Breaking: அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

tidel4-1768477471

  செய்திகள்

அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

News oi-Devika Manivannan By Published: Thursday, January 15, 2026, 17:23 [IST] Share This Article

இந்தியாவில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் முன்னிலையில் இருக்கக்கூடிய மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்துறை தான்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்துவதில் மிக தீவிரமாக இருக்கிறது. முதலில் முதலீட்டாளர் மாநாடு என்பது சென்னையில் நடக்கும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்தியேகமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. வாகன உற்பத்தி என்றாலே சென்னை தான் என்று இருந்த நிலைமையை மாற்றி ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவ வைத்திருக்கிறது.

அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாகன மற்றும் காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டங்களை கவனம் செலுத்தி அங்கே தொழில்பூங்காக்களை அமைப்பது, ஐடி வேலைகளை கொண்டு வர டைடல் பார்க்குகளை அமைப்பது என செயல்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு என்றாலே சொந்த கிராமத்தை விட்டு குடும்பங்களை விட்டு இளைஞர்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு வர வேண்டும் என்று இருந்த நிலைமையை தமிழ்நாடு அரசு படிப்படியாக மாற்றி வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக அனைத்து மாவட்டங்களிலும் ஐடி வேலைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் டைடல் பார்க்குகள் அமைக்கப்படுகின்றன.

Also Readதாம்பரம் ரயில் நிலையமே தலைகீழா மாறப்போகுது!! தென் மாவட்ட மக்கள் கொண்டாட்டம்!!தாம்பரம் ரயில் நிலையமே தலைகீழா மாறப்போகுது!! தென் மாவட்ட மக்கள் கொண்டாட்டம்!!

நகரங்களின் தேவைக்கு ஏற்ப பெரிய அளவிலும் மினி டைடல் பார்க் என்ற சிறிய அளவிலும் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு தற்போது ஓசூர், மதுரை , திருச்சி ஆகிய மூன்று நகரங்களிலும் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மூன்று நகரங்களிலும் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் கொண்ட பெரிய அளவிலான ஐடி டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

மதுரையில் கட்டுமான பணி முடிந்து இந்த ஆண்டே டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சியிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டுமே 5 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு மேல் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகின்றன. அடுத்ததாக ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு டைடல் பார்க்க கட்ட ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த டைடல் பார்க்குகள் பயன்பாட்டுக்கு வரும்போது திருச்சி, மதுரை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமில்லாமல் அவற்றை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கும் அவர்களின் ஊரிலேயே ஐடி வேலை கிடைத்துவிடும். இது தவிர 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் நியோ எனப்படும் மினி டைடல் பார்க்குகளை கட்டும் திட்டமும் அரசிடம் இருக்கிறது.

Recommended For Youஐடி வேலைக்காக இனி பெங்களூரு போக வேண்டாம்.. ஓசூர்லயே கிடைக்க போகுது.. Tidel Park அப்டேட் வெளியீடு!!ஐடி வேலைக்காக இனி பெங்களூரு போக வேண்டாம்.. ஓசூர்லயே கிடைக்க போகுது.. Tidel Park அப்டேட் வெளியீடு!!

தொழில் ரீதியாக அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்களை அமைப்பதிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போது தொடங்கப்படக்கூடிய இந்த திட்டங்கள் அனைத்துமே அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை சிறந்த ஒரு உற்பத்தி மையமாகவும், சிறந்த ஐடி சேவை வழங்கக்கூடிய ஒரு மாநிலமாகவும் மாற்றும். வளர்ச்சி என்பது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக தமிழ்நாடு விரைவில் மாற இருக்கிறது.

Share This Article English summary

Madurai, Trichy, Hosur gets major boost by the 5lakh+ Sqft Tidel parks

Tamilnadu government is focusing more on growth in all the districts to achieve this government plans to establish sipcot and tidel parks in all districts. Here are the major developments. Story first published: Thursday, January 15, 2026, 17:23 [IST] Other articles published on Jan 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *