Breaking: இன்னுமா பேங்க் FD-இல் பணம் போடுறீங்க? நம்ம போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கும் இந்த திட்டத்த முதல்ல படிங்க..

post-1764669542

  பர்சனல் பைனான்ஸ்

இன்னுமா பேங்க் FD-இல் பணம் போடுறீங்க? நம்ம போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கும் இந்த திட்டத்த முதல்ல படிங்க..

Personal Finance oi-Devika Manivannan By Updated: Tuesday, December 2, 2025, 15:45 [IST] Share This Article

இந்தியாவில் நிதி சார்ந்த மோசடிகள் அதிகரித்துவிட்டன. குறிப்பாக இதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் ,குறைந்த முதலீடு செய்து நிறைய லாபம் பார்க்கலாம், பங்குச்சந்தையில் முதலீடு செய்து அன்றைய தினமே உங்களுக்கு லாபத்தை தந்து விடுவோம் என பல்வேறு போலியான முதலீட்டு திட்டங்கள் முதலீட்டு விளம்பரங்கள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய பணத்தை மோசடி கும்பல்களிடம் இழக்கிறார்கள்.

நீடித்த நிலையான வருமானமே நீடிக்கும் மற்ற அனைத்துமே போலியானது என்பதுதான் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு கூறக்கூடிய அறிவுரை . பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்போகிறீர்களா யாரையும் நம்பாதீர்கள் பங்குச்சந்தை முதலீடு குறித்து முழுதாக படித்து புரிந்து கொண்டு நீங்களாகவே முதலீடு செய்யுங்கள் என கூறுகின்றனர். அப்படி எனக்கு முதலீடு செய்வதற்கு நேரமில்லை அதற்கான வயதை நான் கடந்து விட்டேன் என்பவர்கள் அரசு வழங்கக்கூடிய பல பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் ஈசியாக முதலீடு செய்து லாபம் பெறலாம் .

இன்னுமா பேங்க் FD-இல் பணம் போடுறீங்க? நம்ம போஸ்ட் ஆபிஸ்ல கிடைக்கும் இந்த திட்டத்த முதல்ல படிங்க..

நம்முடைய தபால் அலுவலகங்களிலேயே பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகின்றன . வங்கிகள் வழங்கக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை விட அதிக வட்டி தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் நமக்கு கிடைக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மூன்று முறை குறைத்து இருக்கிறது. கிட்டத்தட்ட 1 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருக்கிறது . அதை தொடர்ந்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை குறைத்துவிட்டன.

கடன்களுக்கான வட்டி குறைகிறது என்றால் வங்கிகள் சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கக்கூடிய வட்டிகளையும் குறைத்து விட்டன. அந்த வகையில் இந்தியாவின் அரசு வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 6.6 சதவீதம் தான் அதிகபட்ச வட்டியே வழங்குகிறது. இந்தியன் பேங்க் , கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா என பொதுத்துறை வங்கிகள் அனைத்துமே அதிகபட்சமாக 6 முதல் 7 சதவீதம் வரை தான் நிலையான வைப்பு தொகை திட்டங்களுக்கு வட்டி வழங்குகின்றன. இவை அனைத்துமே அதிகபட்ச காலம் அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் செய்யக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு தான் .

Also Readதங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!தங்க நகைகளை பாதுகாக்க இப்படி ஒரு வழி இருக்கா?? இனிமே திருட்டு பயமே தேவையில்லை!!

தனியார் வங்கிகளை பொறுத்தவரை 6 முதல் 6 சதவீதத்திற்குள் தான் வைப்பு தொகை திட்டங்களுக்கு வட்டி வழங்குகின்றன. ஆனால் அஞ்சல் அலுவலக திட்டங்கள் பலவும் நமக்கு 7 சதவீதத்திற்கும் மேல் வட்டி வழங்குகின்றன. குறிப்பாக இரண்டு ஆண்டு காலம் கொண்ட டைம் டெபாசிட் திட்டங்களுக்கு தபால் நிலையங்களில் நாம் முதலீடு செய்யும் போது ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி கிடைக்கிறது .இந்த வட்டி தொகையானது ஒவ்வொரு காலாண்டுக்கும் காம்பவுண்டிங் முறையில் கணக்கீடு செய்யப்படுகிறது.

3 ஆண்டுகாலம் கொண்ட டைம் டெபாசிட் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது . அதேபோல 5 ஆண்டு காலம் கொண்ட டைம் டெபாசிட் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. உங்கள் வீட்டில் மூத்த குடிமக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களின் பெயரில் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும்போது உங்களுடைய முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும் . இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச வட்டி இதுவாகும்.

Recommended For Youஸ்மார்ட் போன்களில் சஞ்சார் சாத்தி செயலி இருப்பது கட்டாயமா? சர்ச்சை எழுந்த நிலையில் அரசு விளக்கம்ஸ்மார்ட் போன்களில் சஞ்சார் சாத்தி செயலி இருப்பது கட்டாயமா? சர்ச்சை எழுந்த நிலையில் அரசு விளக்கம்

ஒவ்வொரு காலண்டிலும் இந்த வட்டி என்பது கணக்கீடு செய்யப்பட்டு காம்பவுண்டிங் செய்யப்படுகிறது. அதேபோல மாதாந்திர வருமானம் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.4 சதவீதம் என வட்டி கணக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் அந்த வட்டி தொகையானது தபால் நிலைய கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடுகிறது.

எனவே உங்களிடம் ஒரு கணிசமான தொகை இருக்கிறது அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் தபால் நிலையங்களை விட பாதுகாப்பான இடமோ அல்லது உத்தரவாதமான வருமானம் தரக்கூடிய திட்டமோ வேறு எங்குமே கிடைக்காது. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வு பெறும்போது தங்களுக்கு கிடைத்த தொகையை யாரிடமும் நம்பி எதிலும் முதலீடு செய்யாமல் தபால் நிலையத்தின் திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால் போதும் மாதம் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு வட்டியாக வந்து கொண்டே இருக்கும் உங்களுடைய ஓய்வு காலமும் நிம்மதியாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Post Office schemes beats FD returns: These schemes offer 7% and higher interest rates

In 2025, declining bank fixed deposit rates around 6-7% have made post office small savings schemes more attractive, as several offer over 7% interest with quarterly revisions by the government. Story first published: Tuesday, December 2, 2025, 15:30 [IST]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *