Breaking: ஓய்வு காலத்திலும் ஓயாத வருமானம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 சூப்பர் முதலீடுகள்!

befunky-collage-2026-01-24t124315-417-1769238807

  பர்சனல் பைனான்ஸ்

ஓய்வு காலத்திலும் ஓயாத வருமானம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 சூப்பர் முதலீடுகள்!

Personal Finance oi-Pugazharasi S By Published: Saturday, January 24, 2026, 12:43 [IST] Share This Article

வேலைக்குச் சென்றால் தான் பணம் வரும் – இது அந்த காலம். நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போதும் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும். இதுதான் இன்றைய ஸ்மார்ட் காலம்.

நம்மில் பலருக்கும் ஓய்வு காலம் என்றாலே ஒருவித பயம் கலந்த கவலை இருக்கும். மாத சம்பளம் நின்றுவிட்டால் அன்றாடச் செலவுகளை எப்படி சமாளிப்பது? குழந்தைகளின் படிப்பு, மருத்துவச் செலவு, வீட்டுத் தேவைகள் எனப் பணத்திற்காக அடுத்தவரை எதிர்பார்க்க வேண்டியிருக்குமோ என்ற கேள்விகள் நம் நிம்மதியை குலைக்கலாம்.

ஓய்வு காலத்திலும் ஓயாத வருமானம்! உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் 5 சூப்பர் முதலீடுகள்!

ஆனால், இப்போதே சரியான முறையில் பாசிவ் இன்கம் (Passive Income) வருமான வழிகளில் முதலீடு செய்தால், 60 வயதுக்குப் பிறகு நீங்கள் பணத்திற்காக வேலை செய்ய வேண்டியதில்லை; உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கும். ஆக நிதி ரீதியாக யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. பங்குச் சந்தை முதல் ரியல் எஸ்டேட்டின் வருமானம் வரை, உங்கள் கையில் இருக்கும் சேமிப்பை ஒரு நிரந்தர பென்ஷன் இயந்திரமாக மாற்றும், அந்த 5 சூப்பர் முதலீட்டு ரகசியங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

1, மூத்த குடிமக்கள் திட்டம்

மூத்த குடிமக்கள் திட்டமானது அஞ்சலகத்தின் மிக பிரபலமான ஒரு திட்டமாகும். ஓய்வூதியதாரர்களுக்கு ஏற்ற திட்டமாக பார்க்கப்படும் இதில், முதலீட்டின் மூலம் ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு தற்போதைய சூழலில் வட்டி விகிதம் 8.2% ஆகும். முதலீட்டு வரம்பு 30 லட்சம் ரூபாய் வரை செய்து கொள்ளலாம். இது ஒரு 5 ஆண்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் மிகப்பெரிய நல்ல விஷயம் வட்டி வருமானமானது நேரடியாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வரி சலுகையும் உண்டு.

2. வாடகை வருமானம் தரும் ப்ராபர்டி

உங்களுக்கு சொந்தமாக கடையோ, பிளாட் அல்லது வீடு என எதுவாக இருந்தாலும், அதை வைத்து ஓய்வு காலத்தில் வருமானம் பெற முடியும். இதை ஒரு முறை முதலீடு செய்து வாங்கிவிட்டால், மாத மாதம் வாடகை மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். இருப்பினும் இதில் நீங்கள் வாங்கும் சொத்து அமைந்திருக்கும் இடம் ஆகியவை கவனத்தில் கொள்வது நல்லது. மேலும் வாடகைக்கு வருபவர்களின், ஆதாரங்கள், முறையான ஒப்பந்தம் செய்வது நல்லது. இது வாடகை தாமதமானலோ அல்லது சொத்தில் ஏதேனும் பிரச்சனையை ஏற்படுத்தினாலும் உதவிகரமாக இருக்கும்.

3.டிவிடெண்ட் தரும் முதலீடுகள்

உங்களால் சற்று ரிஸ்க் எடுக்க முடியும் என்றால், டிவிடெண்ட் வருமானம் கொடுக்கக் கூடிய பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். இதில் மூலதனமும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடையும். இருப்பினும் சரியான ஃபண்டுகள் அல்லது பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். இல்லையேல் மூலதனத்திற்கு பிரச்சனை வரலாம்.

4. மாதாந்திர வருமான திட்டம்

அஞ்சலகத்தின் மற்றொரு பிரபல திட்டம் தான் மாதாந்திர வருமான திட்டம். (MIS). இந்த திட்டத்தின் மூலம் நிரந்த,மாக மாத மாதம் ரிஸ்க் இல்லாமல் ஒரு வருமானம் பெற முடியும். இதில் ஒருவர் 9 லட்சம் வரையில், இருவர் இணைந்து அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம். இதன் மூலம் வருமானம் சுமார் 7.4% கிடைக்கும். இந்த திட்டத்தின் காலம் 5 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வங்கி கணக்கில் வட்டி வருமானம் கிரெடிட் ஆகும்.

5.வருடாந்திர திட்டம் அல்லது பென்ஷன் திட்டம்

உங்களுக்கு ஓய்வு காலத்திற்கு பிறகும் தொடர்ந்து பென்ஷன் போன்று ஒவ்வொரு மாதமும் வருமானம் வேண்டும் என்றால், பெரிய தொகையை முதலீடு செய்து வருடாந்திர திட்டம் மூலம் வருமானம் பெறலாம். இதை உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article English summary

How can these 5 passive income streams help you achieve financial independence?

Build a wealth machine through dividend stocks, real estate, and digital assets. These five passive streams ensure lifelong financial independence. Story first published: Saturday, January 24, 2026, 12:43 [IST] Other articles published on Jan 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *