Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!
செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 11:32 [IST] Share This Article பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயர்தான் மைதிலி தாக்கூர். பீகாரின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர். பாஜகவின் இளம் வயது வேட்பாளர். அரசியல் பயணத்தில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்லியே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்றுள்ளார்.பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு வேட்பாளர் மைதிலி தாக்கூர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது பாஜக மைதிலி தாக்கூருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு தந்தது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி தான் மைதிலி தாக்கூர், இந்தி, மைதிலி, போஜ்புரி உள்ளிட…