Breaking: 35 வயதாகிவிட்டதா? இன்னும் காலம் கடந்து விடவில்லை! தாமதமான தொடக்கத்திலும் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

befunky-collage10-1769346570

  பர்சனல் பைனான்ஸ்

35 வயதாகிவிட்டதா? இன்னும் காலம் கடந்து விடவில்லை! தாமதமான தொடக்கத்திலும் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

Personal Finance oi-Pugazharasi S By Published: Sunday, January 25, 2026, 18:39 [IST] Share This Article

முதலீட்டை பற்றிப் பேசும் பலரும் முதலில் சொல்லும் அட்வைஸ், இளம் வயதில் முதலீடு செய்யத் தொடங்குங்கள் என்பது தான். ஆனால், நம்மில் பலரும் 30 – 40 வயதில் கூட முதலீடு செய்யத் தொடங்கி இருக்க மாட்டோம். இது வாழ்க்கையின் பல நெருக்கடிகளால் அந்த வாய்ப்பை தவற விட்டிருக்கலாம். ஆக வயதாகி விட்டது, காலம் கடந்துவிட்டது, இனி நம்மால் கோடிக்கணக்கில் பணம் சேர்க்க முடியுமா? குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆவது, ஓய்வு காலத்தையும் நிம்மதியாக கழிக்க முடியாதா போன்ற கவலைகள் உங்கள் தூக்கத்தை கெடுக்கிறதா? கவலைப்படாதீர்கள்.

35 வயதாகிவிட்டதா? இன்னும் காலம் கடந்து விடவில்லை! தாமதமான தொடக்கத்திலும் கோடீஸ்வரர் ஆவது எப்படி?

20 – 25 வயதில் தொடங்காதது ஒரு குறை தான், ஆனால் 35-லும் தொடங்காமல் இருப்பது தான் மிகப்பெரிய தவறு. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கோடீஸ்வரர் ஆவதற்கு இன்னும் உங்களுக்கு 25 ஆண்டுகள் கால அவகாசம் இருக்கிறது. 35 வயதில் தொடங்குபவர்கள், இருபது வயது இளைஞர்களை விட அதிக வருமானம் ஈட்டக்கூடியவர்களாகவும், முதிர்ச்சியான முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

தாமதமான தொடக்கத்தை சரிசெய்ய ஸ்டெப் அப் எஸ்ஐபி (Step-up SIP) மற்றும் தீவிரமான முதலீடு போன்ற வித்தைகளை பயன்படுத்தினால், நீங்களும் 60 வயதில் கோடீஸ்வரராக ஓய்வு பெற முடியும். அந்த மேஜிக் எப்படி சாத்தியம்? அது காலத்தை வென்று உங்கள் பணத்தை வளர்ப்பதற்கான அந்த ரகசிய திட்டத்தை பார்ப்போம்..

இளம் முதலீட்டாளர் Vs அனுபவம் மிக்க முதலீட்டாளர்?

உதாரணத்திற்கு 25 வயதில் ஒரு இளைஞர் தனது முதலீட்டை தொடங்குகிறார் என வைத்துக் கொள்வோம். மாதம் 5,000 ரூபாயை எஸ்ஐபி மூலம் முதலீடு செய்கிறார். அதையும் 10% ஸ்டெப் அப் செய்வதாகவும், ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாக கணக்கிட்டால் அவரின் 35 வயதிலேயே 16 லட்சத்துக்கு மேல் கார்ப்பஸ் இருக்கும். இதே 35 ஆண்டுகளுக்கு மேற்கண்ட அதே முதலீட்டை 10% ஸ்டெப் அப் உடன் செய்தால், அவரின் 60 வயதில் 7.88 கோடி ரூபாய்க்கு மேல் கார்ப்பஸ் தொகையானது இருக்கும்.

