ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 19, 2026, 12:02 [IST] Share This Article
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு எப்போதுமே தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஓசூர் நகரம் தற்போது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருக்கிறது. 1980 களில் இருந்தே ஓசூர் நகரம் டிவிஎஸ், அசோக் லேலாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஓசூரின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக tata நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை, ஏதர், ஓலா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஓசூரில் தான் அமைந்திருக்கின்றன. இது தவிர ஓசூர் நகரம் ஏற்கனவே 3 ஆயிரத்துக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

பொருளாதார ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் சிறந்த வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக ஓசூர் மாறி இருக்கிறது. எனவே தான் தமிழ்நாடு அரசு பல்வேறு பிரத்தியேகமான திட்டங்களை தொடர்ச்சியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஐடி வேலைகளை ஓசூரில் உருவாக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.
தரைதளத்தோடு 9 தளங்கள் கொண்டதாக 5,50,000 சதுர அடி பரப்பளவில் அத்திவாடி மைதானத்திற்கு அருகே இந்த டைடல் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்காக ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட நிலையில் Sathlokar synergys, r Synergys, GHV-MIPL JV ,Scon Projects ஆகிய மூன்று நிறுவனங்கள் ஓசூர் டைடல் பூங்காவை கட்டுவதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளனர்.
Also Read
ஓசூரை நோக்கி படையெடுக்கும் கர்நாடக நிறுவனங்கள்!! ரூ.4000 கோடி முதலீட்டால் வாயடைத்து போன கர்நாடகா!!
மூன்று நிறுவனங்களில் கூடிய விரைவில் ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு ஓசூர் டைடல் பூங்காவை கட்டமைக்கும் ஒப்பந்தம் என்பது வழங்கப்பட இருக்கிறது. இது இறுதி செய்யப்பட்டு விட்டால் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே கூட ஓசூர் டைடல் பூங்கா கட்டமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது இந்த பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விடும். எனவே தான் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே ஓசூர் டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்த வேண்டும் என அரசு கவனம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் தான் தமிழ்நாடு அரசு ஓசூர் அரசு மருத்துவமனையை மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது ஒரு புறம் இருக்க ஓசூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தப் போகிறது. தமிழ்நாடு அரசு தனியார் பங்களிப்போடு ஓசூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்காக ஒப்பந்தபுள்ளி கோரி இருக்கிறது.
Recommended For You
PF கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்!! அடுத்த மாசம் அக்கவுண்ட்டை தேடி வரப் போகும் பணம்!!
திருச்சி, நாமக்கல் , ஓசூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களின் பேருந்து நிலையங்களை தனியார் பங்களிப்போடு இணைந்து மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்கான டென்டர் தற்போது கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய பேருந்து நிலையம் , டைடல் பூங்கா என ஓசூரின் அடையாளமே மாற இருக்கிறது. இது மட்டுமில்லாமல் வர்த்தக மையம், அறிவுசார் வழித்தடம், விமான நிலையம் என அடுத்தடுத்த திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
Share This Article English summary
Hosur mega infra boost: From Tidel Park to New Bus Stand
Very soon the industrial city Hosur to get new landmarks with the Tender process of Tidel park is in progress, government now plans to redevelop the Hosur bus stand via PPP model. Story first published: Thursday, February 19, 2026, 12:02 [IST] See More On: hosur, tidel park, ஓசூர், டைடல் பார்க் Other articles published on Feb 19, 2026
