Breaking: பெற்றோரே உஷார்!! மோமோவுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை தூக்கி கொடுத்த சிறுவன்!! இப்படி கூட மோசடி நடக்குது!!

momo3-1770028894

  செய்திகள்

பெற்றோரே உஷார்!! மோமோவுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை தூக்கி கொடுத்த சிறுவன்!! இப்படி கூட மோசடி நடக்குது!!

News oi-Devika Manivannan By Published: Monday, February 2, 2026, 16:13 [IST] Share This Article

தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதிதாக நம்மால் பணம் சேர்த்து தங்கம் வாங்க முடியுமா என்பதே கேள்விக்குறி தான். எனவே இருக்கிற தங்கத்தையாவது பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஏராளமான மக்களின் மனநிலையாக இருக்கிறது.

இந்த சூழலில் ஒரு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுவன் செய்த செயல் அவனுடைய பெற்றோருக்கு பேரதிர்ச்சி தந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் டிவோரியா மாவட்டத்தை சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒரு பிளேட் மோமோக்காக வீட்டில் இருந்த தங்க நகையை எடுத்து தாரை பார்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் ராம்ஹர் கற்கானா என்ற கிராமம் இருக்கிறது.

பெற்றோரே உஷார்!! மோமோவுக்கு ஆசைப்பட்டு தங்கத்தை தூக்கி கொடுத்த சிறுவன்!! இப்படி கூட மோசடி நடக்குது!!

இந்த கிராமத்தை சேர்ந்த விமலேஷ் மிஸ்ரா என்பவர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது . விமலேஷ் மிஸ்ராவுக்கு 14 வயதான ஒரு மகன் இருக்கிறான் அவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு மோமோ என்றால் மிகவும் விருப்பமாம் அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே இருக்கக்கூடிய மோமோ கடைக்கு சென்று அவன் தினமும் மோமோ வாங்கி வந்திருக்கிறான்.

தினமும் இந்த சிறுவன் வருவதை அறிந்து அந்த வியாபாரிகள் அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு கொடுத்திருக்கிறார்கள். பின்னர் உன்னுடைய வீட்டிலிருந்து நாங்கள் சொல்லக்கூடிய பொருட்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தால் உனக்கு இலவசமாகவே மோமோ கொடுப்போம் என கூறினார்களாம். அப்படி சிறு சிறு பொருட்களை வீட்டில் இருந்து அவனை எடுத்து வர செய்திருக்கின்றனர்.

Also Readதங்கம், வெள்ளி விலை: வரலாற்றில் இல்லாத சரிவு..! எல்லாம் 950 செய்யும் மேஜிக்..!தங்கம், வெள்ளி விலை: வரலாற்றில் இல்லாத சரிவு..! எல்லாம் 950 செய்யும் மேஜிக்..!

ஒரு கட்டத்தில் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை கொண்டு வந்து கொடுக்குமாறு கூறினார்களாம். நமக்கு இலவசமாக மோமோ கிடைக்கிறதே என அந்த சிறுவனும் தினமும் வீட்டு பீரோவில் இருந்து ஒவ்வொரு தங்க நகையாக கொண்டு வந்து இந்த மோமோ கடையில் கொடுத்துவிட்டு இலவசமாக மோமோ வாங்கி உண்டிருக்கிறான்.

அவனுடைய தாயார் பீரோவை திறந்து நகைகளை எடுக்கலாம் என்று பார்த்தபோதுதான் பீரோவில் தங்க நகை குறைந்தது தெரிய வநதுள்ளது. வீட்டில் இருந்து அனைவரும் இதனால் அதிர்ச்சி அடைந்து ஒவ்வொரு வரிடமும் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது தான் இந்த சிறுவன் மோமோ வியாபாரிகளிடம் தினமும் ஒவ்வொரு தங்க நகையாக கொண்டு சென்று கொடுத்ததை கூறியிருக்கிறான்.

Recommended For Youபரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?பரமபதத்துல பாம்பு கொத்துன மாதிரி சரியும் தங்கம், வெள்ளி விலை!! இனி ஏணி வருமா இல்ல பாம்பு தானா?

இதனை அடுத்து பெற்றோர் அங்கே சென்று பார்த்தபோது மோமோ கடையும் மூடப்பட்டிருந்ததாம் அந்த வியாபாரிகளும் ஊரை விட்டு தப்பியோடு இருக்கிறார்கள். இது தொடர்பாக தற்போது அவர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்திருக்கின்றனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மோமோ வியாபாரிகளை தேடி வருகின்றனர். அந்த சிறுவன் மோமோ வியாபாரிகளிடம் வழங்கிய தங்க நகைகளின் மதிப்பி 85 லட்சம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.

Share This Article English summary

UP Teen Swaps Rs 85L Gold for Endless Momos in Shocking Scam

A 14-year-old boy in Uttar Pradesh’s Deoria district traded family gold jewellery worth Rs 85 lakh for unlimited free momos from local vendors. Story first published: Monday, February 2, 2026, 16:13 [IST] Other articles published on Feb 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *