தங்கம் விலை திடீர் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி! எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, February 12, 2026, 10:36 [IST] Share This Article
தங்கம் எப்போதுமே பாமர மக்களின் பாதுகாப்பு பெட்டகம், நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கை.. ஆனால் கடந்த சில மாதங்களாக தங்கம் காட்டி வரும் வேகம், நகை பிரியர்களை திகைக்க வைத்துள்ளது. இன்றைய விலை நாளைக்கு இல்லை என்கிற ரேஞ்சில் ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கத்தின் விலை, 2026-ல் ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை தாண்டி காணப்படுகிறது. இந்த விலையானது நடப்பு ஆண்டு இறுதிக்குள் 1.5 லட்ச ரூபாய் என்ற இலக்கை தொட்டு விடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இன்று (பிப்ரவரி 12, 2026) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து, ஒரு கிராம் சுமார் 14,600-க்கும், ஒரு சவரன் 1,16,800-ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இது தற்காலிகமான சரிவாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார பதற்றங்கள், மத்திய வங்கிகளின் தங்கம் சேமிப்பு மற்றும் டாலரின் மதிப்பு சரிவு என பல காரணங்களால் தங்கத்தின் மினுமினுப்பு குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இந்த விலை ஏற்றம் ஒரு தற்காலிகமான ஒன்றா அல்லது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த வாய்ப்பா? இன்றைய நிலவரம் மற்றும் நிபுணர்களின் அதிரடி கணிப்புகள் என்ன சொல்கின்றன? விரிவாக பார்ப்போம்.

குறுகிய கால நிலவரம்?
நடப்பு வாரத்தில் தங்கத்தின் விலையை பார்க்கும்போது ஒரு இழுபறியான நிலையே காணப்படுகிறது. கடந்த வாரம் எட்டிய உச்சத்தில் இருந்து சரிந்த தங்கம் விலையானது, தற்போது ஏற்றம் காண போராடி வருகிறது. இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் அதன் முக்கிய உளவியல் எல்லையான 5,000 டாலர்களுக்கு கீழாகவே சரிந்து காணப்படுகிறது. இருப்பினும் மீண்டும் அந்த எல்லையை தாண்டி மேலே செல்லவும் போராடி வருகிறது. இருப்பினும் சந்தையை மேல் நோக்கி இழுத்து செல்லும் அளவுக்கு தற்போது புதிய காரணிகள் ஏதும் இல்லாத நிலையில். ஒரு ஒருங்கிணைந்த கட்டத்திற்குள்ளேயே காணப்படுகிறது.
இதற்கு மற்றொரு முக்கிய காரணியும் உண்டு. அது கடந்த சில வாரங்களாகவே பதற்றத்தில் இருந்து வந்த பங்குச் சந்தைகள், தற்போது தான் பார்முக்கு வந்துள்ளன. இந்த சூழலில் முதலீட்டாளர்கள் அதிக லாபம் கொடுக்கும் பங்குச் சந்தையின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பியுள்ளனர். இதனிடையே தான் தங்கத்தின் மீது ஆர்வம் குறைந்துள்ளது. இது விலை அழுத்தத்தில் இருக்கவும் வழிவகுத்துள்ளது.
விலை சரிவும் அதிகமில்லையே ஏன்?
பலருக்கும் தோன்றலாம், தங்கம் விலையானது பெரிய அளவில் சரியவும் இல்லையே என்று. ஏனெனில் தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பானது பலவீனமாக காணப்படுவது தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாமல் பாதுகாக்கிறது. அமெரிக்க பத்திரங்களின் வருமான விகிதங்களும் குறைந்துள்ளது, தங்கத்தை பெரிய அளவில் சரிய விடாமல் தடுத்து வைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தங்கம் விலையானது குறையும் போதெல்லாம் வாங்க முதலீட்டாளர்கள் தயாராக உள்ள நிலையில், விலையானது குறைய வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு வலுவாக இருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 5,000 டாலருக்கு மேலாகவே இருக்கும் பட்சத்தில், அது ஆபரண தங்கம் விலையும் அதிகரிக்க வாய்ப்பளிக்கலாம். இது அடுத்ததாக சவரன் 1.5 லட்சம் ரூபாய் என்ற இலக்கை நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.
எப்படி இருப்பினும் குறுகிய காலத்தில் அமெரிக்காவின் வரவிருக்கும் முக்கிய தரவுகள் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதன் தாக்கமே வரும் நாட்களில் தங்கம் விலையில் எதிரொலிக்கும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், எந்த முக்கிய காரணிகளும் மாறிவிடவில்லை என நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Gold Price Outlook 2026: Bullion battles near $5,000 as market eyes next big breakout
Gold remains range bound near $5,000 as a weak US Dollar offsets surging equities. Strong institutional buying at lower levels suggests the bullish rally could soon resume. Story first published: Thursday, February 12, 2026, 10:36 [IST] See More On: gold, தங்கம் Other articles published on Feb 12, 2026
