Breaking: உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

ration1-1766474322

  செய்திகள்

உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, December 23, 2025, 12:50 [IST] Share This Article

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் அரிசி ,பருப்பு, கோதுமை , சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் தான் கிடைக்கின்றன. மாதம் தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தங்களுடைய உணவு தேவையை போக்கிக் கொள்ளக்கூடிய லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன . முன்னுரிமை குடும்ப அட்டை இதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் .முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். அடுத்ததாக அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, பொருட்களில் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன .

உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

உங்களுடைய ரேஷன் அட்டையிலேயே அது எந்த வகையிலான ரேஷன் அட்டை என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னுரிமை குடும்ப அட்டை என்றால் PHH என்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை என்றால் AAY என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு வகை குடும்ப அட்டைகளை வைத்திருக்கக் கூடிய நபர்கள் தொடர்ச்சியாக மானிய விலையிலும் இலவச அரிசி உள்ளிட்டவையும் கிடைக்க வேண்டும் என்றால் கேஒய்சி முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Readமகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா?மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா?

தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின் படி AAY அல்லது PHH குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், அந்த குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நியாயவிலை கடை அல்லது வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலத்தில் வசித்தால் அங்கே அருகே உள்ள நியாய விலை கடைகளில் விரல் ரேகை அல்லது கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் இ-கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!

எனவே உங்களுடைய ரேஷன் அட்டை முதலில் எந்த வகையான அட்டை என்பதை கவனியுங்கள். அவ்வாறு இருந்தால் உடனடியாக உங்களின் ரேஷன் கடைக்கு சென்று இந்த இ-கேஒய்சி முடித்துக் கொள்ளுங்கள் . மத்திய, மாநில அரசுகளை பொருத்தவரை தாங்கள் வழங்க கூடிய சலுகைகள் அனைத்து தகுதியான மக்களை சென்று சேர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றன . இதற்காகத்தான் இ-கேஒய்சி என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

Recommended For Youபொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்?பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்?

எனவே உங்களுடைய ரேஷன் அட்டை மேலே கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்றாக இருந்தால் ரேஷன் கடையில் கேஒய்சி முடித்து கொள்ளுங்கள். ரேஷன் கடைக்கு சென்றாலே ஊழியர்கள் இயந்திரம் மூலம் உங்களுக்கான இ -கேஒய்சி முடிப்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு எப்போதும் போல வழக்கமாக கிடைக்கக்கூடிய மானிய விலை மற்றும் இலவச பொருட்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் .

இதற்கென கடைசி தேதி என ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கேஒய்சி விவரங்கள் சரி பார்ப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

Share This Article English summary

Ration Card ekyc: Is December 31st is the last day to complete it?

Reports says that Ration card holders using AAY/PHH cards must complete ekyc before December 31st. Here is how to do it. Story first published: Tuesday, December 23, 2025, 12:50 [IST] Other articles published on Dec 23, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *