பான் கார்டு எண்கள் வெறும் ரேண்டம் எண்கள் அல்ல! அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ரகசியம் இருக்கு!

befunky-collage-2026-02-25t100337-198-1771994108

  செய்திகள்

பான் கார்டு எண்கள் வெறும் ரேண்டம் எண்கள் அல்ல! அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ரகசியம் இருக்கு!

News oi-Pugazharasi S By Published: Wednesday, February 25, 2026, 10:05 [IST] Share This Article

உங்கள் பான் கார்டை ஒரு நிமிடம் கையில் எடுத்துப் பாருங்கள். அதில் அச்சிடப்பட்டிருக்கும் அந்த 10 எழுத்துக்களும் எண்களும் ஏதோ எதேச்சையாக வரிசைப்படுத்தப்பட்டவை என்று தானே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக அப்படியில்லை. உண்மையை சொன்னால், உங்கள் பான் கார்டு என்பது வெறும் ஒரு அடையாள அட்டை அல்ல, அது உங்களை பற்றிய நிதி ரகசியங்களை சுமந்து நிற்கும் ஒரு டிஜிட்டல் ஜாதகம். அந்த 10 டிஜிட்டுகளை சரியாக டீகோட் செய்ய தெரிந்தால், ஒருவரின் பான் கார்டை பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஒரு தனி நபரா, ஒரு பெரும் தொழிலதிபரா அல்லது ஒரு அறக்கட்டளையா என்பதை ஒரு நொடியில் கண்டுபிடித்துவிட முடியும்.

பான் கார்டு எண்கள் வெறும் ரேண்டம் எண்கள் அல்ல! அதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு ரகசியம் இருக்கு!

வெறும் பிளாஸ்டிக் அட்டை தானே என்று நாம் சாதாரணமாக கடந்து போகும், அந்த 10 எழுத்துக்களுக்கு பின்னால் இருக்கும் ஆச்சரியமான உண்மைகளை தெரிந்து கொள்ளத் தயாரா? இதோ, உங்கள் பான் கார்டு சொல்லும் அந்த ரகசியங்கள்..

இன்றைய காலத்தில் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று. எந்தவொரு நிதி பரிவர்த்தனைக்கும் அவசியமான ஒன்று. அது வங்கி கணக்கு தொடங்குவதாக இருந்தாலும், ஏதேனும் சொத்து வாங்குவதாக இருந்தாலும், எல்லா இடங்களிலும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட முக்கியமான ஆவணத்தில் இருக்கும் அந்த 10 எழுத்துகள் கூறும் உண்மை என்ன என இதுவரை யோசித்திருக்கிறோமா என்றால், நிச்சயம் பலரும் இல்லை என்று தான் கூறுவோம்.

உங்கள் பான் கார்டில் உள்ள முதல் மூன்று எழுத்துக்கள் ஓரு அகர வரிசை தொடரைக் குறிக்கின்றன. இது AAA முதல் ZZZ வரையிலான ஏதோ ஒரு வரிசையாக இருக்கும். இது வருமான வரித் துறையால் ஒரு குறிப்பிட்ட முறைப்படி தேர்வு செய்யப்படுகிறது. இது உங்கள் தனிப்பட்ட தகவல்களோடு தொடர்பு இல்லாத ஒன்று. இருப்பினும் உங்கள் கார்டு எந்த சீரிஸில் வருகிறது என்பதை இது தான் தீர்மானிக்கிறது. உதாரணத்திற்கு ஒருவருடைய பான் எண் ABCPG5809L என்றால், அதில் ABC என்ற தொடர் குறியீட்டைக் குறிக்கிறது.
பான் – ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
பான் கார்டில் உள்ள நான்காவது எழுத்து முக்கியமான ஒன்று. இந்த ஒரு எழுத்தைக் கொண்டே, நீங்கள் தனி நபரா அல்லது நிறுவனமா அல்லது டிரஸ்டா என கண்டுபிடித்து விடலாம். உங்கள் பான் கார்டின் 4வது எழுத்து P என்று இருந்தால் நீங்கள் ஒரு தனிநபர் என அர்த்தம். இதுவே C எனில், அது நிறுவனம் என அர்த்தம். இதே F என்றால் அது பார்ம் என்று அர்த்தம். இதேபோல் மற்ற எழுத்துக்கள் பின்வரும் அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

A – Association of Persons ( நபர்களின் சங்கம்)
B – Body of Individuals
C – Company ( நிறுவனம்)
F – Firm ( நிறுவனம்/எல் எல் பி)
G – Government (அரசாங்கம்)
H – Hindu Undivided Family (HUF) (இந்து கூட்டு குடும்பம்)
L – Local Authority (உள்ளூர் அதிகாரம்)
J – Artificial Juridical Person ( நீதித்துறை நபர்)
T – Trust (அறக்கட்டளை)

உங்கள் பான் எண்ணில் உள்ள ஐந்தாவது எழுத்து, உங்களுடைய பர்ஸ்ட் நேமின் முதல் எழுத்தாக இருக்கும். உதாரணத்திற்கு Rahul Gupta என்ற பெயரில் 5வது எழுத்து G என இருக்கும்.
பான் கார்டின் ஆறாவது முதல் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் நான்கு எண்கள் (எடுத்துக்காட்டாக: ABCPG5809L என்பதில் உள்ள 5809) ஒரு தனித்துவமான வரிசை எண்களாகும். இவை 0001 முதல் 9999 வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை கணினி மூலம் ஒதுக்கப்படுபவை.

பான் கார்டின் கடைசி எழுத்து (எடுத்துக்காட்டாக: ABCPG5809L என்பதில் உள்ள L) ஒரு சரிபார்ப்பு எழுத்தாகும். இது ஒரு குறிப்பிட்ட கணித சூத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. உங்கள் பான் எண் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த இந்த கடைசி எழுத்து பயன்படுகிறது.

Share This Article English summary

Did you know your 10-digit PAN number is a secret code that reveals your financial identity and surname?

PAN card digits decode your identity, the fourth letter shows your status, the fifth reveals your surname, and others ensure security. Story first published: Wednesday, February 25, 2026, 10:05 [IST] See More On: pan card, பான் கார்டு Other articles published on Feb 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *