தங்கம் விலை திடீர் உயர்வு!! இந்த வாரம் முழுவதும் விலை உயர்வில் தான் இருக்குமா?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, February 23, 2026, 10:02 [IST] Share This Article
இந்தியாவில் தங்கம் விலை சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தங்கம் விலை போக்கு எப்படி இருக்கிறதோ பெரும்பாலும் அந்த வாரம் முழுவதும் அதே போக்கில் தான் இருக்கும். அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்ததா அல்லது உயர்ந்ததா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 14,680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே இன்று கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. இன்று சென்னையில் சில்லறை வணிகத்தில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 14,860 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் நேற்று 1,17,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது, அதுவே இன்று 1440 ரூபாய் விலை உயர்வு கண்டு 1,18,880 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 148,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்னையில் தொடர்ந்து இரண்டு வர்த்தக நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சனிக்கிழமை கிராமுக்கு 260 ரூபாயும் இன்று கிராமுக்கு 180 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்திருக்கிறது. அதாவது இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 440 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3520 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரையில் நேற்று 16,015 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 196 ரூபாய் விலை உயர்ந்த கண்டு 16,213 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை நேற்று 1,28,120 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கம் இன்று 1568 ரூபாய் உயர்ந்து 1,29, 688 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 12,720 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 1,280 ரூபாய் விலை உயர்ந்து 1,01,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Also Read
தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?
தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக சென்னையில் வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. சனிக்கிழமை அன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 290 ஆக விற்பனையானது. அதுவே இன்றைய தினம் ஒரு கிராமுக்கு மேலும் 10 ரூபாய் உயர்ந்து 300 ரூபாயை தொட்டிருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 10,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended For You
ஆனந்த் ஸ்ரீனிவாசன் பகீர்.. தங்கம் விலை 1 கிராம் ரூ.1 லட்சம் வரை உயரும்.. பீதியில் மக்கள்.. ஆனா ஒரு டிவிஸ்ட்!!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்தது இந்தியாவிலும் தங்கம் வெள்ளி விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு விலை ஒரு அவுன்ஸ் இன்று 104 டாலர்கள் உயர்ந்து 5162 டாலர்களுக்கும் வெள்ளியின் விலை 5 டாலர்கள் உயர்ந்து 87 டாலர்களுக்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு எதிராக வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதனை அடுத்து டிரம்ப் அடுத்தடுத்து வெளியிட்ட வரி அறிவிப்புகளுமே தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு காரணம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Gold and Silver rate in Chennai sees sudden increase today
Gold and Silver rate in Chennai sees sudden increase as the spot gold prices increase after tariff tension in America. Here are the details. Story first published: Monday, February 23, 2026, 10:02 [IST] See More On: gold, silver, investment, தங்கம், வெள்ளி Other articles published on Feb 23, 2026
