விவசாயிகளுக்கு ஹோலி கிப்ட்: ரூ. 2,000 ரெடி! 22-வது தவணை எப்போது தெரியுமா?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 11:06 [IST] Share This Article
மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க போகிறது. அண்மையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 5,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை நாம் அறிவோம். அந்த மகிழ்ச்சி அலை ஓய்வதற்குள், இப்போது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது.
பெண்களுக்கு கிடைத்த அந்தப் பேருதவியைப் போலவே, வெயிலிலும் மழையிலும் நமக்காக உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசின் பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் 22-வது தவணைத் தொகை ரூ. 2,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.

பண்டிகை காலங்களில் கை செலவுக்கு பணம் கிடைப்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும். தமிழக மகளிர் பெற்ற அந்த மகிழ்ச்சியை, இப்போது நம் ஊர் விவசாயிகளும் தங்கள் வங்கிக் கணக்கில் பெறப் போகிறார்கள். அந்தப் பணம் எப்போது வரும்? மற்ற முக்கிய அம்சங்களை விரிவாக பார்ப்போம்.
மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 22-வது தவணை தொகையை நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஹோலி பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த தொகை அதற்கு முன்பே வங்கி கணக்கில் வந்து சேரும் என நம்புகின்றனர். அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த தரவுகளின் படி, பிப்ரவரி கடைசி வாரத்தில் பணம் வரவு வைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. கடந்த பிப்ரவரி 2023ல் பிப்ரவரி 27ல் வழங்கப்பட்டது. இதே 2024ல் பிப்ரவரி 28ல் வழங்கப்பட்டது. 2025; பிப்ரவரி இறுதியில் வழங்கப்பட்டது. இந்த சூழலில் நடப்பு ஆண்டில் இன்னும் சில தினங்களில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விவசாயிகள் அறுவடை பணிகளுக்குத் தயாராகி வருகின்றனர். அதே சமயம் ஹோலி மற்றும் ஈத் போன்ற பண்டிகைகளும் நெருங்குவதால், இந்த 2,000 ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் பொருளாதாரச் சுமையை குறைக்க பெரிய உதவியாக இருக்கும்.
Also Read
பான் – ஆதார் இன்னும் லிங்க் பண்ணலயா? ஆன்லைனில் ஈஸியா லிங்க் செய்வது எப்படி?
இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6,000 (மூன்று தவணைகளாக ரூ. 2,000 வீதம்) நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. அதற்கு தகுதியானவர்கள் ஏற்கனவே கட்டாயம் இ-கேஒய்சி (e-KYC) மற்றும் பதிவை முடித்திருக்க வேண்டும். மேலும் பிப்ரவரி 1, 2019-க்கு பிறகு நிலம் வாங்கியவர்களுக்கு அல்லது ஒரே குடும்பத்தில் பலர் பதிவு செய்திருந்தால் பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். விவசாயிகள் தங்கள் தவணை குறித்த சமீபத்திய தகவல்களை அறிய pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
Share This Article English summary
Holi Gift for Farmers? Expect Rs.2,000 as PM Kisan 22nd Installment Soon
Eligible farmers may receive the Rs. 2,000 PM Kisan 22nd installment before Holi, providing timely financial relief for upcoming festive celebrations. Story first published: Tuesday, February 24, 2026, 11:06 [IST] See More On: pm kisan samman nidhi Other articles published on Feb 24, 2026
