Breaking: பட்ஜெட்2026ல் சாமானிய மக்களுக்கு கிடைத்து என்ன? டாப் லிஸ்ட் இதோ – இப்ப சொல்லுங்க பட்ஜெட் எப்படியிருக்கு?

befunky-collage-2026-02-01t164704-361-1769944681

  செய்திகள்

பட்ஜெட்2026ல் சாமானிய மக்களுக்கு கிடைத்து என்ன? டாப் லிஸ்ட் இதோ – இப்ப சொல்லுங்க பட்ஜெட் எப்படியிருக்கு?

News oi-Pugazharasi S By Published: Sunday, February 1, 2026, 16:48 [IST] Share This Article

பட்ஜெட் வருதுனாலே விலைவாசி ஏறுமா, வரி குறையுமா – இதுதான் ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கவலையாக இருக்கும். 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களின் அன்றாட வாழ்வை எளிதாக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக புதிய வரி முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு நீட்டிக்கப்பட்டது நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய நிம்மதி. இனி வெளிநாடு செல்ல திட்டமிடும் நடுத்தர வர்க்கத்தினருக்கு TCS வரி 2% ஆகக் குறைப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் மருந்துகளுக்கு வரி நீக்கம் போன்ற அறிவிப்புகள் நேரடியாக சாமானியனின் பாக்கெட்டில் பணத்தை சேமிக்கும் திட்டங்களாகும். இதுமட்டுமின்றி, விவசாயிகளுக்கு பாரத் விஸ்டார் மற்றும் இளைஞர்களுக்கு 2.5 லட்சம் புதிய மருத்துவ வேலை வாய்ப்புகள் என இந்த பட்ஜெட் ஒரு வளர்ச்சிக்கான பேக்கேஜ் ஆக பார்க்கப்படுகிறது. சுருக்கமாக சொன்னால், பெரும் வரி சலுகை இல்லையென்றாலும், மறைமுகமாகச் செலவுகளை குறைக்கும் ஒரு சமநிலையான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

பட்ஜெட் 2026ல் சாமானிய மக்களுக்கு கிடைத்தது என்ன? டாப் லிஸ்ட் இதோ - இப்ப சொல்லுங்க பட்ஜெட் எப்படி?

நீர்நிலைகள் மற்றும் மீன்வள மேம்பாடு!

மீன்வள துறையை வலுப்படுத்தவும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தவும் நாடு முழுவதும் 500 நீர்த்தேக்கங்கள் மற்றும் அமிர்த சரோவர் குளங்கள் ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்தப்படும். இதன் மூலம் மீன் பிடித் தொழில் செய்பவர்களின் வருமானம் உயரும்.அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்கும் உதவும்.

தென்னை விவசாயிகளுக்கு ஜாக்பாட்

தென்னை மேம்பாட்டு திட்டம் மூலம் விளைச்சல் குறைந்த பழைய தென்னை மரங்களுக்கு பதிலாக, அதிக மகசூல் தரும் புதிய ரக தென்னை மரங்கள் நடப்படும். இதன் மூலம் 1 கோடி விவசாயிகள் உட்பட சுமார் 3 கோடி மக்கள் பயனடைவார்கள். இது விவசாயிகளின் வருமானத்தையும் ஊக்குவிக்கும். கிராமப்புற பொருளாதாரத்திலும் முக்கிய பங்காற்றும்.

முந்திரி மற்றும் கோகோ

முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைவதோடு, 2030-ஆம் ஆண்டுக்குள் இவற்றை உலகளாவிய பிரீமியம் பிராண்டாக மாற்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் இந்திய விவசாயிகளுக்கு சர்வதேச சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும். ஏற்றுமதியையும் அதிகரிக்க முடியும்.

கால்நடை வளர்ப்பு மற்றும் சந்தன மரம்

கால்நடை வளர்ப்புத் துறையில் இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்ற தேவையான உதவிகள் வழங்கப்படும். இது கிராமப்புறங்களில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவிகரமாக இருக்கும். அதோடு அழிந்து வரும் இந்திய சந்தன மரச் சூழலை மாநில அரசுகளுடன் இணைந்து மீட்டெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் உதவி

விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல மொழிகளில் இயங்கும் AI கருவி அறிமுகப்படுத்தப்படும். இது விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை மற்றும் வானிலை குறித்த ஆலோசனைகளை துல்லியமாக வழங்கும். இது விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை விரைவில், எளிதாக வழங்க உதவிகரமாக இருக்கும். இது உற்பத்தி திறனை அதிகரிக்க உதவுவதோடு, சரியான நேரத்தில் தக்க ஆலோசனையாளராகவும் இருக்கும்.

பெண்களுக்கு உதவி

இதுவரை கிராமப்புற பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் சிறு கடன்களை பெற்று, சிறிய அளவில் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். ஆனால், இனி அவர்கள் வெறும் பயனாளிகளாக மட்டும் இருக்காமல், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களாக உருவெடுக்க இந்த SHE-Marts வழிவகை செய்யும். இவை கிராமப்புற பெண்களால் நடத்தப்படும் சமூக அளவிலான சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகும். இது சுயஉதவி குழுக்களின் கூட்டமைப்புகளின் கீழ் அமைக்கப்படும். இதன் மூலம் கிராமப்புற பெண்கள் தயாரிக்கும் பொருட்களை நேரடியாக, மக்களிடம் கொண்டு செல்ல இது ஒரு வலுவான தளமாக அமையும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல், சொந்தமாக வருமானம் ஈட்டும் தொழில் உரிமையாளராக ஆக முடியும்.

மேலும் மேற்கண்டவாறு தயாரிக்கப்படும் கிராமப்புற தயாரிப்புகளுக்கு SHE என்ற பெயரில் ஒரு பிரத்யேக அங்கீகாரம் மற்றும் தரம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட இத்திட்டத்தை செயல்படுத்த பாரம்பரிய வங்கி கடன்களுக்கு பதிலாக, நவீன மற்றும் எளிமையான நிதி உதவி முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article English summary

Budget 2026: 6 Game-Changing gains to boost every indian’s pocket

Budget 2026 boosts wallets by raising tax exemption to Rs.12 lakh, cutting foreign tour taxes to 2%, slashing cancer medicine prices, and creating 250,000 healthcare jobs. Story first published: Sunday, February 1, 2026, 16:48 [IST] Other articles published on Feb 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *