PPF vs SIP: வருடம் ரூ. 1,11,111 முதலீடு – 15 ஆண்டுகளில் கல்லா கட்ட போவது எது? நீங்களே பாருங்க!

befunky-collage-2026-02-10t103331-344-1770699851

  பர்சனல் பைனான்ஸ்

PPF vs SIP: வருடம் ரூ. 1,11,111 முதலீடு – 15 ஆண்டுகளில் கல்லா கட்ட போவது எது? நீங்களே பாருங்க!

Personal Finance oi-Pugazharasi S By Published: Tuesday, February 10, 2026, 10:34 [IST] Share This Article

சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு.. நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வெறும் உண்டியலில் சேமிக்காமல், அதை நமக்காக உழைக்க வைப்பது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில், நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பமான முதலீடான பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் இன்றைய இளைய தலைமுறையின் ஹாட் டாப்பிக்கான எஸ் ஐ பி (SIP) ஆகிய இரண்டுக்கும் இடையே எப்போதுமே ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டே இருக்கிறது.

மேற்கண்ட திட்டங்களில் ஆண்டுக்கு சராசரியாக 1,11,111 ரூபாய், அதாவது மாதத்திற்கு சுமார் 9,259 ரூபாய் முதலீட்டை, அடுத்த 15 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்தால், உங்கள் கையில் கிடைக்கப்போகும் தொகை எவ்வளவு? ஒரு பக்கம் அரசாங்கத்தின் முழு பாதுகாப்புடன் கூடிய உறுதி அளிக்கப்பட்ட வட்டி, மறுபக்கம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் எகிறிப் பாயும் லாபம்.. இந்த இரண்டில் 15 வருடம் கழித்து உங்கள் கனவு இல்லத்தையோ அல்லது பிள்ளைகளின் படிப்பையோ நிஜமாக்கப்போவது எது? பாதுகாப்பான PPF சிறந்த முதலீடா அல்லது வேகம் காட்டும் SIP சிறந்ததா, வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

PPF vs SIP: வருடம் ரூ. 1,11,111 முதலீடு - 15 ஆண்டுகளில் கல்லா கட்ட போவது எது? நீங்களே பாருங்க!

எது பெஸ்ட்?

எதிர்கால தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்க விரும்பும் பலருக்கும் இருக்கும் பெரிய குழப்பம், பாதுகாப்பான அரசு திட்டமான பிபிஎஃப்-ல் முதலீடு செய்வதா அல்லது அதிக லாபம் தரக்கூடிய எஸ்ஐபி-ல் முதலீடு செய்வதா? இந்த இரண்டும் நீண்ட கால முதலீடுகள் என்றாலும், இவற்றிற்கு இடையே பல வேறுபாடுகள் உள்ளன.

எஸ் ஐ பி: மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி-ஐ எடுத்துக் கொண்டால் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட இந்த திட்டத்தில், சீரான இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் முதலீடு செய்யலாம். இதில் குறைந்தபட்சம் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீட்டை தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. ஆக உங்களால் முடிந்த அளவில் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் முதலீடு செய்யலாம். இதில் லாக் இன் காலம் கிடையாது. ஆக உங்களுக்கு தேவைப்படும்போது பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. இருப்பினும் இது சந்தையுடன் தொடர்பு கொண்டுள்ளதால், சந்தை மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆக ரிஸ்க் அதிகம். அதேசமயம் வருமானமும் அதிகம்.

பிபிஎஃப்: மத்திய அரசால் வழி நடத்தப்படும் திட்டம் என்பதால், உங்கள் பணத்திற்கு 100% பாதுகாப்பு மற்றும் உறுதி அளிக்கப்பட்ட வட்டி கிடைக்கும். இந்த திட்டத்திலும் குறைந்தபட்ச முதலீடு ஒரு நிதியாண்டுக்கு 500 ரூபாயாகும். ஆனால் இதில் அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு காலம் 15 ஆண்டுகளாகும். இடையில் பணத்தை எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் உண்டு. அரசு திட்டம் ஆதலால் ரிஸ்க் இல்லை. வட்டி விகிதமும் 7.1% கிடைக்கிறது. இதில் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பானது.
எஸ் ஐ பி-ல் 12% – 15% வரை வருமானம் கிடைக்கும் என்றாலும் அது ரிஸ்க்கானது. அதோடு பிபிஎஃப்-ல் அதிகபட்ச முதலீட்டு வரம்பானது ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாயாகும். ஆனால் எஸ் ஐ பி-ல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். அதோடு எப்போது வேண்டுமானாலும் வெளியே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிபிஎஃப்- ல் நிபந்தனைகள் உண்டு. 15 ஆண்டுகால முதிர்வும் உண்டு. உங்களுக்கு ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை, பணத்தின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றால் பிபிஎஃப் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், சற்று ரிஸ்க் எடுத்தாலும் நீண்ட காலத்தில் மிகப்பெரிய தொகையை உருவாக்க வேண்டும் என நினைத்தால் எஸ் ஐ பி சிறந்த தேர்வாகும்.

சிறிய கணக்கீடு?

மேற்கூறிய 1,11,111 முதலீட்டை எடுத்துக் கொண்டால், மாதம் ஒருவர் 9,259 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதை பிபிஎஃப்-ல் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஒருவர் 16,66,665 ரூபாய் முதலீடு செய்திருப்பார். 15 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகை 30,14,354 ரூபாயாகும். ஈட்டிய லாபம் சுமார் 13,47,689 ரூபாயாகும்.
இதே எஸ் ஐ பி-ல் மொத்தம்15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஒருவர் 16,66,665 ரூபாய் முதலீடு செய்திருப்பார். அவரின் வருமான விகிதம் 12% என கணக்கிட்டால், மொத்த கார்ப்பஸ் தொகையானது சுமார் 43,65,557 ரூபாயாகும். மொத்த வருமானம் 26,98,892 ரூபாயாகும். ஆக உங்களின் இலக்கு என்ன, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றை பொறுத்து திட்டமிடலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Which investment option, PPF or SIP, generates a larger wealth corpus over 15 years with an annual contribution of Rs.1,11,111?

SIP generally yields a higher corpus of Rs.43.65 lakhs (12% return) compared to PPF’s Rs. 30.14 lakhs (7.1%), though SIP involves market risk while PPF is guaranteed. Story first published: Tuesday, February 10, 2026, 10:34 [IST] See More On: ppf, sip, investment, எஸ் ஐ பி, முதலீடு Other articles published on Feb 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *