Breaking: உதயம் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்..!! தமிழ்நாட்டில் 2வது நிறுவனம்..!!

reliance4-1766071440

  செய்திகள்

உதயம் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்..!! தமிழ்நாட்டில் 2வது நிறுவனம்..!!

News oi-Prasanna Venkatesh By Published: Thursday, December 18, 2025, 20:54 [IST] Share This Article

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட் (RCPL) தமிழ்நாட்டை சேர்ந்த உதயம் ஆக்ரோ ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பங்கை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் மற்றும் உதயம் ஆக்ரோ ஃபுட்ஸ் நிறுவனங்கள் மத்தியில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் RCPL பெரும்பங்கு வைத்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதயம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தொடர்ந்து சிறு பங்கை வைத்துக்கொண்டு நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும் ஈடுப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் உதயம் என்ற பிரபல உணவு பொருட்கள் பிராண்டை ரிலையன்ஸ் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டு தென்னிந்தியாவில் மட்டும் நடந்து வந்த வர்த்தகம் இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

உதயம் நிறுவனத்தில் பெரும் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ்..!! தமிழ்நாட்டில் 2வது நிறுவனம்..!!

உதயம் பிராண்ட் உயர் தரமான பருப்பு வகைகளுக்கு பெயர் பெற்றது. இது மட்டும் அல்லாமல் ஸ்னாக்ஸ், ரெடி டு குக் பிரேக்ஃபாஸ்ட் மிக்ஸ் போன்றவற்றை உற்பத்தி செய்து இந்நிறுவனம் பல வருடங்களாக நுகர்வோர் சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது ரிலையன்ஸ் உடனான கூட்டணியில் தேசிய அளவில் விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

RCPL நிறுவனத்தின் இயக்குநர் டி.கிருஷ்ணகுமார் கூறுகையில், உதயம் மிகவும் நம்பகமான, பாரம்பரியம் கொண்ட பிராண்ட் என டிவிட்டரில் பதிவில் தெரிவித்தார். இந்த நிறுவனம் ஆரோக்கியமான உணவு பொருட்களை மக்களுக்கு தலைமுறைகளாக வழங்கி வருகிறது. இந்த புதிய கூட்டணி ரிலையன்ஸின் பிராண்டட் ஸ்டேபிள்ஸ் பிரிவை வலுப்படுத்தும். உலக தரம் கொண்ட பொருட்களை மலிவு விலையில் வழங்குவது ரிலையன்ஸின் இலக்காக உள்ளது என விளக்கிய டி.கிருஷ்ணகுமார், உதயம் விரைவில் தேசிய பிராண்டாக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளையில் டிவிட்டர் பதிவில் உதயம் ஆக்ரோ ஃபுட்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ். சுதாகர் கூறுகையில், ரிலையன்ஸுடனான கூட்டணி உதயம் பிராண்டுக்கு புதிய வளர்ச்சி பாதையை தொடங்குகிறது என்றார். உதயம் உயர் தரம் கொண்ட பிராண்டட் பருப்புகளுக்கு பெயர் பெற்றது. ரிலையன்ஸ் தலைமையில் நாடு முழுவதும் வர்த்தகம் விரிவாக்கப்படும் என டிவிட்டர் பதிவி தெரிவித்தார்.

சமீபத்தில் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை ஐபிஓ மூலம் பட்டியலிடுவதற்கான பணிகளையும், ரோடுமேம்-ஐயும் ரிலையன்ஸ் நிர்வாகம் உருவாக்கிய நிலையில், ரிலையன்ஸ் ரீடைல் கீழ் இருக்கும் பிராண்டுகளை தனியாக நியூ RPCL என்னும் நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது. முன்பு RPCL, ரிலையன்ஸ் ரீடைல் கீழ் ஒரு தனி நிறுவனமாக இருந்த நிலையில் தற்போது இதை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் தனி கிளையாக மாற்றியது.

தற்போது உதயம் பிராண்டில் பங்குகளை வாங்கியதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் இருக்கும் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் பிராடக்ட்ஸ் லிமிடெட் தான்.

ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனத்தை 2020ஆம் ஆண்டு வாங்கி அதன் மொத்த வர்த்தகத்தை தனது ஸ்மார்ட் பஜார் உடன் இணைத்தது. பல இடத்தில் Shri Kannan Smart என்ற பிராண்டிலும் விற்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தற்போது உதயம் அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Share This Article English summary

Reliance acquires majority stake in Tamil Nadu based Udhaiyams – Marked 2nd Acquisition in Tamilnadu

Reliance acquires majority stake in Tamil Nadu based Udhaiyams – Marked 2nd Acquisition in Tamilnadu Story first published: Thursday, December 18, 2025, 20:54 [IST] Other articles published on Dec 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *