2026ல் தங்கம் வாங்குவது லாபமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 ரகசியங்கள்!
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 24, 2026, 15:47 [IST] Share This Article
தங்கம் – இந்திய குடும்பங்களில் இது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் உற்ற நண்பன். 2025ல் யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இப்போது 2026-ன் தொடக்கத்திலேயே 10 கிராம் தங்கம் 1,50,000-ஐக் கடந்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இவ்வளவு விலை ஏறிய பிறகு இப்போது தங்கம் வாங்குவது புத்திசாலித்தனமா அல்லது விலை குறையும் வரை காத்திருக்க வேண்டுமா என்ற குழப்பம் ஒவ்வொரு முதலீட்டாளர் மனதிலும் இருக்கிறது.
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள், அமெரிக்க டாலரின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கத்தின் வரவு என 2026ல் தங்க சந்தை ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.

நீங்கள் ஒரு இல்லத்தரசியாக இருந்தாலும் சரி அல்லது லாபத்தை மட்டுமே குறிவைக்கும் ஒரு ஸ்மார்ட் முதலீட்டாளராக இருந்தாலும் சரி..இந்த 2026ம் ஆண்டில் உங்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்த 7 ரகசிய நன்மைகள் மற்றும் பாதுகாப்பாக தங்கம் வாங்குவதற்கான சிறந்த வழிகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
சிறந்த ஹெட்ஜிங்
இன்றைய காலக்கட்டத்தில் விலைவாசி உயர்வு என்பது நாம் ஓடும் வேகத்தை விட வேகமாக இருக்கிறது. 2026-ல் ஒரு லிட்டர் பெட்ரோலோ அல்லது ஒரு கிலோ மளிகை பொருளோ வாங்கும் போது, காகித பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போவதை நம்மால் உணர முடிகிறது. இங்கேதான் தங்கம் ஒரு பாதுகாப்பு அரணாக நிற்கிறது. ரூபாய் நோட்டுகளின் மதிப்பு குறையும் போது, தங்கத்தின் விலை தானாகவே உயர்கிறது. இதனால் உங்கள் பணம் அதன் மதிப்பை இழக்காமல் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. ஆக நீண்ட கால அடிப்படையில் மற்ற முதலீடுகளை காட்டிலும் சிறந்த லாபம் கொடுக்கலாம். இன்னும் எளிதாக சொல்லவேண்டுமானால் இன்னைக்கு நீங்க ஒரு குறிப்பிட்ட தொகையை பேங்க்ல வெச்சிருக்கிறதுக்கும், அதுக்கு தங்கம் வாங்கி வைக்கிறதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. இது காலம் போக போக உணர்த்தும்.
போர்ட்போலியோ பேலன்சிங்
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானது என்றாலும், அவை எப்போது வேண்டுமானாலும் சரியலாம். ஆனால், உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் தங்கம் இருந்தால், அது ஒரு சமநிலையை உருவாக்கும். இது அதிக ஏற்ற இறக்கத்தை எளிதாக கையாள உதவும்.
எப்போது வேண்டுமானாலும் பணமாக்கலாம்?
இந்தியாவில் அவசர தேவைக்கு தங்கத்தை விட சிறந்த நண்பன் வேறு யாரும் இல்லை. மற்ற சொத்துக்களை (நிலம், வீடு போன்றவை) விற்பதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும், ஆனால் தங்கத்தை நிமிடங்களில் நகை கடைகளிலோ அல்லது டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி விரைவாகப் பணமாக மாற்ற முடியும்.
பாதுகாப்பு சொத்து?
சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற காலகட்டங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பங்குச் சந்தைகளில் நிலவி வரும் மோசமான சூழல் என பல காரணிகள் மத்தியில், முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை நோக்கி நகர வழிவகுக்கலாம்.
நீண்ட கால மதிப்பு உயரும்!
வரலாற்று ரீதியாக தங்கத்தின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறுகிய கால மாற்றங்கள் இருந்தாலும், தங்கம் ஒரு நம்பகமான செல்வத்தை பாதுகாக்க உதவும்.
முதலீடு செய்ய பல வழிகள்
ஒரு காலத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் பெரிய தொகையுடன் நகைக்கடைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இன்று உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப மிக எளிதாக முதலீடு செய்ய பல நவீன வழிகள் வந்துவிட்டன.
வரிச் சலுகை
அரசின் தங்க பத்திரங்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும். அதோடு முதிர்ச்சியின் போது வரி சலுகை கிடைக்கும். இதுபோன்ற முதலீடுகள் நீண்ட கால அடிப்படையில் கவர்ச்சிகரமான முதலீடாக அமைகின்றன.
எங்கு பாதுகாப்பாக வாங்கலாம்?
வங்கிகள்: இன்றைய காலகட்டத்தில் பல வங்கிகள் தரச்சான்றிதழ் பெற்ற தங்க நாணயங்களை விற்கின்றன. ஆக நீங்கள் சுத்தமான தங்கத்தை வாங்க விரும்பினால் வங்கிகளிடம் வாங்கலாம்.
பிரபல நகைக்கடைகள்: நேரடியாக சென்று, தொட்டு பார்த்து நகை அல்லது நாணயங்கள் வாங்க விரும்புபவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஆக பிரபல நகை கடைகளான தனிஷ்க், மலபார் கோல்ட்,கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்தும், உள்ளூர் அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பி.ஐ.எஸ் ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட தங்கத்தை வாங்கலாம்.
டிஜிட்டல் கோல்ட் ஆப்கள்: பேடிஎம், போன்பே, கூகுள் பே மற்றும் சேப்கோல்ட் உள்ளிட்ட ஆப்கள் மூலம் தங்கத்தை ஆன்லைன் மூலம் எளிதாக வாங்க முடியும். சேமிக்கவும் முடியும்.
கோல்ட் இடிஎஃப் & மியூச்சுவல் ஃபண்ட்ஸ்: பங்கு தரகர்கள் அல்லது நிதி நிறுவனங்களின் ஆப்கள் மூலமாகவும் (ஜெரோதா, குரோமற்றும் அப்ஸ்டாக்ஸ்) மூலம் மேற்கண்ட பேப்பர் தங்கத்தை முதலீட்டாளர்கள் வாங்கலாம்.
தங்க பத்திரம்: ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்க பத்திரங்களில் எளிதாக முதலீடு செய்யலாம். இது பாதுகாப்பான முதலீடு. அதோடு பத்திர வட்டி வருமானமும் உண்டு. விலை உயரும் போது மூலதன மதிப்பு உயரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why Should You Invest in Gold: 7 Key Benefits and Top Buying Options.
Gold investment in India secures wealth against inflation, offers high liquidity and balances portfolios. Buy via reputable jewellers, SGBs, or digital platforms for long-term growth. Story first published: Saturday, January 24, 2026, 15:47 [IST] Other articles published on Jan 24, 2026
