Breaking: தங்கம் ஓகே.. ஆனால் வெள்ளி-க்கு நோ..ஏன்? வெள்ளி மீதான முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள்..?

befunky-collage31-1769603228

  செய்திகள்

தங்கம் ஓகே.. ஆனால் வெள்ளி-க்கு நோ..ஏன்? வெள்ளி மீதான முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள்..?

News oi-Pugazharasi S By Published: Wednesday, January 28, 2026, 17:57 [IST] Share This Article

முதலீடு என்று வந்துவிட்டால் நம் ஊர் மக்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே தங்கம் தான். ஆனால், சமீபகாலமாக வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்வதை பார்த்துவிட்டு, வெள்ளியிலும் ஒரு கை பார்க்கலாமா எனப் பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர். அதை ஊக்குவிக்கும் விதமாக உள்ளூர் நிபுணர்கள் முதல் சர்வதேச நிபுணர்கள் வரையில், வெள்ளிக்கு ஆதரவாக கணிப்புகளை கொடுத்து வருகின்றனர்.

தங்கம் என்பது ஒரு பாதுகாப்பு புகலிடம் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் வெள்ளி அது ஒரு இரட்டை முனை கத்தி-யாக பார்க்கப்படுகிறது. தங்கம் ஒரு நிதானமான ஓட்டப்பந்தய வீரர் என்றால், வெள்ளி ஒரு முரட்டுத்தனமான காளையைப் போன்றது. எப்போது எகிறும், எப்போது விழும் என கணிப்பது மிகக் கடினம்.

தங்கம் ஓகே.. ஆனால் வெள்ளி-க்கு நோ.. ஏன்? வெள்ளி மீதான முதலீட்டுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகள்..?

ஆக விலை உயர்வை மட்டும் பார்த்து வெள்ளியில் முதலீடு செய்வது சரியான முடிவா? தங்கத்தை போல் வெள்ளி ஏன் ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதில்லை? வெள்ளியின் ஜொலி ஜொலிப்புக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அந்த ஆபத்துகள் என்னென்ன? வாருங்கள் பார்ப்போம்.

வரலாறு காணாத உச்சம்!

நடப்பு ஆண்டில் தங்கம், வெள்ளியின் விலையானது தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் வலுவான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக இன்று வெள்ளி விலையானது 6% மேலாக அதிகரித்து, 3,78,350 ரூபாயாக காணப்படுகிறது. இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில் காணப்படுகிறது. பாரம்பரியமாக தங்கம் பாதுகாப்பு புகலிடமாக இருந்தாலும், மேற்கண்ட இரு விலை உயர்ந்த உலோகங்களுமே சமீபத்திய காலமாக முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. அதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பங்குச் சந்தையிலும் அழுத்தம் காணப்படுகிறது. இதுவும் தங்கம் வெள்ளியில் முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

வேறு வேறு பாதையில் பயணம்!

பொதுவாக சந்தையில் பதற்றம் அதிகரிக்கும் போதும் அல்லது பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் ஏற்படும்போது, முதலீட்டாளர்களின் பார்வை தங்கம் வெள்ளியின் பக்கம் திரும்புகிறது. இதனால் இக்கட்டான காலகட்டங்களில் இவ்விரு உலோகங்களின் விலையும் உச்சம் எட்டி வருகிறது. இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டும் வெவ்வேறு பாதையில் பயணிக்கும் விலை உயர்ந்த உலோகங்கள். தங்கத்தை நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்த்தாலும், நின்று நிதானமாக விளையாடி வருகிறது. இது ஒரு நிலையான சொத்தாக பார்க்கப்படுகிறது. இது மெதுவாக அதிகரித்தாலும், அது சீரான வளர்ச்சியாகவும் இருக்கும். ஏற்றமும் சீராக இருக்கும். சரிவும் குறைவாக இருக்கும்.

