Breaking: அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

magalirf3-1770962681

  செய்திகள்

அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

News oi-Devika Manivannan By Published: Friday, February 13, 2026, 11:36 [IST] Share This Article

தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயாக வரவு வைத்திருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 13-ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக 1000 ரூபாய் உரிமை தொகையை வரவு வைத்துவிடும்.

இந்த முறையும் வழக்கம் போல 1000 ரூபாய் வரும் என காத்திருந்த பெண்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் 5000 ரூபாயை வரவு வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பணம் பயனாளிகளின் அக்கவுண்டுக்கு சென்றவுடன் முதலமைச்சர மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த 5000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்திருந்தார்.

அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 3000 ரூபாய் தொகையும் கோடைகால சிறப்பு தொகையாக 2000 ரூபாயும் என மொத்தம் 5000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதாவது தேர்தல் நடைபெறக்கூடிய அந்த மூன்று மாத காலத்திலும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்குவதற்கு எதிர்கட்சிகள் திட்டம் தீட்டுவதாகவும், எனவேதான் தன்னுடைய அரசாங்கம் முந்திக்கொண்டு பெண்களுக்கு சேர வேண்டிய பணத்தை வழங்கி விட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

தற்போதே 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டுவிட்டது என்பதால் மகளிர் உரிமை தொகையை திட்ட பயனாளிகளுக்கு அடுத்ததாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் மீண்டும் பணம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது அடுத்த நான்கு மாதங்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்காது.

Also Readமகளிர் உரிமை தொகை மூலம் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!! இந்த சர்ப்பிரைஸுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?மகளிர் உரிமை தொகை மூலம் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்!! இந்த சர்ப்பிரைஸுக்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?

ஏனெனில் அரசாங்கம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான தொகையை இப்போதே வரவு வைத்துவிட்டது. மே மாதத்துடன் ஆட்சி முடிகிறது. எனவே அந்த மாதத்திலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காது. ஜூன் மாதம் தான் புதிய அரசு ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைத்த உடன் பட்ஜெட் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டிய தேவை இருக்கும்.

எப்படி இருந்தாலும் பிப்ரவரி மாதத்திற்கு அடுத்ததாக மகளிர் தொகை திட்ட பயனாளிகளுக்கு வரக்கூடிய ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் மகளிர் உரிமை தொகை மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமை தொகையாகவும், அதிமுக ஆட்சி அமைந்தால் குலவிளக்கு திட்டத்தின் கீழும் 2000 ரூபாய் கிடைப்பது உறுதி.

Recommended For Youமகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு ஜாக்பாட் : ரூ.1000க்கு பதில் ரூ.5000ஆக வரவு வைத்த அரசு..!!மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு ஜாக்பாட் : ரூ.1000க்கு பதில் ரூ.5000ஆக வரவு வைத்த அரசு..!!

தற்போது ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டது என்பதால் அடுத்த நான்கிலிருந்து ஐந்து மாதத்திற்கு இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினே தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இப்போது கையில் 5000 ரூபாய் வந்துவிட்டது என்பதால் அதனை செலவு செய்யாமல் அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு அதனை சேமித்து வைத்து பயன்படுத்துவது தான் நல்லது.

Share This Article English summary

Magalir Urimai thokai : CM Stalin’s Rs.5000 surprise and the twist behind this

As Tamilnadu government credits rs.5000 as Magalir Urimai thokai, since it is an advanced credit, the beneficiaries will not receive the money for next 4 to 5 months. Story first published: Friday, February 13, 2026, 11:36 [IST] See More On: stalin, election, ஸ்டாலின், மகளிர் உரிமை தொகை Other articles published on Feb 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *