AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!! – Allmaa

ai37-1766227189

  செய்திகள்

AI கூட வேலை செய்யனும்.. இல்லனா மூட்டைய கட்டலாம்!! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!!

News oi-Devika Manivannan By Published: Saturday, December 20, 2025, 16:12 [IST] Share This Article

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் டெக் நிறுவனங்களில் மிக வேகமாக தன்னுடைய ஆதிக்கத்தை பரப்பி வருகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே கோடிங் போன்ற முக்கியமான வேலைகளை ஏஐ வசம் ஒப்படைத்து வருகின்றன . அதாவது ஏஐ சில வேலைகளை செய்யும் அவற்றை மேற்பார்வை இட்டு சரி செய்யக்கூடிய வேலைகளில் மனிதர்கள் இருப்பார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் டெக் நிறுவனங்களில் வேலை சூழலே இப்படித்தான் இருக்கப்போகிறது . மனிதர்கள் ஏஐ உடன் இணைந்து தான் வேலை செய்ய வேண்டும் என்ற சூழல் தான் உண்டாக போகிறது. அதற்கான அடித்தளத்தை தான் நாம் தற்போது பார்த்து வருகிறோம். இந்த சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் ஒரு தெளிவான தகவலை அனுப்பி வைத்திருக்கிறார் .

AI கூட வேலை செய்யனும்..இல்லனா மூட்டைய கட்டலாம்! சத்ய நாதெல்லாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி!

நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது அந்த மாற்றத்திற்கு ஏற்ப நீங்கள் தகவமைத்துக் கொண்டு வேலை செய்ய முடிந்தால் வேலையில் இருங்கள் இல்லை என்றால் வேலையை விட்டு கிளம்புங்கள் என அதில் கூறியிருக்கிறாராம். பிசினஸ் இன்சைடர் இது தொடர்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலை படித்ததாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வரக்கூடிய சூழலில் டெக் நிறுவனங்கள் அனைத்தும் இந்த தொழில்நுட்பத்தை தங்களுடைய தொழில்களுக்கு எப்படி பயன்படுத்துவது அதன் மூலம் எப்படி லாபத்தை பெருக்குவது என்பது குறித்து தான் சிந்தித்து வருகின்றன . எனவே அண்மைக்காலமாக கூகுள், அமேசான் போன்ற பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை சக ஊழியர் போல கருதி வேலை செய்ய பழகிக்கொள்ள வேண்டும் என கூறி வருகின்றன.

Also ReadAI வளர்ச்சியால் பறிபோகும் வேலைவாய்ப்புகள், இத செஞ்சா தப்பிக்கலாம் என அறிவுரை கூறும் சுந்தர் பிச்சை..AI வளர்ச்சியால் பறிபோகும் வேலைவாய்ப்புகள், இத செஞ்சா தப்பிக்கலாம் என அறிவுரை கூறும் சுந்தர் பிச்சை..

சத்ய நாதெல்லா அனைத்து மூத்த அதிகாரிகளையும் தனிப்பட்ட முறையில் அழைத்து ஏஐ தொழில்நுட்பங்களோடு இணைந்து பணியாற்ற அவர்கள் தயாராக இருக்கிறார்களா இல்லையா என்பதையும் நிறுவனத்தின் ஏஐ வளர்ச்சிக்கு பொறுப்பேற்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா இல்லையா என்பதையும் கேட்கிறாராம். மூத்த நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் மிகத் தீவிரமாகவும் வேகமாகவும் ஏஐ தொழில்நுட்பத்தோடு வேலை செய்ய பழகி கொள்ள வேண்டும் என கூறி வருகிறாராம்.

Recommended For Youஇனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!

இதன் காரணமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரக்கூடிய மூத்த அதிகாரிகள் நிலையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் இனி தங்களுக்கு மலைபோல வேலை பணிச்சுமை ஏற்படப்போகிறது என தெரிவிக்கிறார்களாம் . ஒரு வேளை ஏஐ உடன் தகவமைத்து கொள்ள தயாராக இல்லை என்றால் அவர்கள் வேலையில் இருந்து ராஜினாமா செய்து கொள்ளலாம் என தெரிவிக்கிறாராம்.

அண்மையில் தான் சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கமர்ஷியல் பிசினஸ் பிரிவுக்கான தலைமை பொறுப்பிலிருந்து விலகி முழுவதுமாக ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். டேட்டா சென்டர்களை கட்டமைப்பது , புதிய ஏஐ தயாரிப்புகளை கொண்டு வருவது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறார்.

Share This Article English summary

Satya Nadella Pushes Top Brass to AI Focus or Pack Up

Microsoft CEO Satya Nadella has issued a direct ultimatum to top executives, demanding full commitment to the company’s aggressive AI transformation or departure. Story first published: Saturday, December 20, 2025, 16:12 [IST] Other articles published on Dec 20, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *