செய்திகள் ஆதார் கார்டின் அடையாளமே மாறப் போகுது.. இனி பெயர், முகவரி எல்லாம் இடம்பெறாது – UIDAI News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 11:32 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டை பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் ஆதார் கார்டே மேஜர் மாற்றம் அடைய இருக்கிறது.வழக்கமாக ஆதார் கார்டில் நம்முடைய புகைப்படம் , பெயர், முகவரி , ஆதார் எண் ஆகிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனி ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாறப் போகுது. ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள…