மீண்டும் களமிறங்கிய சீனா: 5000 டாலரை தாண்டிய தங்கம்! மிடில் கிளாஸ் நிலைமை என்ன?

befunky-collage-2026-02-09t091910-799-1770608991

  செய்திகள்

மீண்டும் களமிறங்கிய சீனா: 5000 டாலரை தாண்டிய தங்கம்! மிடில் கிளாஸ் நிலைமை என்ன?

News oi-Pugazharasi S By Published: Monday, February 9, 2026, 9:19 [IST] Share This Article

இந்தியர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் முக்கிய அம்சமாக இருக்கும் தங்கம், நடுத்தர வர்க்கத்தின் மிக முக்கிய நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் தற்போதைய சூழலில் யாராலும் பிடிக்க முடியாத ஒரு காட்டு குதிரையைப் போல வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை எட்டி பிடிக்க முடியாத சூழலில் மக்கள் இருந்து வருகின்றனர்.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலர்களை கடந்து உலக நாடுகளையே திகைக்க வைத்துள்ளது. இதற்கு பின்னால் பல முக்கிய காரணங்கள் இருந்தாலும், தற்போது சீனாவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு மாற்றாக சீனா தனது கஜானாவை மீண்டும் தங்கத்தால் நிரப்பத் தொடங்கியுள்ளது. இதுவே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், உலக வல்லரசுகளின் இந்த பொருளாதார போரில் சிக்கி தவிப்பது என்னவோ நடுத்தர வர்க்கம்தான்.
ஏற்கனவே ஒரு சவரன் விலை ஒரு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில், சாமானியர்களின் திருமண கனவு என்னவாகும்? இது வெறும் தற்காலிக உயர்வுதானா அல்லது தங்கம் இனி ஒருபோதும் கீழ் இறங்காதா? சீனா ஏன் திடீரென மீண்டும் தங்கத்தை வாங்கி குவிக்கிறது? நடுத்தர வர்க்கம் இப்போது தங்கம் வாங்கலாமா அல்லது விற்கலாமா? வாருங்கள் பார்க்கலாம்.

மீண்டும் களமிறங்கிய சீனா: 5000 டாலரை தாண்டிய தங்கம்! மிடில் கிளாஸ் நிலைமை என்ன?

இன்றைய தங்கம் நிலை!

தங்கம் விலையானது இன்று ஆசிய வர்த்தக நேரத்தின் தொடக்கத்திலேயே, சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 5,035 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. தொடர்ந்து உச்சத்தை எட்டி வரும் தங்கத்தின் பின்னால் பல்வேறு முக்கிய பொருளாதார காரணிகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் என பலவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த உச்சத்திற்கு அமெரிக்க டாலரின் வீழ்ச்சியும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. இதற்கு அமெரிக்காவின் புதிய நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறிய ஒரு அதிரடி கருத்தே முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த அமெரிக்க மத்திய வங்கி தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர் கெவின் வார்ஷ். ஒருவேளை வார்ஷ் பதவிக்கு வந்த பிறகு, வட்டி விகிதத்தை குறைக்க மறுத்தால், அவர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப்படலாம் என்ற ரீதியில் பெசென்ட் பேசியுள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், டாலரின் மதிப்பும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
பெசன்டின் இந்த கருத்தானது அமெரிக்க மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருப்பதை காட்டுவதாக பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையானது குறையத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தான் டாலரின் மதிப்பு சரிந்து, பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது எகிறி வருகிறது.

சீனாவும் முக்கிய காரணி!

உலகின் மிகப்பெரிய தங்கம் நுகர்வோரான சீனா, கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து தனது தங்க இருப்பை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக வாங்குவது சற்று குறைந்திருந்த நிலையில், இது கடந்த ஜனவரி மாத இறுதியில் சீன மத்திய வங்கியின் தங்க இருப்பு 74.19 மில்லியன் அவுன்ஸாக அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பரில் இது 74.15 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது விலை அதிகரித்தாலும் சீனா தொடர்ந்து தங்கம் வாங்கி வருவதையே காட்டுகிறது. இது சர்வதேச சந்தையில் தங்கத்திற்கான தேவையை நிலையாக வைத்திருக்கிறது. இதுவும் தங்கம் விலையானது பெரிய அளவில் குறையாமல் பார்த்து கொள்கிறது எனலாம்.

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை?

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களும் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் நடந்த அணுசக்தி பேச்சு வார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஒரு அடி முன்னோக்கி சென்றிருக்கிறது என கூறியுள்ளார். அதே சமயம் டிரம்ப் இந்த வாரம் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடக்கும் என்றும், அதில் உடன்பாடு எடுக்கப்படாவிட்டால் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த எச்சரிக்கையானது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடக்க இருக்கும் இந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டால், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை சிறிது குறைய வாய்ப்புள்ளது. அதேசமயம் பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தால். அது தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க காரணமாக அமையலாம். இது ஆபரண தங்கம் விலையிலும் எதிரொலிக்கலாம். ஆக நடுத்தர மக்கள் அவசியம் வாங்கியே ஆக வேண்டும் என்றால் வாங்கலாம். அப்படி இல்லை எனில், முதலீட்டு ரீதியாக கவனம் செலுத்தலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Why did the gold price surged past the $5,000 mark, and what role do China’s central bank?

Gold hit $5,035 driven by aggressive Chinese buying, a weakening US Dollar, and political uncertainty surrounding Federal Reserve independence, sustaining strong safe-haven demand in 2026. Story first published: Monday, February 9, 2026, 9:19 [IST] See More On: gold, தங்கம் Other articles published on Feb 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *