Breaking: இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

Breaking: இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

  செய்திகள்

இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

News oi-Devika Manivannan By Published: Wednesday, November 12, 2025, 17:20 [IST] Share This Article

ஒரு சமூகமாக இணைந்து ஒரு முயற்சியை கையில் எடுக்கும் போது பெரிய மாற்றத்தை நிச்சயம் கொண்டு வர முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இந்தியாவில் இருக்கின்றன. மதுப்பழக்கமே இல்லாத கிராமம் ,திருட்டு பயமே இல்லாத கிராமம் , அதிக வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்ட கிராமம், அதிக அரசு அதிகாரிகள் கொண்ட கிராமம் என பல்வேறு கிராமங்களும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் ஒரு கிராமத்தைப் பற்றி நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம். பீகார் என்றாலே மாநிலத்தில் பெரிய அளவில் படிப்பு , வேலை வாய்ப்பு இல்லை அந்த மாநில மக்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் தான் வேலைக்கு வருகிறார்கள் என்ற ஒரு எண்ணம் தான் நமக்கு தோன்றும். ஆனால் பட்வாடோலி (Patwatoli) கிராமம் அந்த எண்ணத்தையே சுக்கு நூறாக உடைக்கிறது.

இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி என அழைக்கப்படும் பீகார் கிராமம்!! வியக்க வைக்கும் மக்கள்!!

ஒரு காலத்தில் மேன்செஸ்டர் ஆஃப் பீகார் என அழைக்கப்பட்டது தான் பட்வாடோலிகிராமம் . அதாவது கைத்தறி நெசவாளர்கள் அதிகம் நிறைந்திருந்த இந்த கிராமம். தற்போது இந்தியாவின் ஐஐடி ஃபேக்டரி ஆக மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராமத்தில் இருந்து சராசரியாக 30க்கும் அதிகமானவர்கள் ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கான ஜேஈஈ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயில செல்கிறார்கள். இந்த வெற்றி என்பது ஓரிரு ஆண்டுகளில் கிடைத்துவிடவில்லை . நீண்ட காலமாக போடப்பட்ட விதைதான் தற்போது மரமாக வளர்ந்து நிற்கிறது.

பட்வாடோலி கிராம மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு இலவசமாக ஜே ஈ ஈ போன்ற போட்டி தேர்வுகளுக்கு படிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். முதன்முதலில் 1991ஆம் ஆண்டில் ஜிதேந்திர பத்வா என்பவர் இந்த கிராமத்தில் இருந்து ஐஐடி கல்வி நிலையத்திற்கு சென்று படிக்க தொடங்கினார். பின்னர் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

Also Readஐடி வேலை வேண்டாம் என ஐஸ்கிரீம் விற்க வந்த பிரதீப்!! 6 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கு நீங்களே பாருங்க!!ஐடி வேலை வேண்டாம் என ஐஸ்கிரீம் விற்க வந்த பிரதீப்!! 6 ஆண்டுகளில் என்ன நடந்திருக்கு நீங்களே பாருங்க!!

ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் தன்னுடைய பட்வாடோலிகிராம குழந்தைகளை ஐஐடி நிறுவன போட்டி தேர்வுகளுக்கு தயார் படுத்துகிறார். இந்த கிராமத்திலிருந்து ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜேஈஈ போன்ற போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் நான் இந்த கிராமத்தை சேர்ந்த 45 மாணவர்கள் ஜெஈஈ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள், 38 பேர் கடினமானதாக கருதப்படும் ஜேஈஈ அட்வான்ஸுடு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் இவர்களில் பெரும்பாலானவர்கள் டாப் 10 சதவீதத்திற்குள் மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

Recommended For You150+ டிகிரிகளை முடித்து சாதனை படைத்த சென்னை பேராசிரியர்!! பிரம்மிக்க வைக்கும் பின்னணி!!150+ டிகிரிகளை முடித்து சாதனை படைத்த சென்னை பேராசிரியர்!! பிரம்மிக்க வைக்கும் பின்னணி!!

ஏற்கனவே இந்த கிராமத்தில் கல்வி பயின்று பெரிய வேலைகளுக்கு சென்ற மூத்தவர்கள் தங்களுடைய அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டிகளாக மாறியிருக்கிறார்கள் இதுதான் இந்த கிராமம் இந்தியாவின் ஐஐடி பேக்டரி ஆக மாறுவதற்கு முக்கிய காரணம் . அவர்களுக்கு படிப்பதற்கு தேவையான டிஜிட்டல் வகுப்பறைகள், நூலகங்கள் என அனைத்தையும் உருவாக்கி தந்திருக்கிறார்கள்.

Share This Article English summary

Why this Bihar village is called IIT factory of India? #success stories

A Bihar village called Patwatoli has become a IIt factory of India. Every single year, like clockwork, dozens of students from this village succeed in the tough IIT JEE exams. Story first published: Wednesday, November 12, 2025, 17:20 [IST] Other articles published on Nov 12, 2025

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *