Breaking: வீட்டு கடன்களுக்கான வட்டி குறைய போகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

rbi22-1770281959

  செய்திகள்

வீட்டு கடன்களுக்கான வட்டி குறைய போகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

News oi-Devika Manivannan By Published: Thursday, February 5, 2026, 14:31 [IST] Share This Article

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளை நாளைய தினம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா நாட்டு மக்களுக்கு அறிவிக்க இருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் புதன்கிழமை அன்று தொடங்கியது. நேற்று, இன்று ஆகிய இரண்டு நாட்களும் நாட்டின் பொருளாதார நிலவரம் , அண்மையில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட பட்ஜெட் , அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வீட்டு கடன்களுக்கான வட்டி குறைய போகிறதா? நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

இந்த கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்களை நாளைய தினம் காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா செய்தியாளர்களை சந்திக்கும் போது தெரிவிப்பார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஐந்து நாட்களே ஆகியிருக்கக்கூடிய நிலையில் பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு ஊக்கம் தரும் வகையிலும் சர்வதேச பொருளாதார சூழல்களை கருத்தில் கொண்டும் ரிசர்வ் வங்கி முக்கிய முடிவுகள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து தற்போது வரையிலான இந்த ஓராண்டு காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 125 அடிப்படை புள்ளிகள் அதாவது 1.25% வரை குறைத்தது. தற்போது அதேபோன்ற ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்குமா என்று எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்திருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டி விகிதம்.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் பட்சத்தில் குறைத்ததால் வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கான வாகன கடன், வீட்டுக் கடன் மற்றும் தங்க நகை கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டிகளை குறைக்கும்.

Also Readகூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!! தேர்தல் வாக்குறுதிகள் காரணமா?கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!! தேர்தல் வாக்குறுதிகள் காரணமா?

கடந்த ஆண்டு மட்டும் 1.25 சதவீதம் என ரெப்போ வட்டி குறைக்கப்பட்ட நிலையில் வங்கிகள் அந்த பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே வழங்கின. இதனால் வீட்டு கடன் வாங்கிய பலருக்கும் லட்சக்கணக்கில் சேமிக்க முடிந்தது. எனவே நாளைய தினம் மேலும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை அறிவிப்பு இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

Recommended For Youஇனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!

ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்குமா அல்லது வட்டியை குறைக்காமல் இதே அளவு நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான பொருளாதார நிபுணர்களும் இந்தமுறை இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாது என்றே கருத்து தெரிவிக்கின்றன. இதன் பிறகு மேற்கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடாது என பேங்க் ஆப் பரோடா தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகிறார்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கு மாற்றாக நிதி மேலாண்மையில் கவனம் செலுத்தும் என கூறுகிறார். தற்போது பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது இதனை அடிப்படையாகக் கொண்டு வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என சிலர் கூறுகின்றனர். எதுவாக இருந்தாலும் நாளை காலை தெரிந்துவிடும்.

Share This Article English summary

Will RBI Cut Repo Rate or Pause It? MPC Meeting Decision to Be Announced Tomorrow

RBI’s Monetary Policy Committee (MPC) decision, expected on Friday, with economists largely predicting a pause in repo rate cuts at 5.25% due to stable growth and controlled inflation. Story first published: Thursday, February 5, 2026, 14:31 [IST] See More On: rbi, repo rate, emi, ரிசர்வ் வங்கி Other articles published on Feb 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *