பட்ஜெட்டுக்கு முன்னால் ஒரு ஐபிஓ வேட்டை! 6 நிறுவனங்கள் களத்தில்: எதில் முதலீடு செய்யலாம்?
Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 18:10 [IST] Share This Article
இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2026-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மறுபுறம் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருந்தாலும், ஐபிஓ (IPO) சந்தை மட்டும் சற்றும் வேகம் குறையாமல் ரத்த களரிக்கு மத்தியிலும் ஜொலித்து கொண்டிருக்கிறது.
வரும் வாரத்தில் (ஜனவரி 26 – 30), பெரிய நிறுவனங்கள் சற்று அமைதி காக்க, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SME) பட்டையை கிளப்ப தயாராகிவிட்டன. மொத்தம் 6 புதிய நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் கதவை தட்டுகின்றன. பட்ஜெட் தாக்கத்தால் சந்தை எந்தப் பக்கம் திரும்பினாலும், தரமான ஐபிஓ-க்களால் எப்போதும் லாபம் தரும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் உற்சாகமாக உள்ளனர். அதிக ஏற்ற இறக்கம் இருந்து வரும் இந்த சூழலில் உங்கள் பணத்தை எந்த ஐபிஓ-வில் பந்தயம் கட்டினால் சிறந்த லாபம் கிடைக்கும்? அந்த 6 நிறுவனங்கள் என்னென்ன? அது குறித்து முழுமையான அலசல் இதோ..

அடுத்த வாரம் களமிறங்கும் 6 நிறுவனங்கள்!
அடுத்த வாரம் (ஜனவரி 26 – 30) பங்குச் சந்தையில் மெயின் போர்டு ஐபிஓ-க்கள் ஏதும் இல்லாத நிலையில், முதலீட்டாளர்களின் ஒட்டுமொத்த கவனமும் SME (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) பக்கம் திரும்பியுள்ளது.
கஸ்தூரி மெட்டல் காம்போசிட்
மெட்டல் துறையில் இயங்கும் இந்த நிறுவனம் தனது ஐபிஓ-வை ஜனவரி இறுதியில் தொடங்குகிறது. அதற்கான பங்கு விற்பனை தொடங்கும் தேதி ஜனவரி 27. முடிவடையும் தேதி ஜனவரி 29. இந்த விற்பனையில் விலை வரம்பு ஒரு பங்கின் விலை 61 – 64 ரூபாயாகும். இப்பங்கானது சந்தையில் பிப்ரவரி 3 அன்று பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
என் எஃப் பி சம்பூர்ணா ஃபுட்ஸ் (NFP Sampoorna Foods)
உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனமும் ஜனவரி 27 – 29 நாட்களில் களமிறங்குகிறது. இந்த வெளியீட்டில் அதன் விலை வரம்பு ஒரு பங்கின் விலை 52 – 55 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் மூலம் நிறுவனமானது 24.53 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 3 அன்று பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனிஷ்க் அலுமினியம் இந்தியா (Kanishk Aluminium India)
கனிஷ்க் அலுமினியம் இந்தியா நிறுவனமும் ஜனவரி 28 – 30 அன்று ஐபிஓ சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 29.20 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த வெளியீட்டில் விலை வரம்பை ஒரு பங்கிற்கு 73 ஆக நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்குகள் பிப்ரவரி 4 அன்று பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்-சேஃப் எக்யூப்மென்ட்ஸ் (Msafe Equipments)
எம்-சேஃப் எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-வும் ஜனவரி 28 அன்று தொடங்கி, ஜனவரி 30 அன்று முடிவடைகிறது. அதன் பிறகு பிப்ரவரி 4 அன்று சந்தையில் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ-ன் அளவானது, புதிய பங்குகள் மற்றும் விற்பனைக்கான சலுகை (OFS) ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மொத்த மதிப்பு 66.42 கோடி ரூபாய் ஆகும். இதில் அதன் விலை வரம்பு ஒரு பங்கிற்கு 116 – 123 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அக்ரிஷன் நியூட்ராவேதா (Accretion Nutraveda)
அக்ரிஷன் நியூட்ராவேதா நிறுவனமும் ஜனவரி 28 அன்று தனது ஐபிஓ-வை தொடங்குகிறது. ஜனவரி 30 அன்று முடிவடைகிறது. இந்த ஐபிஓ -வின் மூலம் புதிய பங்குகளை விற்பனை செய்து 24.77 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளது. இப்பங்கின் விலை வரம்பு ஒரு பங்குக்கு 122 – 129 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கானது பிப்ரவரி 4 அன்று இந்தப் பங்குகள் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சி கே கே ரீடெய்ல் மார்ட் (CKK Retail Mart)
இந்த வாரத்தின் கடைசி ஐபிஓ-வாக சி கே கே ரீடெய்ல் மார்ட் களமிறங்குகிறது. இது ஜனவரி 30 அன்று தொடங்கி பிப்ரவரி 3 அன்று நிறைவடையும். இதன் விலை வரம்பு ஒரு பங்கின் விலை 155 – 163 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்குகள் பிப்ரவரி 6 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய பட்டியலிடல்கள்
1. ஷேடோஃபாக்ஸ் டெக்னாலஜிஸ் (Shadowfax Technologies) பங்குகள், ஜனவரி 28 அன்று, என் எஸ் இ மற்றும் பி எஸ் இ மெயின் போர்டில் பட்டியலிடப்படுகிறது.
2. டிஜிலாஜிக் சிஸ்டம்ஸ் (Digilogic Systems) பங்கானது, ஜனவரி 28 என் எஸ் இ மற்றும் பி எஸ் இ -ல் பட்டியலிடப்படவுள்ளது.
3. கேஆர்எம் ஆயுர்வேதா (KRM Ayurveda) பங்கானது ஜனவரி 29 அன்று, என் எஸ் இ மற்றும் பி எஸ் இ -ல் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.
4. ஷயோனா இன்ஜினியரிங் (Shayona Engineering) பங்கானது ஜனவரி 30 அன்று, என் எஸ் இ மற்றும் பி எஸ் இ -ல் பட்டியலிடப்படவுள்ளது.
5. ஹன்னா ஜோசப் மருத்துவமனை (Hannah Joseph Hospital) பங்கு, ஜனவரி 30 அன்று என் எஸ் இ மற்றும் பி எஸ் இ -ல் பட்டியலிட திட்டமிடப்பட்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Which of the 6 SME IPOs Opening next Week Should You Bid For?
With no mainboard IPOs this week, 6 SME issues like Kasturi Metal and Msafe Equipments take center stage. Which one offers the best listing gains.. Story first published: Saturday, January 24, 2026, 18:10 [IST] Other articles published on Jan 24, 2026
