Breaking: கையில்இருக்கும் சில்லறை காசில் வெள்ளி முதலீடு! பேடிஎம்-மில் வெறும் ரூ.20இருந்தால் போதும்!

befunky-collage-2026-02-24t171912-787-1771933773

  பர்சனல் பைனான்ஸ்

கையில்இருக்கும் சில்லறை காசில் வெள்ளி முதலீடு! பேடிஎம்-மில் வெறும் ரூ.20இருந்தால் போதும்!

Personal Finance oi-Pugazharasi S By Published: Tuesday, February 24, 2026, 17:20 [IST] Share This Article

பொதுவாக தங்கம் அல்லது வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கையில் இருக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியுள்ளது பேடிஎம்.

2026-ன் டிஜிட்டல் முதலீட்டு யுகத்தில், சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் டிஜிட்டல் சில்வர் சேவிங்ஸ் (Digital Silver Savings) அம்சத்தை பேடிஎம் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி உங்கள் கையில் இருக்கும் வெறும் 20 ரூபாயை கொண்டு கூட தூய்மையான வெள்ளியை டிஜிட்டல் முறையில் வாங்கி சேமிக்கலாம். சந்தை நிலவரப்படி 99.9% தூய்மையான வெள்ளியை வாங்கும் இந்த வசதி, பாதுகாப்பான லாக்கர் வசதியையும் வழங்குகிறது. ஒரு டீ குடிக்க செலவிடும் சிறு தொகையை வைத்து இப்போது நீங்கள் ஒரு வெள்ளி முதலீட்டாளராக மாற முடியும். இதன் மூலம் வெள்ளி விலை உயரும்போது நீங்கள் லாபத்தையும் ஈட்டலாம்.

கையில் இருக்கும் சில்லறை காசில் வெள்ளி முதலீடு! பேடிஎம்-மில் வெறும் ரூ.20இருந்தால் போதும்!

ஏற்கனவே டிஜிட்டல் தங்கம் (Digital Gold) திட்டத்தில் வெற்றி கண்ட பேடிஎம் நிறுவனம், இப்போது அதைப்போலவே வெள்ளியிலும் முதலீடு செய்யும் வசதியை தனது ஆப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாமானியர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இந்த டிஜிட்டல் சில்வர் கொண்டு வரப்பட்டுள்ளது.

பேடிஎம் ஆப்பில் Paytm Silver என்று தேடுவதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம். இதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை உள்ளிட்டு, யுபிஐ, நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம். இதற்கான உறுதிப்படுத்தல் தகவல் உங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் அனுப்பப்படும் என பேடிஎம் அறிக்கையானது தெரிவித்துள்ளது.

இந்த டிஜிட்டல் முதலீட்டு திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு வெறும் 20 ரூபாய் முதல் நீங்கள் வெள்ளியை வாங்கத் தொடங்கலாம். இந்த வெள்ளி MMTC-PAMP (மத்திய அரசின் MMTC மற்றும் PAMP நிறுவனங்களின் கூட்டு முயற்சி) மூலம் பெறப்படுகிறது. நீங்கள் வாங்கும் வெள்ளி, காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான லாக்கர்களில் (Insured Vaults) சேமிக்கப்படும்.
பான் – ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
நீங்கள் வெள்ளியின் சந்தை விலையை கண்காணித்து, சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலை ஆப்பில் நேரலையாக காட்டப்படும். நீங்கள் விரும்பும் போது அன்றைய விலைக்கு வெள்ளியை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். இதற்கு கூடுதல் கட்டணங்கள் இல்லை. இந்த திட்டத்தில் வெள்ளி வாங்கும் போது செய்கூலி கிடையாது. வரி விவரங்கள் மட்டும் பணம் செலுத்தும் முன் தனித் தனியாக காட்டப்படும்.ஆக நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு எவ்வளவு வரி என அனைத்து விவரங்களையும் பார்த்துக் கொள்ள முடியும். இது டிஜிட்டல் வடிவில் இருப்பதால் தரம் பிரச்சனை இல்லை. பாதுகாப்பானதும் கூட. ஆக சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How can I invest in silver on Paytm starting from just Rs. 20?

Paytm now offers 99.9% pure digital silver from MMTC-PAMP starting at Rs.20, with zero making charges and insured vault storage. Story first published: Tuesday, February 24, 2026, 17:20 [IST] See More On: paytm, silver, investment, பேடிஎம், வெள்ளி Other articles published on Feb 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *