பட்ஜெட் 2026:மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகை மீண்டும் கிடைக்குமா?- காத்திருக்கும் குட் நியூஸ்! – Allmaa

befunky-collage63-1769778588

  செய்திகள்

பட்ஜெட் 2026:மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகை மீண்டும் கிடைக்குமா?- காத்திருக்கும் குட் நியூஸ்!

News oi-Pugazharasi S By Published: Friday, January 30, 2026, 18:40 [IST] Share This Article

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பெரியவர்களின் ஒரே எதிர்பார்ப்பு, அந்த பழைய சலுகை மீண்டும் வருமா என்பதுதான். கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான 40% முதல் 50% வரையிலான கட்டணச் சலுகை, கடந்த 6 ஆண்டுகளாக முடங்கியே கிடக்கிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2026-ல், இதற்கான விடிவுகாலம் பிறக்கப் போவதாக டெல்லி வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. நிதி அமைச்சகத்திற்கும் ரயில்வே துறைக்கும் இடையே இது குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்லீப்பர் மற்றும் 3AC வகுப்புகளில் மட்டுமாவது இந்தச் சலுகையை மீண்டும் கொண்டு வருமா? தாத்தா-பாட்டிகளின் ரயில் பயணங்கள் இனி பாதி விலையில் அமையுமா? விரிவாகப் பார்ப்போம்..

பட்ஜெட் 2026:மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகை மீண்டும் கிடைக்குமா?- காத்திருக்கும் குட் நியூஸ்!

தகவல்கள் சொல்வதென்ன?

இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வர வாய்ப்புள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகத்திற்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் இடையே பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சலுகையை மீண்டும் கொண்டு வருவது குறித்து இரு அமைச்சகங்களும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒப்புதல் கிடைத்தால், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

முன்னர் வழங்கப்பட்ட சலுகைகள்?

பல தசாப்தங்களாக, இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சமூக நலத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது.

ஆண்கள் (60 வயது மற்றும் அதற்கு மேல்): 40% தள்ளுபடி.

பெண்கள் (58 வயது மற்றும் அதற்கு மேல்): 50% தள்ளுபடி.

வகுப்புகள்: ஸ்லீப்பர், 3AC, 2AC மற்றும் 1AC உள்ளிட்ட பெரும்பாலான வகுப்பு பயணங்களுக்கு இது பொருந்தும்.

நடைமுறை: IRCTC இணையதளம் அல்லது முன்பதிவு மையங்களில் வயதைக் குறிப்பிட்டாலே போதுமானது. இதற்காக தனியாக அடையாள அட்டைகளோ அல்லது கூடுதல் ஆவணங்களோ தேவையில்லை.

ஏன் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது?

மார்ச் 2020-ல் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்ட போது, நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த சலுகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே துறையில் இந்த சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு சுமார் 1,600 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை செலவானது. பணவீக்கம் மற்றும் ரயில்வேயின் நிதி சுமையை கருத்தில் கொண்டு, இயல்பு நிலை திரும்பிய பிறகும் இந்த சலுகை மீண்டும் அமல்படுத்தப்படவில்லை.

பட்ஜெட் 2026-ல் எதிர்பார்ப்பது என்ன?

மருத்துவ செலவுகள் மற்றும் பயண கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு, மீண்டும் கட்டண சலுகையானது கொண்டு வரப்படுமா, இது அவர்களுக்கு நிம்மதியை கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான அல்லது பகுதி சலுகை: பழையபடி முழு தள்ளுபடி அல்லது குறைந்தபட்சம் ஸ்லீப்பர் மற்றும் 3AC வகுப்புகளுக்காவது சலுகை மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலையான வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article English summary

Will the Indian government reinstate railway fare concessions for senior citizens in the upcoming Budget 2026?

The Indian government is reportedly considering restoring COVID-suspended railway concessions for seniors in Budget 2026, potentially providing 40-50% fare discounts after a six-year hiatus. Story first published: Friday, January 30, 2026, 18:40 [IST] Other articles published on Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *