இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா? – Allmaa

gold-2026-01-25t165735-197-1769340761

  செய்திகள்

இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?

News oi-Devika Manivannan By Published: Sunday, January 25, 2026, 17:05 [IST] Share This Article

உலக அளவில் தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே உச்சத்தில் இருக்கின்றன. அது இந்தியா சந்தையிலும் வலுவாக எதிரொலிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1, 18,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 365 ரூபாய்க்கு ஒரு கிலோ 3,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு காரணங்கள் தங்கம் வெள்ளி விலையை தொடர்ச்சியாக உயர்த்திய வண்ணமே இருக்கின்றன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 100 டாலர்கள் என்ற அளவை கடந்து விட்டது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5000 டாலரை நெருங்கி விட்டது. இந்தியாவிலும் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உயர்ந்து தான் இருக்கின்றன.

இப்போது தங்கம், வெள்ளி வாங்கலாமா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை காத்திருக்கலாமா?

ஜனவரி 23ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை ஒரு கிலோ வெள்ளியின் விலை 3, 39 ,927 ரூபாய் என்றும் தங்கம் விலை 10 கிராம் 1,59,226 ரூபாய் என்றும் வரலாற்று உச்சபட்ச விலையில் வர்த்தகத்தை முடித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் எடுத்து வரக்கூடிய பல்வேறு நடவடிக்கைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாக அவர்களை பாதுகாப்பான என்ரிச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொன்முடி. 2026 ஆம் நிதியாண்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறு முகத்தில் தான் இருக்கும் என கூறுகிறார்.

இந்நிலையில் தான் மத்திய அரசு 2026-2027ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். தங்கம், வெள்ளி விலைகள் பூதாகரமாக இருக்கும் நிலையில் அது தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவாரா என அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தார். இந்த முறையும் அதே போன்ற ஒரு வரி குறைப்பு இருக்குமா என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது.

Also ReadGold Rate: 3 மாதங்களில் நடக்க வேண்டியது 25 நாட்களிலேயே நடந்தது எப்படி? இனி தங்கம் விலை என்ன ஆகும்?Gold Rate: 3 மாதங்களில் நடக்க வேண்டியது 25 நாட்களிலேயே நடந்தது எப்படி? இனி தங்கம் விலை என்ன ஆகும்?

ஒருவேளை மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரியை குறைக்கும் பட்சத்தில் உள்நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான கட்டணங்கள் குறைந்து அவற்றின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 2024ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.

2024ஆம் ஆண்டில் இறக்குமதி வரி 15% ஆக இருந்தது இதனால் முறைகேடான வழிகளில் தங்கம் இறக்குமதியும் தங்க கடத்தலும் அதிகரித்தது. இதனை முடிவுக்கு கொண்டு வர தான் இறக்குமதி வரியை குறைத்தார்கள். 15%இல் இருந்து 6% என 9% வரை வரி குறைக்கப்பட்டது. ஆனால் இந்த முறை அவ்வளவு பெரிய வரி குறைப்பு இருக்காது. ஏனெனில் வரியே 6% தான் உள்ளது, இதில் குறைத்தால் 1 முதல் 2% வரை குறைக்கலாம் ஆனால் பெரிய வரி குறைப்பு எதிர்பார்க்க முடியாது என சொல்லப்படுகிறது.

Recommended For Youதங்கம் நின்னு ஆடப் போகுது!! வெள்ளி ரெஸ்ட் எடுக்க போகுது!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!தங்கம் நின்னு ஆடப் போகுது!! வெள்ளி ரெஸ்ட் எடுக்க போகுது!! இவங்களே இப்படி சொல்லிட்டாங்களே!!

இருந்தாலும் பொதுமக்கள் தங்கம் , வெள்ளி விலையை குறைப்புக்கான அறிவிப்புகள் வருமா , பட்ஜெட் வரை தங்கம், வெள்ளி வாங்கும் முடிவினை தள்ளி போடலாமா என குழப்பத்தில் உள்ளனர். ஒரு வேளை இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம், வெள்ளி விலை குறையும். ஆனால் தற்போது விற்கும் விலையில் 1 சதவீதம் என்ற ஒரு சவரனுக்கு 1180 ரூபாய் தான் குறையும், 2 சதவீதம் வரி குறைந்தால் 2000 ரூபாய் தான் குறையும். எப்படியும் சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்ல போவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

Budget 2026: Should you Buy Gold and Silver now or wait till budget

As Gold and Silver prices are trading at all-time high, people are expecting import duty cut in the Union budget. Story first published: Sunday, January 25, 2026, 17:05 [IST] Other articles published on Jan 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *