2-3 கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? ஜாக்கிரதை..! உங்களை தேடி வரும் பிரச்சனை..!

befunky-collage-2026-02-12t132046-982-1770882695

  பர்சனல் பைனான்ஸ்

2-3 கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? ஜாக்கிரதை..! உங்களை தேடி வரும் பிரச்சனை..!

Personal Finance oi-Pugazharasi S By Updated: Thursday, February 12, 2026, 13:56 [IST] Share This Article

பர்சை திறந்தால் வித விதமான வண்ணங்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிரெடிட் கார்டுகள்.. ஒரு கார்டில் ஆஃபர் இல்லை என்றால் என்ன, இன்னொரு கார்டு இருக்கிறதே என்கிற மிதப்பு. இன்றைய காலத்தில் பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதே ஒரு கெளரவமாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த மினுமினுக்கும் பிளாஸ்டிக் அட்டைகளுக்கு பின்னால் உங்கள் வாழ்நாள் சேமிப்பையும், வருங்கால கனவுகளையும் சிதைக்கக்கூடிய ஒரு பேராபத்து ஒளிந்திருப்பது உங்களுக்கு தெரியுமா?

2-3 கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? ஜாக்கிரதை..! உங்களை தேடி வரும் பிரச்சனை..!

நீங்கள் செய்யும் ஒரு சிறிய சுவைப்பிங் அல்லது ஒரு நாள் தாமதமாகும் பணம் செலுத்துதல் கூட, உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கலாம். சிபில் ஸ்கோர் குறைந்தால், அவசர காலத்தில் நீங்கள் வங்கி கதவை தட்டும்போது கடன் தர முடியாது என்று முகத்தில் அடித்தார் போல நிராகரிக்கப்படும் அந்த வலி மிக கொடுமையானது. இலவசங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்ட்டுகள் என்ற பெயரில் வங்கிகள் விரிக்கும் வலையில் விழுந்து, உங்கள் நிதி சுதந்திரத்தை தொலைக்க போகிறீர்களா? பல கார்டுகளை வைத்திருப்பவர்கள் தெரியாமல் செய்யும் தவறுகள் என்னென்ன? உங்கள் சிபில் ஸ்கோரை எப்படி காப்பாற்றுவது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள்!
கிரெடிட் கார்டுகள் என்பது இன்றைய காலத்தில் வெறும் பணம் செலுத்தும் கார்டு மட்டுமல்ல. அவை ஒரு முக்கியமான நிதி மேலாண்மை கருவியாகும். ஆன்லைன் ஷாப்பிங் முதல் அவசர தேவை வரையில் கைகொடுக்கும் ஆபத்பாந்தவன். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை பயன்படுத்துவது என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. ஆனால் நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பதைப் போல, கிரெடிட் கார்டிலும் எந்த அளவுக்கு நன்மைகள் உண்டோ, அதே அளவுக்கு தீமைகளும் உண்டு.

Also Readகேரளாவில் புது கிரெடிட் கார்டு அறிமுகம் செய்த பிரதமர் மோடி.. யாருக்கு கிடைக்கும்? நன்மை என்ன? - முழு விபரம்கேரளாவில் புது கிரெடிட் கார்டு அறிமுகம் செய்த பிரதமர் மோடி.. யாருக்கு கிடைக்கும்? நன்மை என்ன? – முழு விபரம்

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம்?
கிரெடிட் கார்டில் பல நன்மைகள் இருந்தாலும், பல கார்டுகள் இருக்கும் போது அதற்கான பணம் செலுத்த வேண்டிய நாட்களும், வேறு வேறு நாட்களில் வரலாம். அதை நினைவில் கொள்வது கடினம். ஒரே ஒரு கார்டு என்றால் கூட, சிலர் தேதியை மறந்து விடுகின்றனர். அப்படி இருக்கும்போது பல கார்டுகளுக்கும் நினைவில் வைத்திருப்பது சாத்தியமில்லாத ஒன்று. ஒரு வேளை ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும் கூட, அதற்கு அபராதம் என்பதை தாண்டி, சிபில் ஸ்கோரும் மோசமாக அடி வாங்கும்.

சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருப்பதால், குறைந்தபட்ச தொகையை கட்டலாம் என நினைக்கிறார்கள். அதுவே உங்களை வேறொரு கடன் சுழலில் சிக்க வைத்து விடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல கார்டுகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தவறு செய்யும் இடம் இது தான். இதை தவிர்க்க உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாக கடன் தொகை கழிக்கும் வகையில் செய்யலாம். ஆனால் அதற்கான பணத்தை முன்கூட்டியே போட்டு வைத்திருக்க வேண்டும்.

Recommended For Youபூமிக்கு அடியில் 4 கி மீ! ஆச்சரியப்படுத்தும் உலகின் ஆழமான சுரங்கம்- வருஷத்துக்கு 8,000 கிலோ தங்கம்!பூமிக்கு அடியில் 4 கி மீ! ஆச்சரியப்படுத்தும் உலகின் ஆழமான சுரங்கம்- வருஷத்துக்கு 8,000 கிலோ தங்கம்!

எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள்?
சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கார்டுகள் வைத்திருந்தாலும் கூட, அனைத்தையும் சேர்த்து, 30% மேல் கடன் பயன்படுத்தினால் வங்கிகள் உங்களை கடன் பசி கொண்டவராகவே பார்க்கும். இதுவும் உங்கள் சிபில் ஸ்கோர் குறைய வழிவகுக்கலாம்.

மேலும் ஆண்டு கட்டணம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். சிலர் ஆரம்பத்தில் கட்டணம் இல்லாமல் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் இரண்டாவது ஆண்டில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டும். ஆக அதையும் கவனத்தில் கொள்வது நல்லது. ஏனெனில் பல கார்டுகளுக்கும் செலுத்தும் போது, அதுவே கணிசமான நிதியை உங்கள் சேமிப்பில் ஆக்கிரமித்துக் கொள்ளும்.

எப்படி கையாள்வது?
பொதுவாக கார்டுகளுக்கான பேமெண்டை தவறாமல் செய்ய ஆட்டோ பேமெண்ட் மூலமாக செலுத்தும் வசதியை செய்து கொள்ளலாம். இது உங்கள் கிரெடிட் கார்டு தவணையை தவறாமல் செலுத்த உதவும். அதோடு ஒவ்வொரு கார்டையும் ஒரு செலவுக்கு என பிரித்து செலவு செய்யலாம். உதாரணத்திற்கு மளிகை செலவுக்கு என ஒன்று. எரிபொருள் செலவுக்கு என ஒன்று பிரித்து செய்யலாம். மேலும் கட்டணமில்லாமல் கிடைக்கிறது என சகட்டுக்கு கார்டுகளை வாங்காமல், தேவைக்கு மட்டும் வாங்கி பயன்படுத்தலாம்.

Share This Article English summary

Using Multiple Credit Cards? Your CIBIL Score Could Be at Risk

Having many credit cards offers more rewards but requires strict management. Missing payments or high spending can damage your CIBIL score and hurt your future loans. Story first published: Thursday, February 12, 2026, 13:21 [IST] See More On: credit card, cibil score, கிரெடிட் கார்டு, சிபில் ஸ்கோர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *