Breaking: தங்கம், வெள்ளியின் ஆட்டத்துக்கு முடிவா? தடாலடியாக சரியும் விலை!! இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?

goldsilverf-1769754621

  பர்சனல் பைனான்ஸ்

தங்கம், வெள்ளியின் ஆட்டத்துக்கு முடிவா? தடாலடியாக சரியும் விலை!! இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?

Personal Finance oi-Devika Manivannan By Published: Friday, January 30, 2026, 12:01 [IST] Share This Article

ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பெருமளவில் ஆட்டம் காட்டியது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை இந்த ஒரு மாத காலத்திலேயே 35,000 ரூபாய் வரை உயர்ந்தது. வெள்ளியின் விலை கிராமுக்கு 150 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது.

இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாற்று உச்சத்தை தொட்டன. இந்த நிலையில் இன்றைய தினம் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் சரிவடைந்துள்ளன. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 6% அதாவது 10,000 ரூபாய் குறைந்து காலை தொடக்கத்திலேயே 1, 61,000 ரூபாய் என வர்த்தகமானது. வெள்ளியை பொருத்தவரை ஒரு கிலோ வெள்ளியின் விலை 24,000 ரூபாய் அதாவது 6 சதவீதம் குறைந்து 3, 75,990 ரூபாயாக வர்த்தகமானது.

தங்கம், வெள்ளியின் ஆட்டத்துக்கு முடிவா? தடாலடியாக சரியும் விலை!! இனி வரும் நாட்களில் என்ன நடக்கும்?

உலக சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை நேற்றைய தினம் 5594 டாலர்களாக புதிய வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில் இன்றைய தினம் 1%க்கு மேல் சரிந்து 5206 டாலர்கள் என வர்த்தகம் ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் நேற்று 121 டாலர்கள் என புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று விலை சரிந்து 110 டாலர்கள் என வர்த்தகம் ஆகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் சரிவடைந்தது தான் இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் சில்லறை விற்பனையிலும் இதன் விலை குறைவதற்கு முக்கிய காரணம். இப்படி பல மடங்கு வேகமாக உயர்ந்த சங்கத்தின் விலை இன்று குறைய தொடங்கி இருக்கிறதே இது நீடிக்குமா இனிவரும் நாட்களிலும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கலாமா அல்லது ஆசை காட்டி மோசம் செய்யுமா என்ற குழப்பம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

Also Readகுறைந்தது தங்கம், வெள்ளி விலை!! இப்படி ஒரு சான்ஸ் மீண்டும் கிடைக்காது!! டிரம்ப் வாய திறந்துட்டா பிரச்சினை!!குறைந்தது தங்கம், வெள்ளி விலை!! இப்படி ஒரு சான்ஸ் மீண்டும் கிடைக்காது!! டிரம்ப் வாய திறந்துட்டா பிரச்சினை!!

இன்றைய தினம் தங்கத்தின் விலை சரிந்ததற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து மீண்டும் மற்ற முதலீடுகளை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர்.

இரண்டாவது தங்கம், வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை எட்டி விட்டது என பல்வேறு முதலீட்டாளர்களும் அதில் லாபம் பார்க்கத் தொடங்கினர். அதிகமானவர்கள் விற்பனை செய்ததால் தங்கம், வெள்ளி விலை சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கை எடுக்காததால், டாலரின் மதிப்பு வலுவடைய தொடங்கியது. இதுவும் இந்த உலோகங்களின் விலை குறைவதற்கு காரணம்.

Recommended For Youதினம் ஒரு நாட்டுக்கு மிரட்டல் விடுக்கலனா டிரம்புக்கு தூக்கம் வராது போல!! இன்று கனடா!!தினம் ஒரு நாட்டுக்கு மிரட்டல் விடுக்கலனா டிரம்புக்கு தூக்கம் வராது போல!! இன்று கனடா!!

இந்த நிலையில் இனிவரும் நாட்களில் தங்கம் விலை சரிவடையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் ஃபின்மார்ட் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை ஏற்ற இறக்கமாக தான் இருக்கும் என கூறுகிறார். இதற்கு முக்கிய காரணம் ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை, இந்திய பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இவை அனைத்தும் அடுத்த கட்டமாக தங்கம் விலை ஏறுமா இறங்குமா என்பதை தீர்மானிக்கும் என கூறுகிறார்.

எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,65,000 முதல் 1,61,000 வரை சரியலாம் அதே வேளையில் உயரும்போது 1, 74,400 இல் இருந்து 1,80,000 ரூபாய் வரை உயரலாம் என்கிறார். வெள்ளி விலை 3,88,000 ரூபாய் வரை சரிந்தும் 4,22,000 வரை உயர்வதற்கும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார். தங்கம் வெள்ளியின் விலை ஏறுமா இறங்குமா என்பதை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் விலை குறையும் போது வாங்கும் உத்தியை கையாள வேண்டும் என கூறுகிறார்.

Share This Article English summary

Gold and silver plunge 6% on MCX after record highs: Time to buy the dip?

Gold and silver futures on MCX opened sharply lower on Friday, with gold down 6% to Rs 1,61,000 per 10g and silver dropping 6% to Rs 3,75,900/kg after hitting record highs earlier in the week. Story first published: Friday, January 30, 2026, 12:01 [IST] Other articles published on Jan 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *