ஆதார் கார்டின் அடையாளமே மாறப் போகுது.. இனி பெயர், முகவரி எல்லாம் இடம்பெறாது – UIDAI
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 11:32 [IST] Share This Article
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டை பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் ஆதார் கார்டே மேஜர் மாற்றம் அடைய இருக்கிறது.
வழக்கமாக ஆதார் கார்டில் நம்முடைய புகைப்படம் , பெயர், முகவரி , ஆதார் எண் ஆகிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனி ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாறப் போகுது. ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள அமைப்பான யுஐடிஏஐ தெரிவித்திருக்கிறது. இந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார் .

வழக்கமாக நாம் ஒரு சிம்கார்டு வாங்குகிறோம் அல்லது ஒரு ஹோட்டலில் சென்று தங்குகிறோம் , போட்டி தேர்வுகளில் கலந்து கொள்கிறோம் எனும் போது நம்முடைய ஆதார் அட்டையை அங்கே நாம் தாக்கல் செய்து சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது . அதாவது நம்முடைய ஆதார் அட்டையை அதற்காக நாம் கையில் கொண்டு செல்ல வேண்டும் அல்லது ஆதார் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் நம்முடைய ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் ஆதார் என்ற ஒரு புதிய செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது யுஐடிஏஐ அமைப்பு. இந்த செயலி போனில் இருந்தால் போதும் நாம் போகும் இடத்திற்கெல்லாம் ஆதார் கார்டை கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை .
Also Read
தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!!
நம்முடைய ஆதார் சரிபார்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியின் இருக்கும் க்யூ ஆர் கார்டை காட்டினாலே போதும். இதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என யுஐடிஏஐ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் தெரிவிக்கிறார். தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு கொள்வதற்கும் எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மற்றும் ஆதார் நகல்களை கொண்டு செல்லாமல் இருப்பதற்கும் இந்த புதிய செயலியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார் .
ஆஃப்லைன் வெரிஃபிகேஷன் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஆதார் செயலி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் ஆதர் அட்டையில் பொதுமக்களின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டுவர இருப்பதாக அவர் கூறியிருக்கிறார் .
Recommended For You
மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு!!
இனி ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு என்றால் மக்கள் ஆதார் எண் அல்லது கியூ ஆர் கோடை மட்டுமே பயன்படுத்தும் வகையில் மாற்றம் வர இருப்பதாக தெரிவித்துள்லார். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஆதார் செயலியிலேயே இன்னும் 18 மாதங்களில் ஆதார் விவரங்களை அப்டேட் செய்யும் வசதியும் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
நிறுவனங்கள் , வங்கிகள் , தேர்வு அமைப்புகள் இனி ஆஃப்லைன் ஆதார் வெரிஃபிகேஷன் நடத்த கூடாது என அறிவுறுத்தி இருப்பதாக கூறியுள்ள அவர் இதற்கான கட்டமைப்பு மாற்றம் நடப்பதாகவும் இனி ஆதார் சரிபார்ப்புகளுக்கு உங்களின் ஆதார் கியூ ஆர் கோடினை காட்டினாலே போதும், அதனை கொண்டு உங்களின் முக அடையாளத்துடன் சரிபார்த்து தகவல்கள் பெற்று கொள்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Share This Article English summary
Soon your aadhaar card will carry only your photo and QR code says UIDAI
The UIDAI is considering issuing a simplified Aadhaar card featuring only a photo and a QR code to curb misuse and discourage illegal offline verification. Story first published: Wednesday, November 19, 2025, 11:32 [IST] Other articles published on Nov 19, 2025