Breaking: மத்திய பட்ஜெட்டும்.. வெள்ளி விலையும்..! ஏன் தங்கத்தை போல வெள்ளியை டீல் செய்ய முடியாது?

silverf15-1769859443

  செய்திகள்

மத்திய பட்ஜெட்டும்.. வெள்ளி விலையும்..! ஏன் தங்கத்தை போல வெள்ளியை டீல் செய்ய முடியாது?

News oi-Devika Manivannan By Published: Saturday, January 31, 2026, 17:08 [IST] Share This Article

இந்தியா தனக்கு தேவையான வெள்ளியில் 80 சதவீதத்தை வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது. எனவேதான் சர்வதேச அளவில் வெள்ளியின் விலையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு தாக்கமும் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. உலக சந்தையில் வெள்ளி விலை உயர்ந்தால் இந்தியாவில் வெள்ளி விலை உயரும், உலக சந்தையில் சரிந்தால் இந்தியாவில் வெள்ளி விலை சரியும்.

ஆனால் தங்கத்தை போலவே வெள்ளியை டீல் செய்து விட முடியாது. ஏனெனில் தங்கம் நாம் ஆபரணமாகவும் நமக்கான சொத்தாக கட்டிகளாகவும் நாணயங்களாகவும் வாங்கி வைத்து கொள்வோம். வெள்ளியை நாம் ஆபரணமாக மட்டுமில்லாமல் தொழில்துறை ரீதியாகவும் பயன்படுத்துகிறோம். எனவே வெள்ளி தொடர்பாக மத்திய அரசு எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவும் சாமானிய மக்களை மட்டும் அல்ல பல்வேறு தொழில் துறையினரையும் பாதிக்கும். எனவே மிக கவனமாக தான் வெள்ளி விஷயத்தில் அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடும்.

மத்திய பட்ஜெட்டும்.. வெள்ளி விலையும்..! ஏன் தங்கத்தை போல வெள்ளியை டீல் செய்ய முடியாது?

இந்தியா தற்போது சோலார் பேனல் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, மின்னணு சாதன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகிறது. இவை அனைத்திற்குமே மிக முக்கிய உபகரணமாக வெள்ளி பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் வெள்ளி தொடர்பாக எடுக்கப்படக்கூடிய எந்த ஒரு கொள்கை மாற்றமும் தொழில்துறை ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நிதி அமைச்சர் வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்கிறார் எனும் போது உள்நாட்டில் வெள்ளியின் விலை குறையும். இதனால் வெள்ளியை நகையாகவும் முதலீடு நோக்கத்திலும் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும. தொழில்துறை ரீதியாக ஒரு உபகரணமாக வெள்ளியை வாங்கக்கூடிய உற்பத்தியாளர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு சாதகமான அறிவிப்பாக இருக்கும்.முன்பை விட குறைந்த விலைக்கு வெள்ளியை அவர்கள் இறக்குமதி செய்து பல்வேறு பொருட்களுக்கான உபகரணமாக மாற்றி பயன்படுத்த முடியும்.

Also Readவெள்ளியின் சாயம் வெளுத்தது!! 2 நாட்களில் தாறுமாறாக சரிந்த விலை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!வெள்ளியின் சாயம் வெளுத்தது!! 2 நாட்களில் தாறுமாறாக சரிந்த விலை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஒரு வேளை வெள்ளிக்கான இறக்குமதி வரியை உயர்த்தினால் உள்நாட்டில் வெள்ளியின் விலை உயரும். வெள்ளி நகை , நாணயம், வெள்ளிக்கட்டி என மட்டும் இல்லாமல் தொழில்துறை ரீதியாக இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் அதிக விலைக்கு வெள்ளியை இறக்குமதி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உண்டாகும்.

எனவேதான் வெள்ளிக்கான இறக்குமதி வரி மட்டுமில்லாமல் அதற்கான ஜிஎஸ்டி நிவாரணத்தையும் அளிக்க வேண்டும் என பல்வேறு துறை சார்ந்த உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மத்திய அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இந்தியா தன்னுடைய கார்பன் வெளியிட்டு அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Recommended For Youமக்களே ராத்திரியோட ராத்திரியா இதெல்லாம் மாறப் போகுது!! தெரிஞ்சுக்கலனா உங்க பர்ஸ் காலி!!மக்களே ராத்திரியோட ராத்திரியா இதெல்லாம் மாறப் போகுது!! தெரிஞ்சுக்கலனா உங்க பர்ஸ் காலி!!

எனவே இது சார்ந்த துறைகளை ஊக்குவிக்கும் திட்டங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. சோலார் உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி, மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் என அனைத்திலுமே வெள்ளி மிக முக்கியமான ஒரு பாகம். எனவே அரசு தொழில்துறைக்கு வெள்ளியை இறக்குமதி செய்பவர்களுக்கு தனி நிவாரணம் அறிவிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு அறிவித்தால் இந்தியாவில் சோலார் பேனல் உற்பத்தியும் மின்சார வாகன உற்பத்தி மற்றும் பல்வேறு மின்னணு சாதன உற்பத்திக்கு பெரிய ஊக்குவிப்பாக அமையும்.

Share This Article English summary

Budget 2026: Import Duties and Green Incentives to Shape Silver Demand

As India gears up for Union Budget 2026, silver demand faces potential shifts from import duty changes. Lower duties could ease prices for jewellery and investors, while hikes might raise costs. Story first published: Saturday, January 31, 2026, 17:08 [IST] Other articles published on Jan 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *