் கூடாது என தெரிவிக்கிறது. இவ்வாறு அமெரிக்காவில் விசாவில் வந்து பணி புரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு சென்று மீண்டும் அமெரிக்கா வருவதற்கான ரீ என்ட்ரிங் நடைமுறைகள் தாமதமாவதாகவும் , 12 மாதங்கள் வரை காத்திருக்கும் சூழல் உண்டாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
சென்னை தான் H1B விசா மோசடியின் தலைநகரம்!! முன்னாள் தூதரக அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு!!
எனவே ஏற்கனவே விசாவில் வந்து அமெரிக்காவில் பணிபுரியக்கூடிய நபர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது. அவ்வாறு சென்றால் நீங்கள் திரும்ப அமெரிக்கா வருவதற்கு 12 மாதங்கள் வரை கூட காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகலாம் என்றும் தெரிவித்து இருக்கிறது . பிசினஸ் இன்சைடர் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது .

அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கு விசா ஸ்டாம்பிங் தேவைப்படக்கூடிய நபர்கள் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிப்பதாகவும் அவர்களுக்கு அங்கு இருக்கக்கூடிய தூதரகங்கள் ரி என்ட்ரி விசாவை பிராசஸ் செய்யாமல் தாமதப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே ஊழியர்கள் வெளிநாடு செல்வதையும் வெளிநாட்டு சுற்றுலாக்களையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.
அமெரிக்க அரசாங்கம் அண்மையில் விசா விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதன் காரணமாக தூதராக அதிகாரிகளுக்கு விசா விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன . அதாவது அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என ஹெச்1பி விசா, மாணவர் விசா, எக்ஸ்சேஞ்ச் விசிட்டர் விசா வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் சமூக வலைதள கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
Recommended For You
காத்து வாங்கும் கோல்டு கார்டு திட்டம்!! கூவி கூவி கூப்டா கூட யாரும் வரலயாம்!! சோகத்தில் டிரம்ப்!!
சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளை கவனமாக ஆய்வு செய்கிறார்கள். இதில் வெறுப்பு பேச்சு இருக்கிறது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன அல்லது உண்மை கண்டறிவது போன்ற பணிகளில் அவர்கள் வேலை செய்தவர்கள் என்றால் அவர்களின் விசாக்களை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. எனவே இந்த பணிகள் காரணமாக தூதரக அதிகாரிகள் விசா விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்துவது தாமதமாவதாக கூறப்படுகிறது . இதனால் விசா விண்ணப்பம் செய்தவர்கள் பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறதாம்.
Share This Article English summary
Tech Giant Google Urges Visa Staff: Stay in US as Visa Stamps Face 12-Month Backlogs
Google has warned employees on US visas against leaving the country due to significant delays in visa re-entry processing, which could last up to a year. Story first published: Saturday, December 20, 2025, 11:29 [IST] Other articles published on Dec 20, 2025
