சென்னை தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் இப்படியா நடக்கணும்.. மக்கள் ஷாக்..!!
News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Thursday, January 29, 2026, 10:17 [IST] Share This Article
Gold Rate Today: சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு இன்று அப்படியே சென்னை ரீடைல் சந்தையில் பிரதிபலித்துள்ளது என்றால் மிகையில்லை. சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை 1190 ரூபாய் உயர்ந்து 16,800 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதேபோல் 18 கேரட் தங்கம் விலை 875 ரூபாய் உயர்ந்து 13900 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
வெள்ளி தான் இன்று பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு கிலோ வெள்ளி விலை ரீடைல் சந்தையில் 4 லட்சத்தை தொட்டுள்ள அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத மக்களுக்கு இன்று கூடுதல் அதிர்ச்சி வந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு 25 ரூபாய் அதாவது கிலோவுக்கு 25000 ரூபாய் உயர்ந்து 1 கிலோ வெள்ளி விலை 4,25,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் 24 கேரட் தங்கம் விலை 1,299 ரூபாய் உயர்ந்து 18,328 ரூபாயாக உள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் பியூச்சர்ஸ் விலை 8.67 சதவீதம் உயர்ந்து 180,293 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி பியூச்சர்ஸ் விலை 4,04,979 ரூபாயாக உள்ளது.
அமெரிக்க டாலர் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்ததுள்ளது, மேலும் உலகளவில் தொடரும் புவிசார் அச்சங்களும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. தங்க விலை வியாழக்கிழமை ஆசிய வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியது. ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் விலை 5,600ஐ முதல் முறையாகத் தொட்டது. இதேபோல் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 119 டாலர் அளவை தொட்டது.
இந்தியாவில் தற்போது திருமண சீசன் துவங்கியிருக்கும் வேளையில் ரீடைல் சந்தையில் அதிகளவிலான டிமாண்ட் உருவாக வேண்டிய காலம், ஆனால் தங்கம், வெள்ளியின் அதிரடி விலை உயர்வால் கடந்த ஆண்டை விட இக்காலக்கட்டத்தில் சுமார் 60 சதவீத வர்த்தகம் குறைந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் காரணத்தால் அதிகப்படியான மக்களை வாங்குவதை குறைத்துள்ளனர்.
தங்க விலை 2026ஆம் ஆண்டில் இதுவரை 27 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் 64 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த உயர்வு பதிவாகியுள்ளது. வெள்ளி விலை இந்த ஆண்டு 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
இரு உலோகங்களின் இந்த பெரும் உயர்வுக்கு முக்கிய காரணம் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேடுவது தான். இதேபோல் மத்திய வங்கிகளும் தொடர்ந்து தங்கம், வெள்ளியை வாங்குவதல் சந்தையில் தங்கம் – வெள்ளி சப்ளையை தாண்டி டிமாண்ட் அதிகமாக உள்ளது. இதனால் விலை உயர்வு தவிர்க்க முடியாத விஷயமாக மாறியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்புள்ள உலோகங்கள் உலக அளவில் பொருளாதார நிச்சயமின்மை, புவிசார் பதற்றங்கள் மற்றும் பணவீக்க அச்சம் அதிகரிக்கும் போது முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாறுகின்றன. கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பிரச்சனைகள் இந்த ஆண்டும் இருக்கும் காரணத்தால் தங்கம், வெள்ளி முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
டாலருடன் தங்கத்திற்கு எதிர்மறையான தொடர்பு உள்ளதால், தங்கத்தின் விலையை மேலும் உயர்த்துகிறது. டாலர் வீழ்ச்சியடையும் போது தங்க விலை உயரும் என்பது முதலீட்டு சந்தையின் முக்கிய கேட்பாடு.. இந்த ஆண்டு டாலரின் பலவீனம் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுக்கும் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.
Share This Article English summary
Chennai Gold rate today shocks everyone; New Historic price check 24k, 22k, 18k rates
Chennai Gold rate today shocks everyone; New Historic price check 24k, 22k, 18k rates Story first published: Thursday, January 29, 2026, 10:17 [IST] Other articles published on Jan 29, 2026