ஆனால் வெள்ளி அப்படியில்லை ஏற்ற இறக்க சுழற்சி மிக அதிகம். ஏற்றமும் அதிகமாக இருக்கும். அதே அளவு சரிவும் இருக்கும். ஆக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் , தங்கம் உங்கள் பணத்தை பாதுகாக்கும். ஆனால் வெள்ளி லாபத்தை தரும் என்றாலும், அதில் ரிஸ்க்கும் அதிகம். இது ஒரு சாகச பயணம் போன்றது. வெள்ளியின் விலை வெறும் முதலீட்டை மட்டும் சார்ந்து இல்லாமல், தொழிற்சாலைகளின் தேவையையும் சார்ந்து இருப்பதால் தான் இந்தத் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.

நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 18% அதிகரித்துள்ளது. ஆனால் வெள்ளி விலையானது 50% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வலுவான தேவை உள்ளதையே காட்டுகிறது. நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் மத்தியில், மத்திய வங்கிகள் பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. மறுபுறம் வெள்ளியின் தேவை தொழில் துறையில் மிக அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் தேவைக்கு ஏற்ற சப்ளை இல்லை. ஆக இதுவும் விலை ஏற்றத்தை ஊக்குவித்து வருகிறது.

தங்கம் தான் பெஸ்ட் ஏன்?

தங்கம் ஏன் இன்றும் முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக இருக்கிறது.

மத்திய வங்கிகளின் நம்பிக்கை: சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு அரசியல் பதற்றங்கள் மத்தியில், உலகின் அனைத்து மத்திய வங்கிகளும் தங்கத்தை பாதுகாப்பு கருதி ஒரு முக்கிய கையிருப்புகளாக வைத்துள்ளன.

குறைவான ஏற்ற இறக்கம்: தங்கம் பல தசாப்தங்களாக சீரான உயர்வை கண்டு வருகிறது. இது பெரும் சரிவுகளை சந்திப்பதில்லை. மாறாக ஓரிடத்தில் நிலைபெற்று பின் உயரத் தொடங்கும். ஆனால் வெள்ளி அப்படியில்லை, ஏற்றமோ, இறக்கமோ அது அதிரடியான ஒன்றாகத் தான் இருந்து வருகிறது.

சிறந்த ஹெட்ஜிங்: உலகளாவிய போர் பதற்றங்கள், டாலர் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஏற்படும் காலங்களில் ,தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பாக செயல்படுகிறது. ஆக கடினமான கால கட்டங்களிலும் தங்கம் பாதுகாப்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

வெள்ளியில் ஏன் ரிஸ்க் அதிகம்?

சுழற்சி முறை: வெள்ளி விலை ராக்கெட் போல ஏறினாலும், அதே வேகத்தில் பாதாளத்திற்கும் இறங்கும். இதன் விலை உயர்வு நிலையானது அல்ல.

தொழில்துறை தேவை: தங்கம் ஒரு ஆபரணமாகவும், முதலீடாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலை தொழிற்சாலைகளின் தேவையை பொறுத்தே அமைகிறது. தொழில்துறை மந்தமானால் வெள்ளி விலை சரியலாம். ஆக இதில் ரிஸ்க் அதிகம். ஏனெனில் தொழில்துறை மந்தமானால், பொருளாதார வளர்ச்சி சரியும். அதுவும் தங்கத்திற்கு ஆதரவாக இருக்கும். அதாவது தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

அதிகப்படியான ஏற்ற இறக்கம்: கடந்த சில நாட்களாக வெள்ளி விலை காட்டும் வேகம், எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய சரிவை சந்திக்கும் என்பதையே உணர்த்துகிறது. ஆக இது சிறு முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடமாகவும் பார்க்கப்படுகிறது.

ஆக நீங்கள் அமைதியான மற்றும் பாதுகாப்பான லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் தங்கமே சிறந்த தேர்வு. ஆனால் அதிக ரிஸ்க் எடுத்து குறுகிய காலத்தில் பெரிய லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு வெள்ளி ஏற்றது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Gold vs. Silver: Why is gold considered a safe haven while silver is seen as a risky bet?

Gold offers stable long-term value and central-bank backing. Conversely, silver is highly volatile due to industrial cycles, leading to unpredictable price swings and risky corrections. Story first published: Wednesday, January 28, 2026, 17:57 [IST] Other articles published on Jan 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *