Breaking: உஷார் முதலீட்டாளர்களே! இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்த அந்த டாப் 10 பங்குகள் எவை?

befunky-collage-2026-01-20t161049-587-1768905833

  Market update

உஷார் முதலீட்டாளர்களே! இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்த அந்த டாப் 10 பங்குகள் எவை?

Market Update oi-Pugazharasi S By Published: Tuesday, January 20, 2026, 16:14 [IST] Share This Article

பங்குச்சந்தை என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல. அது ஒரு நம்பிக்கை போர். நாம் ஒரு பங்கை வாங்கும்போது, அந்த நிறுவனம் வளரும் என்று நம்புகிறோம். ஆனால், கோடிக்கணக்கான மக்களின் பணத்தை பாதுகாத்து, அதை மிகவும் கவனமாக முதலீடு செய்யும் எல் ஐ சி போன்ற பிரம்மாண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள், திடீரென ஒரு பங்கிலிருந்து வெளியேறுகின்றன என்றால், அதன் பின்னணியில் ஏதோ ஒரு வலிமையான காரணம் இருக்கத்தான் செய்கிறது.

உஷார் முதலீட்டாளர்களே! இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்த அந்த டாப் 10 பங்குகள் எவை?

அப்படியான மாற்றங்கள் தான், 2026ம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில், யாரும் எதிர்பார்த்திராத சில அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல சிறு முதலீட்டாளர்கள் இன்னும் அந்த பங்குகள் ஏறும் என்று ஆவலுடன் காத்திருக்கையில், சந்தையின் பெரிய முதலீட்டாளர்கள் (Institutional Investors) அமைதியாக தங்கள் முதலீடுகளை குறைத்து வெளியேறியுள்ளனர்.

அதில் ராம்கோ சிமெண்ட் முதல் அதானி போர்ட் வரையிலான 10 பங்குகள் அடங்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏன் தங்கள் பிடியைத் தளர்த்திக் கொண்டுள்ளன? இது ஒரு லாப நோக்குடைய விற்பனையா அல்லது அந்த நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கையா? உங்கள் போர்ட்ஃபோலியோவில் இந்தப் பங்குகள் இருந்தால், நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன? வாருங்கள் பார்ப்போம்.

லிஸ்டில் உள்ள பங்குகள்?

தி ராம்கோ சிமெண்ட்ஸ்: இப்பங்கில் செப்டம்பர் காலாண்டில் 10.76% பங்கை வைத்திருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டிசம்பர் காலாண்டில் 9.4% ஆகக் குறைத்துள்ளன.

அதானி போர்ட்ஸ்: அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 2025 காலாண்டில் 8.38% பங்கை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 7.59% ஆக குறைத்துள்ளன.

கேன் ஃபின் ஹோம்ஸ்: இந்த நிறுவன பங்கில் டிசம்பர் 2025 காலாண்டு நிலவரப்படி 3.2% பங்குகள் மட்டுமே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசம் இருந்தன. இது செப்டம்பர் 2025 காலாண்டில் 3.97% ஆக இருந்தது.

ஹிந்துஸ்தான் காப்பர்: கடந்த செப்டம்பர் 2025 காலாண்டில் 5.49% பங்குகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசம் இருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 4.8% பங்குகள் மட்டுமே இருந்தது.

ரேடிகோ கைத்தான்: ரேடிகோ பங்கில் செப்டம்பர் காலாண்டில் 3.99% பங்கை வைத்திருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள், டிசம்பர் காலாண்டில் 3.31% ஆகக் குறைத்துள்ளன.

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் : இந்த நிறுவனத்தில் செப்டம்பர் 2025 காலாண்டில் 9.02% பங்கை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 8.34% ஆக குறைத்துள்ளன.

பேங்க் ஆப் பரோடா: கடந்த செப்டம்பர் 2025 காலாண்டில் 7.41% பங்குகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 6.74% பங்குகள் மட்டுமே இருந்தது.

சுஸ்லான் எனர்ஜி: சுஸ்லான் நிறுவனத்தில் செப்டம்பர் 2025 காலாண்டு நிலவரப்படி, 2.65% பங்கை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்தன. இது டிசம்பர் காலாண்டில் 1.99% ஆக குறைத்துள்ளன.

மேன்கைண்ட் பார்மா: செப்டம்பர் 2025 காலாண்டு நிலவரப்படி, 1.77% பங்குகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 1.12% பங்குகள் மட்டுமே இருந்தது.

யுபிஎல்: யுபிஎல் பங்கில் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, 9.42% பங்கை வைத்திருந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வைத்திருந்தன, இது டிசம்பர் காலாண்டில் 8.78% ஆகக் குறைத்துள்ளன.

மேற்கண்ட 10 நிறுவனங்களிலும் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், அது மிகக் குறுகிய அளவே. முழுமையாக எந்த பங்கையும் விட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வெளியேற வில்லை. ஆக சரியான ஆலோசனையுடன், அவற்றின் தனிப்பட்ட நிதி நிலவரத்தை ஆராய்ந்து முதலீடு குறித்து முடிவெடுக்கலாம், செய்த முதலீட்டில் இருந்து வெளியேறலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Which 10 stocks did insurance firms reduce stake in during the December quarter?

Based on recent shareholding data for the quarter ending December 2025, insurance companies (Institutional Investors) have reduced their stakes in several prominent stocks. Story first published: Tuesday, January 20, 2026, 16:14 [IST] Other articles published on Jan 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *