ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இந்த தேதியில இந்த இடத்துக்கு போங்க வேலை முடிஞ்சிடும்!!
News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, January 23, 2026, 13:03 [IST] Share This Article
ரேஷன் கார்டுகள் நம் முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கான ஒரு ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது.
ரேஷன் கார்டு மூலமாக தான் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாகவும், மானிய விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை ,பொங்கல் பரிசு தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் தான் அடிப்படை ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.

ரேஷன் கார்டுகளில் நம்முடைய பெயர், முகவரி ஆகியவற்றை எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது நல்லது. அப்படி அப்டேட்டாக இருந்தால் தான் மகளிர் உரிமை தொகை , பொங்கல் பரிசு தொகை போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தவறாமல் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
இந்நிலையில் ரேஷன் கார்டுகள் மக்கள் இலவசமாக திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சார்பாக ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வழக்கமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் இந்த முகாம் என்பது நடத்தப்படும். ஆனால் இந்த மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வுகள் இருந்ததால் இரண்டாவது வாரத்தில் வழக்கமாக நடத்தப்படும் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படவில்லை.
Also Read
இந்தியாவில் வெள்ளி விலை உயர்வில் மோசடியா? விசாரணை நடத்த கோரி மத்திய அரசுக்கு கடிதம்!!
எனவே அதற்கு மாற்றாக ஜனவரி 24ஆம் தேதியான நாளைய தினம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கார்டை கொண்டு சென்று இந்த முகாமில் பங்கேற்று தங்களுக்கு தேவையான மாற்றங்களை இலவசமாகவே அப்டேட் செய்து கொள்ள முடியும். ஜனவரி 24 நாளைய தினம் காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை அனைத்து மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இந்த குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Recommended For You
வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுடைய ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டிருக்கிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பது , பெயர் நீக்குவது , முகவரி மாற்றுவது புதிதாக நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்வது, மூத்த குடி மக்கள், மாற்று திறனாளிகளுக்கான ரேஷன் அட்டைகளுக்கு அங்கீகார சான்று வழங்குவது பெறுவது பயன்படுத்திக் கொள்ளலாம்.
Share This Article English summary
Ration card Monthly grievance redressal camps to be held tomorrow
Monthly Public Distribution System (PDS) grievance redressal camps for January month to be held on 24th announces Tamilnadu government. Story first published: Friday, January 23, 2026, 13:03 [IST] Other articles published on Jan 23, 2026
