அடுத்த தைவானாக மாறும் தமிழ்நாடு!! செமி கண்டக்டர் உற்பத்திக்கு சிறப்பு இயக்கம்!! – Allmaa

semicon-1771311531

  செய்திகள்

அடுத்த தைவானாக மாறும் தமிழ்நாடு!! செமி கண்டக்டர் உற்பத்திக்கு சிறப்பு இயக்கம்!!

News oi-Devika Manivannan By Published: Tuesday, February 17, 2026, 12:30 [IST] Share This Article

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026 -2027 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தமிழ்நாடு அரசு இதுவரை மேற்கொண்டிருக்கும் சாதனை திட்டங்களை பட்டியலிட்ட அவர் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு ஏதுவாக செமி கண்டக்டர் துறையில் தீவிர கவனம் செலுத்தப் போகிறது என கூறினார்.

இதற்காக தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030 என அறிவித்தார். கூறினார் ஐந்தாண்டு காலம் கொண்ட இந்த திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என கூறினார். செமி கண்டக்டர் வடிவமைப்பு உற்பத்தி மற்றும் சோதனையை மேம்படுத்துவதற்கான பணிகள் இந்த இயக்கத்தின் கீழ் தொடங்கப்படும் என அறிவித்தார்.

அடுத்த தைவானாக மாறும் தமிழ்நாடு!! செமி கண்டக்டர் உற்பத்திக்கு சிறப்பு இயக்கம்!!

தமிழ்நாட்டினை மின்னணு மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தியின் உலகளாவிய மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுதான் தமிழ்நாடு அரசு செமி கண்டக்டர் இயக்கத்தையே அறிவித்திருக்கிறது. ஐந்தாண்டு காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் இந்த திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை , கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக்கான உயர்திறன் மையங்களும் சிப் உற்பத்தி செய்வதற்கான தொழில் பூங்காக்களும் நிறுவப்பட உள்ளன.

இந்த பிரிவுக்கு ஏற்ற வகையில் வேலைக்கு இளைஞர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவதற்கும் இதில் கவனம் செலுத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாடு செமி கண்டக்டர் துறையில் முன்னணி மாநிலமாக மாறும்.

Also Readபட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை- டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!பட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை- டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

தற்போது உலகம் முழுவதுமே செமி கண்டக்டர்களுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது. நாம் பயன்படுத்தக்கூடிய அனைத்து நவீன தொழில்நுட்பங்களுக்கும் சிப்கள் தேவை. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பத்திற்கும் சிப்கள் தான் அடிப்படை. தைவான் மட்டும் தான் செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. இது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறை என்பதால் மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்துகின்றன.

Recommended For YouTamil Nadu Budget 2026: மகளிர் உரிமை தொகை: பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட குட் நியூஸ்!!Tamil Nadu Budget 2026: மகளிர் உரிமை தொகை: பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட குட் நியூஸ்!!

தமிழ்நாடு அரசும் செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு இயக்கத்தையே அறிவித்துள்ளது. தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030 எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான செயல் திட்டத்தின் அடிப்படையில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மேலும் ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து சென்னை தரமணி பகுதியில் மேம்பட்ட செமி கண்டக்டர் தொழில்நுட்ப மையம் மற்றும் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.

Share This Article English summary

Tamilnadu Semiconductor Mission 2030 at Rs.500 cr: Thangam thennarasu at interim budget

Tamilnadu Semiconductor Mission-2030 is strategic 5-year roadmap being implemented at an estimated cost of Rs 500 crore announces Thangam thennarasu in Interim budget. Story first published: Tuesday, February 17, 2026, 12:30 [IST] See More On: Tamilnadu budget 2026, TN budget 2026, தமிழ்நாடு பட்ஜெட் 2026, semiconductor, செமி கண்டக்டர் Other articles published on Feb 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *