தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்.. வறுமையில் படித்து.. ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்..! – Allmaa

velumani-1769772661

  செய்திகள்

தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்.. வறுமையில் படித்து.. ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்..!

News oi-Devika Manivannan By Published: Friday, January 30, 2026, 17:03 [IST] Share This Article

இந்தியாவில் தற்போது ஹெல்த்கேர் சேவைகள் பெருமளவு வளர்ச்சி அடைந்து விட்டன. இந்த வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டவர்களில் மிக முக்கியமானவர் தான் தைரோக கேர் நிறுவனர் டாக்டர் வேலுமணி . இவரை தைரோகேர் வேலுமணி என்றால் தான் பலருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டின் மிகச் சிறிய ஒரு கிராமத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்து படிப்பை முடித்து மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்கியவர் . தற்போதும் கூட அனைத்து இளம் தொழில் முனைவோருக்கு மிகச்சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். இவர் கூறக்கூடிய அறிவுரைகளும் இவருடைய எளிமையும் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்..வறுமையில் படித்து..ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்

இந்திய மருத்துவ துறையில் மருத்துவ பரிசோதனை முறையில் மிகப் பெரிய மாற்றத்தை வித்திட்டவர் தான் தைரோகேர் வேலுமணி. தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் முன்னணி நோய் எறிதல் மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதனை நிறுவியவர் தான் டாக்டர் வேலுமணி. மும்பையை தலைமை இடமாகக் கொண்டு 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னாளில் இதனை விற்பனை செய்துவிட்டார். இப்போது இவரின் சொத்து மதிப்பு 5000 கோடி ரூபாய்.

1959 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் வேலுமணி. இவரது ஆரம்பகால வாழ்க்கை வறுமையில் தான் இருந்தது. படிப்பு மட்டுமே இந்த வறுமையை போக்க முடியும் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்து இருந்தார் வேலுமணி. எனவே பள்ளி படிப்பை முடித்து எப்படியாவது கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.

Also Readஇன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்,வெள்ளி: ஒரே நாளில் இரண்டு முறை விலை சரிவு!!இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்,வெள்ளி: ஒரே நாளில் இரண்டு முறை விலை சரிவு!!

அப்படி 1978 ஆம் ஆண்டில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த அவர் பல்வேறு நேர்காணல்களில் தோல்வி அடைந்து ஜெமினி கேப்ஸ்யூல் என்ற சிறிய மருந்து நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அந்த நேரத்தில் அவருக்கு சம்பளம் 150 ரூபாய் தான் . மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது இதனை அடுத்து பாபா ஆன ஆராய்ச்சி மையத்தில் அறிவியல் உதவியாளருக்கான வேலை வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதற்காக மும்பை சென்றார், இங்கு கிடைத்த அனுபவம் தான் பின்னாளில் தைரோகேர் என்று மிகப்பெரிய ஆய்வக நிறுவனத்தை அவர் தொடங்குவதற்கு உதவியாக இருந்தது.

தினமும் 3 ரூபாய் சம்பாதித்த தாய்..வறுமையில் படித்து..ரூ.5000 கோடி சொத்து சேர்த்த கோயம்புத்தூர்காரர்

தன்னுடைய கல்லூரி கால நாட்கள் எப்படி இருந்தது என்பது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் விரிவாக பதிவு செய்து இருக்கிறார். 1974 இல் இருந்து 1978 வரை கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் தான் நான் கல்லூரி படிப்பை படித்தேன், நகரங்களில் கல்லூரி படிப்புக்கான கட்டணம் 1000 முதல் 3000 ரூபாய், ஹோட்டல் கட்டணம் மாதத்திற்கு 200 ரூபாய். அந்த சமயத்தில் என்னுடைய குடும்பத்திற்கு அது மிகப்பெரிய கட்டணம். இதன் காரணமாக நகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் நான் கல்லூரிக்கு சேர்ந்தேன் என கூறுகிறார்.

இங்கே கல்லூரி கட்டணம் 300 ரூபாய், ஹோட்டல் கட்டணம் மாதத்திற்கு 75 ரூபாய். இதற்கே என்னுடைய தாயார் தன்னுடைய வளையல்களை விற்பனை செய்தார் என கூறியுள்ளார். எனவே நான் ஹாஸ்டலில் தங்க முடியாது ஏனெனில் அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே தினமும் வீட்டிலிருந்து ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று படித்ததாக கூறியுள்ளார்.

அப்போது மாணவர்களுக்கான ஒரு காலாண்டுக்கான ரயில் பாஸ் கட்டணம் 7 ரூபாய் தான் அந்த வகையில். காலை 5 50 மணிக்கு பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து ரயில் ஏறுவேன் 6.25 மணிக்கு இறங்கிவிடுவேன், 9 மணிக்கு கல்லூரி தொடங்கும் மீண்டும் மாலை 6.10 மணிக்கு ரயிலில் ஏறுவேன் 6.45க்கு வீடு திரும்ப வேண்டும் என கூறி இருக்கிறார்.

Recommended For YouFastag முதல் சிகரெட் விலை வரை: பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரப் போகும் முக்கிய மாற்றங்கள்!!Fastag முதல் சிகரெட் விலை வரை: பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரப் போகும் முக்கிய மாற்றங்கள்!!

இப்படி ரயிலில் பயணிக்க வேண்டி இருப்பதால் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணி நேரம் பிளாட்ஃபார்மிலேயே தங்க வேண்டி இருக்கும். அந்த சமயத்தில் பிளாட்ஃபார்மில் அமர்ந்து கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் பாடங்களை படித்துக் கொண்டிருப்பேன் என கூறி இருக்கிறார். அப்போது என்னுடைய தாயார் மட்டுமே வீட்டில் சம்பாதிக்கக்கூடிய நபர் ஒரு நாளைக்கு மூன்று ரூபாய் தான் அவருக்கு கிடைத்த வருமானம் ,எனவே என்னால் முடிந்த அனைத்தையும் தியாகம் செய்துதான் இந்த கல்லூரி படிப்பை நான் முடித்தேன் என கூறியிருக்கிறார்.

கல்லூரி ,வேலை, தொழில் என மூன்றிலுமே பொறுமை, கவனம் , சிக்கனம் மற்றும் ஒழுக்கம் ஆகியவை தான் எனக்கு வெற்றியை தந்தன இவை மெதுவான வெற்றியைத் தரும் ஆனால் அது நீடித்த நிலைத்த வெற்றியாக இருக்கும் என கூறியிருக்கிறார். என்னை போன்ற ஒரு விஞ்ஞானியை உருவாக்கிய அந்த ரயில்வே பிளாட்பார்மை என்னுடைய மனைவிக்கு காட்டினேன் என 2015 ஆம் ஆண்டு புகைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். பெரியநாயக்கன்பாளையத்தின் இந்த ஃபிளாட்பார்ம் தான் 5000 கோடி சொத்து மதிப்பு கொண்ட வேலுமணி என்பவரை உருவாக்கி இருக்கிறது.

Share This Article English summary

How a small Railway platform created a businessman Thryocare Velumani?

The Success story of Dr. A. Velumani, founder of Thyrocare, shows How patience, focus, frugality and discipline gives slow but sustainable success. Story first published: Friday, January 30, 2026, 17:03 [IST] Other articles published on Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *