அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Share This Article
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.
அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.

இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நவம்பர் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அனில் அம்பானி தன்னுடைய நிறுவனங்கள் பெயரில் வாங்கிய கடனை மற்ற நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தினார் என புகார் எழுந்துள்ளது . இது தொடர்பாக கடந்த ஜூலை மாதமே சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை அடுத்து அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக கடன் பெற்று அதனை சட்ட விரோதமாக அவர் வேறு நிறுவனங்களில் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது என சொல்லப்படுகிறது.
Also Read
AI தொழில்நுட்பத்தை மிஞ்சும் Super Intelligence..!! எந்திரன் கதை உண்மையாகுதா? மனிதகுலத்திற்கே ஆபத்தா?
ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டது. அவ்ரும் ஆஜரானார் அவரிடம் பல மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களின் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இது தவிர அனில் அம்பானியின் வீடு மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள் அலுவலகங்களை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியது. இவற்றின் மதிப்பு மொத்தம் 7500 கோடி ரூபாய் ஆகும்.
Recommended For You
8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன?
இந்த சூழலில் மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியிருக்கிறது. இதற்கிடையில் தான் அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. ஏற்கனவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் அனில் அம்பானியை நிதி மோசடியாளர் என அறிவித்துள்ளன.
Share This Article English summary
ED summoned Reliance Group chairman Anil Ambani for 2nd time
The Enforcement Directorate once again summoned Reliance Group chairman Anil Ambani for questioning in connection with an ongoing money laundering investigation. Story first published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Other articles published on Nov 6, 2025