பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அரசு பணம்! எப்படி?

befunky-collage-2026-02-25t105052-162-1771996869

  வகுப்புகள்

பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அரசு பணம்! எப்படி?

Classroom oi-Pugazharasi S By Published: Wednesday, February 25, 2026, 10:52 [IST] Share This Article

பெண் குழந்தையை பெற்றுள்ள ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ஓடும் முதல் எண்ணம், என் மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும். அவளது படிப்புக்கும், திருமணத்திற்கு பணம் எப்படி சேர்ப்பது என்பது தான். உங்களின் இந்த நிதி சுமையை இப்போது அரசாங்கமும் கொஞ்சம் ஏற்றுக் கொள்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான்.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பிட்ட வயது வரும்போது உங்கள் மகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே லட்சக்கணக்கில் பணம் வந்து சேரும் அற்புதமான வாய்ப்புகள் இப்போது உள்ளன. இதற்கெல்லாம் நாம தகுதியானவர்களா? எப்படி விண்ணப்பிப்பது? இதோ முழு விவரங்கள்.

பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரும் அரசு பணம்! எப்படி?

மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டம், இன்று தாய்மார்களுக்கும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கும் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முதல் முறை தாயாகும் பெண்களுக்கு 5,000 ரூபாய் மற்றும் இரண்டாவது முறையாக பெண் குழந்தையைப் பெறுபவர்களுக்கு 6,000 ரூபாய் நேரடி நிதியுதவியாக வழங்கப்படுகிறது. அரசின் இந்த அன்பளிப்பை நீங்கள் எப்படிப் பெறுவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2017 முதல் புதிய வடிவில் செயல்பட்டு வரும் இத்திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொள்வதற்கும், பெண் குழந்தைகளின் பிறப்பை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் முறை தாயாகும் பெண்களுக்கு அரசு மொத்தம் 5,000 ரூபாய் வழங்குகிறது. இதில் 3,000 ரூபாய் கர்ப்பத்தை முறைப்படி பதிவு செய்யும் போது வழங்கப்படும். மீதமுள்ள 2,000 ரூபாய் குழந்தை பிறந்த பிறகு வழங்கப்படும்.
உச்சத்தை தொடும் தங்கம், வெள்ளி: அடுத்து என்ன நடக்கும்? இனிமேல் தங்கம் வாங்குவது கனவா?
இரண்டாவது உங்களுக்கு பிறக்கும் இரண்டாவது குழந்தை ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அரசு நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது.

இருப்பினும் இந்த திட்டத்தின் பலனைப் பெற முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் குறைந்தபட்சம் 19 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்தை தாண்டாமல் இருக்க வேண்டும். உங்களிடம் இ-ஷ்ரம் கார்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான பிபிஎல் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை அல்லது நீங்கள் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், எளிதில் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடையலாம்.

இந்த திட்டத்தில் இணைய குழந்தை பிறந்த 270 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நீங்களே ஆன்லைன் மூலம் https://pmmvy.wcd.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம். அப்படி இல்லையேல் உங்கள் வீட்டின் அருகில் உள்ள அங்கன்வாடி மையம் அல்லது அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றும் விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.

அரசு தரவுகளின் படி, இத்திட்டத்தின் மூலம் 4 கோடிக்கும் அதிகமான பெண்கள் பலனடைந்துள்ளனர். இத்திட்டமானது வெறும் நிதியுதவி மட்டுமல்ல, பெண் குழந்தைகள் குறித்து சமுதாயத்தின் கண்ணோட்டத்தை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது சிறிய தொகையாக தோன்றலாம். ஆனால் குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு இது பேருதவியாக இருக்கும்.

Share This Article English summary

how toclaim up to Rs.6,000 via the PMMVY scheme for mother and child welfare?

The PMMVY scheme offers Rs.5,000 for first-time mothers and Rs. 6,000 for second-time mothers if the child is a girl Story first published: Wednesday, February 25, 2026, 10:52 [IST] See More On: child, government schemes, education, savings, india Other articles published on Feb 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *