அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?
Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Share This Article
இந்தியாவில் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் , குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயில முன் வரவேண்டும் ,இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களுக்காகவே NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION அதாவது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உதவி தொகை கிடைக்கும். மாதம் 1000 ரூபாய் என மொத்தம் 48000 ரூபாய் உதவிதொகை கிடைக்கும். இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு NMMS என்ற தேசிய திறனறிவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் மூலம் நாடு முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Also Read
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 75% தள்ளுபடி!! இந்த சலுகையை பெறுவது எப்படி?
தமிழகத்திலிருந்து சுமார் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான திறனறிவு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர்வு 2026 ஜனவரி 10ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது . தற்போது 8ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் . தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். அனைத்து வட்டார அளவிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இந்த தேர்வு என்பது நடக்கிறது . தேர்வுக்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 12ஆம் தேதி வெளிவந்தன. டிசம்பர் 15ஆம் தேதியான நாளைக்குள் மாணவர்கள் இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் .
https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு 50 ரூபாய் கட்டணம் சேர்த்து தாங்கள் கல்வி பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். வரும் 20ஆம் தேதிக்குள் இதனை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended For You
தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இல்லை என்றால் பள்ளி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுரை வழங்கியுள்ளது.
Share This Article English summary
NMMS exam: Tamilnadu govt announces application date
Every year central government conducts NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION, eligible students will get Rs.48, 000 as scholarship. Here is how to apply. Story first published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Other articles published on Dec 14, 2025