இதே முதலீட்டை 35 வயதில் ஒருவர் தொடங்குவதாக கணக்கிட்டு பார்த்தால், அவரின் 60 ஆவது வயதில் 1.96 கோடி ரூபாய் கார்ப்பஸ் மட்டுமே இருக்கும். ஆக ஒன்று இளம் வயதில் முதலீட்டை தொடங்க வேண்டும். இல்லையேல் முதலீட்டை தொடங்கும்போது அதிகமாக செய்ய வேண்டியிருக்கும். அப்படியே அதிக தொகையை செய்தாலும் கூட, கூட்டு வட்டிக்கான கால அவகாசம் கிடைக்காது. இருப்பினும் 35 வயதில் ஒருவரின் சம்பள விகிதமும் அதிகமாக இருக்கும். ஆக 35 வயதில் மாதம் 20,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு 10% ஸ்டெப் அப் செய்தால் கூட, 12% வருமானம் சராசரியாக கிடைத்தாலும், 25 ஆண்டுகள் கழித்து 7.87 கோடி ரூபாய் மட்டுமே கார்ப்பஸ் ஆக இருக்கும்.

அனுபவமிக்க முதலீடு?!

ஆனால் 25 வயதில் ஒருவர் முதலீடு செய்யும் போது தவறுகள் பல செய்தாலும், அதை மாற்றிக் கொள்ள கால அவகாசம் கிடைக்கும். ஆனால் 35 வயதில் தான் முதலீடே செய்யத் தொடங்குகிறார்கள் எனில், நிச்சயம் தவறுக்கு இடம் இருக்க கூடாது. ஆக சுயமாக முடிவெடுத்து முதலீடு செய்வதை தவிர்த்து, சரியான ஆலோசனையுடன் திட்டமிடுவது நல்லது.
இருப்பினும் 25 வயதில் சந்தையில் சரிவு ஏற்பட்டால் கூட, முதலீட்டாளர்கள் பதற்றமடைந்து மொத்த முதலீட்டை எடுத்து விடுகிறார்கள். சிலர் முக்கியமில்லாத செலவுகளுக்காக பணத்தை எடுத்து செலவு செய்து விடுகின்றனர். இன்னும் சிலர் தொடர்ந்து முதலீடு செய்தாலும், அதிக வருமானம் என்று, அதிக ரிஸ்கும் எடுக்கிறார்கள். சொல்லப்போனால் 25 வயதில் பொறுமையுடன் காத்திருக்கவும் முடிவதில்லை. அவசர முடிவுகள், தேவையில்லாத ஆடம்பர செலவுகள், மற்றவர்கள் சொன்னார்கள் என முதலீடு, முதலீடு இடை நிறுத்தல் என பல இடையூறுகள் இருக்கும்.

ஆனால் 30 – 35 வயதுகளில் அப்படி இருக்காது. கட்டாயம் முதலீடு செய்தே ஆக வேண்டும். இலக்கை எட்டியாக வேண்டும் என்ற முதிர்ச்சியான அணுகுமுறை இருக்கும். குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல், ஓய்வுக்கால தேவை என எதற்காக சேமிக்கிறோம் என்ற தெளிவு இந்த வயதில் அதிகமாக இருக்கும். சந்தை ஏற்ற இறக்கங்களில் பதற்றமடையாமல், நீண்ட கால அடிப்படையில் காத்திருக்கும் பக்குவம் இவர்களிடம் அதிகம். ஆக வயதானாலும் அனுபவம் மிக்க முதலீட்டின் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியும். இருப்பினும் இளம் வயதில் சரியான ஆலோசனையுடன் முதலீடு செய்வது என்பது உங்கள் கூட்டு வட்டிக்கு போதிய கால அவகாசம் கொடுக்க உதவிகரமாக இருக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Can you still retire as a multi-millionaire: if you start your first SIP at age 35?

Starting at 35 isn’t late; your higher income and maturity allow for larger SIPs and strategic step-ups, effectively narrowing the gap to reach retirement goals. Story first published: Sunday, January 25, 2026, 18:39 [IST] Other articles published on Jan 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *