Breaking: வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா?

befunky-collage68-1769843585

  Market update

வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா?

Market Update oi-Pugazharasi S By Published: Saturday, January 31, 2026, 12:43 [IST] Share This Article

வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE அன்று நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்படவுள்ளன.

கடைசியாக 1999-ம் ஆண்டு இதேபோல ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சந்தை திறந்திருந்தது. தற்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யப் போகிறார்கள். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு சந்தை உடனுக்குடன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், முதலீட்டாளர்கள் நிகழ் நேரத்தில் முடிவெடுக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா?

எப்போது தொடக்கம்?

காலை 9.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை வழக்கமான நேரங்களில் நேரடி வர்த்தகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரத்தின் இறுதியில் இந்திய பங்குச்சந்தைகள் பலவீனமாகவே முடிவடைந்தன. உலோக பங்குகளில் லாப முன் பதிவு (Profit-booking) மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளால் வெள்ளிக்கிழமை சந்தை சரிவை சந்தித்தது. குறிப்பாக பிஎஸ்இ சென்செக்ஸ் 296.59 புள்ளிகள் (0.36%) சரிந்து 82,269.78-ல் நிலைபெற்றது. என்எஸ்இ நிஃப்டி 98.25 புள்ளிகள் (0.39%) குறைந்து 25,320.65 புள்ளிகளாக நிறைவடைந்தது.

பாதாளத்திற்கு சென்ற உலோகப் பங்குகள்?

பட்ஜெட்டிற்கு முன்னதாக மெட்டல் இன்டெக்ஸ் 5.12% வரை சரிந்தது. இதில் முக்கியமான நிறுவனங்களின் சரிவு கவனத்தில் கொள்ள வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இதில் ஹிந்துஸ்தான் ஜிங்க் பங்கு 12.12% சரிவையும், வேதாந்தா பங்கு 10.89% சரிவும், நேஷனல் அலுமினியம் 10.32% சரிவும், ஹிண்டால்கோ 6.12% வீழ்ச்சியையும் கண்டுள்ளது. இதனிடையே நிஃப்டி மெட்டல் குறியீட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியாகும்.

பொருளாதார ஆய்வு மற்றும் உலகளாவிய சூழல்?

கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey), 2026 நிதியாண்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என்று கணித்துள்ளது. இருப்பினும், உலகளாவிய சில மாற்றங்களால் சந்தை பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் அடுத்த பெடரல் ரிசர்வ் வங்கி தலைவராக கெவின் வார்ஷ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதால், வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய சந்தைகளில் சலசலப்பை ஏற்படுத்தி, அமெரிக்க பங்குச் சந்தைகளான எஸ் &பி 500 மற்றும் நாஸ்டாக் ஆகியவற்றின் முந்தைய நாள் வர்த்தகத்தை சரிவடைய செய்தது. இது நாளைய வர்த்தகத்திலும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நாளை நடக்கவிருக்கும் சிறப்பு வர்த்தக நேரத்தில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம். இது பட்ஜெட்டில் வெளியாகவிருக்கும் அறிவிப்புகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆக சிறு முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Will the Indian stock markets remain open for live trading on Sunday, February 1, 2026, to coincide with the Budget presentation?

In a rare move, NSE and BSE will conduct live trading sessions on Sunday, February 1, 2026, allowing investors to react instantly to Budget announcements. Story first published: Saturday, January 31, 2026, 12:43 [IST] Other articles published on Jan 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *