கார்ப்பரேட் நிறுவனங்களை மிஞ்சும் இந்திய கோயில்கள்!! அதுவும் இந்த கோயில் தான் நம்பர் ஒன்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 5, 2026, 11:35 [IST] Share This Article
இந்திய கோயில்கள் வெறும் ஆன்மீக தலங்கள் மட்டும் கிடையாது. பல நூற்றாண்டு கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் மாறாக தொன்மையுடன் கட்டிட கலையின் அடையாளமாகவும் நிற்கின்றன.பல்வேறு வரலாற்றுகளையும் பல நூறாண்டு கால புதையல்களையும் தன்னகத்தே கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் இருப்பதைவிட இந்திய கோயில்கள் வசம் இருக்கக்கூடிய சொத்துக்களின் மதிப்பு அதிகமாக இருக்கிறது.
இந்திய கோயில்கள் வசம் தங்கமும் வெள்ளியும் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தவிர பக்தர்கள் வழங்கக்கூடிய காணிக்கை, நன்கொடை உள்ளிட்டவையும் நாள்தோறும் இந்திய கோயில்களின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகின்றன.பக்தர்கள் வேண்டிக் கொண்டு வேண்டுதல் நிறைவேறும் போது அதற்கு தங்களால் ஆன பொருட்களை கோயில்களுக்கு நன்கொடையாகவும் காணிக்கையாகவும் செலுத்துகிறார்கள். சிலர் தங்கத்தை கூட காணிக்கையாக செலுத்துவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் அதிக சொத்து மதிப்பினை கொண்டிருக்க கூடிய பணக்கார கோயில்கள் என்னென்ன என்பதை நாம் இந்த பட்டியலில் பார்க்கலாம்.

திருப்பதி: இந்தியாவிலேயே பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் தான். ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிக செல்வம் கொண்ட கோயிலாக முதலிடத்தை பிடித்து இருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தான் மேலாண்மை செய்து வருகிறது .நாட்டிலேயே தங்களுடைய நிதி குறித்து மிகவும் வெளிப்படை தன்மையோடு செயல்படக்கூடிய ஒரு கோயில்.இந்தக் கோயிலின் மொத்த சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறதாம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், அதன் வசம் இருக்கக்கூடிய ரொக்க பணம் மற்றும் தங்கம் , இவை தவிர உண்டியலில் கிடைக்கக்கூடிய காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றால் இந்தியாவிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோயிலாக உள்ளது.
Also Read
இனி தங்கம் வாங்க இந்தியர்கள் துபாய்க்கு படையெடுக்க போறாங்க!! விதிகளை தளர்த்திய மத்திய அரசு!!
ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வத்தை கொண்டிருக்கிறது. இந்த கோயிலின் கோயிலில் மிகப்பெரிய தங்கப் புதையல் இருப்பதாக சொல்லப்படுகிறது. தங்க சிலைகள், வைரம் பதிக்கப்பட்ட ஆபரணங்கள், அரிய வகை நாணயங்கள் , விலைமதிக்க முடியாத பல்வேறு பொருட்களும் இந்த கோயிலில் இருக்கின்றன. இவை அனைத்துமே பழமை வாய்ந்தவை என்பதால் இவற்றின் மதிப்பு நாம் நினைப்பதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஷீரடி சாய்பாபா கோயில் : மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்க கூடிய ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை இந்தியாவின் பணக்கார மத அறக்கட்டளைகளில் ஒன்றாக இருக்கிறது. ஓராண்டுக்கு இங்கே 400 கோடி ரூபாயிலிருந்து 480 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வழங்குகிறார்கள். ஷீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு வரக்கூடிய பணம் பெரும்பாலும் சமூக நல பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த அறக்கட்டளை சார்பாக மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில்: நாட்டின் பாரம்பரியமான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது. ஆண்டுதோறும் இங்கே ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து வைஷ்ணவி தேவியை வழிபட்டு செல்கிறார்கள். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. பக்தர்கள் வழங்க கூடிய காணிக்கை மட்டும் இல்லாமல் பிரசாதம் விற்பனை மற்றும் நன்கொடைகள் மூலம் இந்த கோயிலுக்கு நல்ல வருமானம் வருகிறது.

பஞ்சாப் தங்க கோயில் : அமிர்தசரஸில் உள்ள இந்த கோயில் சீக்கிய மதத்தவர்களின் மிக முக்கியமான ஒரு புனித தலம். புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் உள்ளது. இந்த கோயிலின் புகழ்பெற்ற மேற்கூரை மற்றும் வளாகமே 750 இல் இருந்து 1500 கிலோ கிராம் வரையிலான சுத்த தங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த கோயிலுக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களள். இந்த கோயில் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்குகிறது. இது மட்டும் அல்லாமல் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு புகழ்பெற்றிருக்கிறது.
Recommended For You
தங்கம் வாங்குறதுல மக்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா? – புட்டு புட்டு வைக்கும் ரே டேலியோ
மும்பை சித்தி விநாயகர் கோயில்: மகாராஷ்டிரா மாநிலத்திலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய விநாயகர் கோயில் என்றால் மும்பை சித்தி விநாயகர் கோயில் தான். பெரிய அளவிலான தொழிலதிபர்கள், பிரபலங்கள், திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் இந்த கோயிலுக்கு நன்கொடைகளை கொட்டுவார்கள். இந்த கோயில் பெரும்பாலான தன்னுடைய பணத்தை வங்கிகளில் பிக்சட் டெபாசிட் முறையில் டெபாசிட் செய்து வருமானம் ஈட்டுகிறது.
ஒடிசா மாநிலம் ஜெகநாதர் கோயில்: ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோயில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற ஒரு ஆன்மீக தலம். இந்த கோயிலுக்கு சொந்தமாக ஒடிசா மற்றும் பிற பிராந்தியங்களில் மட்டும் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறதாம். இங்கே பல நூறு ஆண்டுகால பாரம்பரிய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
You May Also Like
வீட்டுல விசேஷம் வருதா? தங்கம் வாங்க நல்ல நேரம்!! இந்த வாய்ப்ப தவறவிட்டா வருத்தப்படுவீங்க!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழ்நாட்டில் இருந்து அதிக சொத்து மதிப்பு கொண்ட கோயில்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஒரே கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில். மதுரையின் அடையாளமாக அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் தன்னுடைய பாரம்பரியத்திற்கும் ஆன்மீக சேவைக்கும் பெயர் பெற்றது. பாரம்பரியமான தங்கம் மற்றும் தங்க நகைகளும், வைரம் பதிக்கப்பட்ட கிரீடங்களும் இந்த கோயிலில் இருக்கிறது. தென்னிந்தியாவின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தலமாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திகழ்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறக்கூடிய பல்வேறு திருவிழாக்களும் புகழ்பெற்றவையாக இருக்கின்றன. இந்த சமயங்களில் இங்கே அதிகமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். பக்தர்கள் காணிக்கை மூலம் இந்த கோயிலுக்கான வருமானம் கிடைக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில்: உலகப் புகழ்பெற்ற கோயில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டுக்கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வருகிறார்கள். மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை காலங்களில் இந்த கோயிலுக்கு சுமார் 300 கோடி ரூபாய் வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோயிலுக்கான பெரும்பான்மையான வருமானம் அவர்கள் விற்பனை செய்யும் அரவணை பாயாசம் மூலம் தான் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
சோம்நாத் கோயில்: குஜராத் மாநிலத்தில் உள்ள இந்த கோயில் புகழ்பெற்றது. இந்த கோயிலின் கருவறையில் சுமார் 130 கிலோ கிராம் தங்கமும் அதன் கோபுரத்தில் 100 கிலோவுக்கு அதிகமான தங்கமும் கொண்டு வடிவமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்யப்படுகிறது. அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய ஒரு கோயிலாகவும் இருக்கிறது.
Share This Article English summary
Top 10 Richest Temples in India and Their Staggering Net Worth
India’s temples blend faith with immense wealth from gold, donations, land, and investments. The article highlights the top 10 richest as of 2026. Story first published: Thursday, February 5, 2026, 11:35 [IST] See More On: சொத்து, temple, wealth, madurai Other articles published on Feb 5, 2026
