தங்கம்: பழசுக்கு புதுசு வாங்கலாமா? பணமாக மாற்றி கொள்ளலாமா? எது பெஸ்ட் ?
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 17:30 [IST] Share This Article
ஆபரண தங்கம் விலை சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்துவிட்ட சூழலில் பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் கைகளில் இருக்கக்கூடிய பழைய தங்க நகைகளை கொடுத்து தான் புதிய தங்கத்தை வாங்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார்க. அதாவது புதிதாக 1.25 லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகையை வாங்குவது என்பது பெரும்பாலான இந்திய குடும்பங்களுக்கு முடியாத ஒரு காரியம்.
எனவே கையில் இருக்கும் தங்கத்தை பாதுகாத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். வீடுகளில் திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருப்பவர்கள் கூட முடிந்த அளவு தங்கத்தை வாங்குவதை தவிர்க்க தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு மாற்றாக தங்கள் கைவசம் இருக்கக்கூடிய தங்கத்தை கொடுத்து விட்டு அதற்கு புதிய தங்கத்தை வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு பழைய தங்கத்தை கொண்டு புதிதாக நகை வாங்க திட்டமிடும்போது சில விஷயங்களை ஆய்வு செய்வது அவசியம்.
Photo Credit: Ai generated
பழைய தங்க நகையை விற்பனை செய்யும் போது அதனை பணமாக பெறுவது சிறந்ததா அல்லது அப்படியே அதற்கு மாற்றாக புதிய நகையை வாங்குவது லாபம் தருமா என்ற குழப்பம் மக்களிடையே இருக்கிறது. பழைய தங்க நகையை மாற்றப் போகிறீர்கள் அல்லது விற்பனை செய்யப் போகிறீர்கள் என்றால் முதலில் அதன் தூய்மை தன்மையை தெரிந்து கொள்வது நல்லது. சமீப ஆண்டுகளில் வாங்கிய தங்கம் என்றால் அதில் ஹால்மார்க் முத்திரை இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில் நகை கடைகள் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கி கொள்ளும் ஹால் மார்க் இல்லை என்றால் குறைந்த கட்டணம் தான் தருவார்கள்.
பழைய நகையை கொண்டு போன உடனேயே அங்கு இருக்கக்கூடிய மதிப்பீட்டாளரிடம் அனுப்புவார்கள். அவர்கள் தங்க நகையின் தரம், அது ஹால் மார்ட் கொண்டதா, எடை என்ன என்பதை கணக்கிடுவார்கள். இதனை அடுத்து கற்கள் இருந்தால் அது கழித்தது போக தங்கம் எவ்வளவு கிடைக்கும் இதனை உருக்கும் போது எவ்வளவு சேதாரம் ஏற்படும் இதனை உருக்குவதற்கான கட்டணம் என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் நிர்ணயம் செய்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கழித்த பிறகு தான் உங்களுக்கு இந்த நகைக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை தீர்மானம் செய்வார்கள்.

இதனை எஸ்டிமேஸ் செய்து தெளிவாக ஒரு தாளில் எழுதி தந்துவிடுவார்கள். பொதுவாக நீங்கள் நகை கடைக்கு சென்று உங்களுடைய பழைய நகையை கொடுத்து பணமாக கேட்கிறீர்கள் எனும் போது தங்கத்தின் மதிப்பை விட 20% வரை குறைவாகவே பணம் தருவார்கள். 22 கேரட் தங்கம் இன்று( 1 கிராம் விலை ரூ.14,680) 10 கிராமை கொடுத்து பணமாக கேட்டால் உங்களுக்கு 1.35 லட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
Also Read
Weekend-இல் தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இத முதல்ல படிச்சிட்டு முடிவெடுங்க!!
அதுவே நீங்கள் நகையாக மாற்றி கொண்டால் 1.45 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட நகையை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே பழைய நகையை கொண்டு பணமாக பெறாமல் புதிதாக நகை வாங்குவது தான் நமக்கு லாபம். ஆனாலும் புதிய நகை வாங்கும் போது அதன் எடை செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி ஆகியவை எல்லாம் சேர்ந்து எவ்வளவு கட்டணம் வருகிறது, பழைய நகைக்கு கடை கொடுக்கும் பணத்தை விட கூடுதலாக எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கணக்கிடுவது நல்லது.
Recommended For You
நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?
சில கடைகளில் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 11 மாதம் கழித்து அதனை புதிய நகையாக வாங்கிக் கொள்ளும் திட்டங்கள் இருக்கின்றன. அந்த வகையில் பார்க்கும்போது நாம் 10 பவுன் நகையை கொடுக்கிறோம் என வைத்துக் கொண்டால் 11 மாதங்கள் கழித்து செய்கூலி , சேதாரம் எதுவும் இல்லாமல் ஜிஎஸ்டி மட்டும் செலுத்தி பத்து பவுன் நகையை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது உங்களுக்கு செய்கூலி சேதாரத்திலேயே பல ஆயிரங்களை சேமித்து தந்து பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். ஆனால் உங்களுடைய நகை அந்த நகைக்கடையிடம் 11 மாதங்களுக்கு இருக்கும். இது நம்பிக்கை அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படக் கூடிய திட்டம் என்பதால் இதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
தற்போது தங்கம் இருக்கக்கூடிய விலையில் பழைய தங்கத்தை விற்பனை செய்யாமல் இருப்பதுதான் சாமர்த்தியம். வேறு வழியே இல்லை எனும் போது தங்கத்தை விற்காமல் அதற்கு மாற்றாக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் வாங்கலாம். ஆனால் ஒருபோதும் கையில் இருக்கக்கூடிய தங்கத்தை விற்பனை செய்யாதீர்கள் புதிதாக அதை உங்களால் வாங்கவே முடியாத நிலை உண்டாகும்.
Share This Article English summary
Gold jewel tips: Exchanging your old gold for Jewelry Vs Cash – which is profit?
Exchanging old gold for new jewelry typically maximizes profit over selling for cash. So if you are planning to exchange your old gold jewels please read this before taking decision. Story first published: Saturday, February 21, 2026, 17:30 [IST] See More On: gold, hallmark, exchange, தங்கம், ஹால்மார்க் Other articles published on Feb 21, 2026
