பட்ஜெட் 2026: SBI கண்டிப்பாக சொன்ன விஷயம்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?

befunky-collage39-1769687024

  செய்திகள்

பட்ஜெட் 2026: SBI கண்டிப்பாக சொன்ன விஷயம்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?

News oi-Pugazharasi S By Published: Thursday, January 29, 2026, 17:14 [IST] Share This Article

முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும் மக்களிடையே சேமிப்பு பழக்கம் குறைந்து வருவதால், வங்கி டெபாசிட்களை மீண்டும் கவர்ச்சிகரமானதாக மாற்ற எஸ்பிஐ ஆய்வறிக்கையானது அரசாங்கத்திற்கு ஒரு மாஸ் திட்டத்தை கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக, வரிச் சலுகை தரும் பிக்சட் டெபாசிட்களுக்கான 5 ஆண்டு லாக்-இன் காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பதுதான் அந்த அதிரடி கோரிக்கை. இதன் மூலம் மியூச்சுவல் ஃபண்டின் ELSS திட்டத்திற்கு நிகரான அந்தஸ்து எஃப்.டி-க்களுக்கும் கிடைக்கும்.

அதேபோல், வட்டிக்கு விதிக்கப்படும் வரியை LTCG மற்றும் STCG போல மாற்றி அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பட்ஜெட் FD முதலீட்டாளர்களின் வாழ்வில் இனிப்பை சேர்க்குமா? SBI-ன் இந்த 3 முக்கிய பரிந்துரைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

பட்ஜெட் 2026: SBI கண்டிப்பாக சொன்ன விஷயம்.. நிர்மலா சீதாராமன் முடிவு என்ன..?

சேமிப்புக்கு அவசியம்?

பட்ஜெட் 2026 ஆனது பிப்ரவரி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். நடுத்தர மக்களின் சேமிப்பை ஊக்குவிக்க நிபுணர்கள் மத்தியில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதில் எஸ்பிஐ-ன் பரிந்துரையானது சேமிப்பை ஊக்குவிக்க மிக அவசியமானதாக பார்க்கப்படுகிறது.

தற்போது பிக்சட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டிக்கு உங்களின் வருமான வரி வரம்பு படி வரி விதிக்கப்படுகிறது. இது 30% வரி வரம்பில் உள்ளவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். இந்த சூழலில் தான் எஸ்பிஐ பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளை போலவே, எஃப்.டி வட்டியையும் நீண்ட கால மூலதன ஆதாய வரி மற்றும் குறுகிய கால ஆதாய வரி என்ற அடிப்படையில் வகைப்படுத்தி வரி விதிக்க வேண்டும் என்கிறது. இதன் மூலம் 30% வரி செலுத்துபவர்கள், எஃப்டி-க்கு 12.5% வரி அல்லது 20% வரி மட்டுமே செலுத்துவார்கள். இது வரி வருமானத்தை குறைப்பதாக தோன்றினாலும், வங்கிகள் டெபாசிட் விகிதத்தை அதிகரிக்க வழிவகுக்கும்.

லாக் இன் காலம் குறைக்க வேண்டும்?

தற்போது 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெற வேண்டுமானால், நீங்கள் 5 ஆண்டுகால வரி சேமிப்பு எஃப்.டி-ல் முதலீடு செய்ய வேண்டும். மியூச்சுவல் ஃபண்டின் வரி சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ( ELSS) (3 ஆண்டுகள் லாக்-இன் காலம்) போலவே, எஃப்.டி திட்டங்களுக்கும் லாக்-இன் காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட காலம் காத்திருக்காமல், 3 ஆண்டுகளிலேயே பணத்தை எடுக்க முடியும் என்பதால், அதிக மக்கள் வங்கிகளில் முதலீடு செய்வார்கள்.

TDS விதிகளில் தளர்வு இருக்குமா?

சேமிப்பு கணக்கு மற்றும் FD வட்டியில் பிடிக்கப்படும் டிடிஎஸ் (TDS) முறையை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபகாலமாக, மக்கள் வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்வதை விட, பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக முதலீடு செய்கிறார்கள். இதனால் வங்கிகளிடம் இருக்கும் டெபாசிட் அளவு குறைந்து வருகிறது. இந்த இடைவெளியை குறைக்கவே இந்த அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது அவசியம் என்றாலும், சேமிப்பை அதிகரிப்பதும் இதன் முக்கிய நோக்கமாக பர்க்கப்படுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Will Budget 2026 implement SBI’s request to tax FD interest like LTCG/STCG and cut the tax-saver lock-in to 3 years?

SBI request for Budget 2026 seeks to tax FD interest as LTCG/STCG and reduce tax-saver lock-in to three years, aiming to boost bank deposits. Story first published: Thursday, January 29, 2026, 17:14 [IST] Other articles published on Jan 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *