வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை!! கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏமாற்றம்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 1, 2026, 12:54 [IST] Share This Article
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 -27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என கோடிக்கணக்கான வருமான வரி செலுத்துவோர் எதிர் பார்த்தனர். அப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிடவே இல்லை.
இந்தியாவில் தற்போது புதிய வருமான வரி கணக்கு நடைமுறை, பழைய வருமான வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகளில் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். இதில் பழைய வருமான வரி கணக்கு தாக்கலில் 80சி பிரிவின் கீழ் நம் முதலீடுகள் மற்றும் வீட்டு கடன் வட்டிகளுக்கு வரி சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை வரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

பழைய வருமான வ்ரி கணக்கு தாக்கல் முறையில் கிடைக்கும் சலுகைகளை புதிய வரி கணக்கு முறைக்கும் நீட்டிக்க வேண்டும் வருமான வரி உச்ச வரம்பை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கோடிக்கணக்கான இந்தியர்களால் முன் வைக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடவே இல்லை. இது பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.
Also Read
NRI: இனி இந்திய பங்குச்சந்தைக்கு பொற்காலம்!! வெளிநாட்டு முதலீடுகளை இரட்டிப்பாக்கும் ஜாக்பாட் அறிவிப்பு!!
வருமான வரி குறித்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார். புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பல்வேறு விதிமுறைகள் எளிமையாக்கப்படும் என கூறினார். நேரடி வரி நிவாரண நடவடிக்கைகள் கிடைக்கும் , படிவங்கள் அனைத்து எளிமையாக்கப்படும் என தெரிவித்தார்.
புதிய வருமானவரி கணக்கு முறையில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த ஒரு வரியும் கிடையாது. 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், 8 லிருந்து 12 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை என்ற வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
Recommended For You
காஞ்சிபுரம் பட்டு புடவை உடுத்தி பட்ஜெட் தாக்கல்!! நிர்மலா சீதாராமனின் புடவை தேர்வு சொல்வது என்ன?
இந்த முறை வருமான வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படவில்லை. புதிதாக பெரிய வரி சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. திருத்தப்பட்ட வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை டிசம்பர் 31ஆம் தேதி இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக அறிவித்தார். இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும் வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களுக்கான பேக்கேஜ்கள் விற்பனையில் டிசிஎஸ் பிடித்தம் என்பது 5 லிருந்து 2% ஆக குறைக்கப்படுகிறது என்றார்.
Share This Article English summary
budget 2026:No changes in income tax rates, slabs for FY 2026-27
No changes in income tax rates, slabs for FY 2026-27; some TCS, TDS changes & new deadline for filing revised returns announced. Story first published: Sunday, February 1, 2026, 12:54 [IST] Other articles published on Feb 1, 2026
