செய்திகள் உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளி: அடுத்து என்ன நடக்கும்? இனிமேல் தங்கம் வாங்குவது கனவா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 25, 2026, 8:52 [IST] Share This Article சாமானிய மக்களின் மிக விருப்பமான கனவு, தங்களால் முடிந்த ஒரு பொட்டு தங்கத்தையேனும், தன் சந்ததிகளுக்கு வாங்கி சேமிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அனுதினமும் ஏற்றம் கண்டு வரும் தங்கம் ஒரு புறம் என்றால், மறுபுறம் ஏழைகளின் தங்கமாக பார்க்கப்படும் வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு ஏற்றம் கண்டு கொண்டிருக்கிறது. இது சாமானியர்களின் கனவுகளை மட்டும் சிதைக்கவில்லை. இனி வாங்கவே முடியாதோ என்ற கவலையையும் எழுப்பியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ்-க்கு 5,200 டாலராகவும், வெள்ளி விலை 88 டாலராகவும் உச்சம் தொட்டு காணப்படுகின்றன.மொத்தத்தில் நடுத்தர வர்க்க மக்களின் விருப்பமான முதலீடாகவும், பொன்னும் பொருளாகவும் இருந்த…