Breaking: வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!

goldbarf-1769140738

  செய்திகள்

வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!

News oi-Devika Manivannan By Published: Friday, January 23, 2026, 9:31 [IST] Share This Article

உலகம் முழுவதுமே தங்கம் வெள்ளி விலை உயர்வு தான் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. சர்வதேச அளவில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் உடனடியாக அதன் தாக்கத்தை தங்கம், வெள்ளி விலையில் தான் நாம் உணர முடிகிறது.

போர்பதற்றம், புவிசார் மோதல்கள், வர்த்தக மோதல்கள் என சர்வதேச அரசியலிலும் சர்வதேச பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எந்த ஒரு அறிவிப்பும் எந்த ஒரு நடவடிக்கையும் உடனடியாக தங்கம், வெள்ளி விலையை உயர்த்திவிடுகின்றன. ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரையிலான இந்த மூன்று வார காலத்திலும் சர்வதேச காரணிகள் தங்கம் வெள்ளி விலையை பல மடங்கு உயர்த்தி விட்டன.

வேண்டுமென்றே உயர்த்தப்படுகிறதா தங்கம், வெள்ளி விலை? உலக சந்தையில் நடந்த டிவிஸ்ட்!!

ஜனவரி மாத தொடக்கத்தில் வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக பதற்றம் ஏற்பட்டு தங்கம் வெள்ளி விலை உயர்ந்தது. இரண்டாவது வாரத்தில் ஈரான் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மூன்றாவது வாரத்தில் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்படி ஒவ்வொரு வாரமும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு வித்திடும் வகையிலான ஏதேனும் ஒரு விஷயம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

நேற்றைய தினம் தான் கிரீன்லாந்து விவகாரம் சற்றே தணிந்தது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கையை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இதனால் பங்குச்சந்தைகள் மீண்டு வந்தன முதலீட்டாளர்கள் ஆனால் ஸ்பாட் கோல்டு, ஸ்பாட் சில்வர் விலை மட்டும் குறையாமலேயே இருக்கிறது. பல்வேறு காரணிகள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன.

ஸ்பாட் கோல்டு மற்றும் ஸ்பாட் சில்வர் விலை புதிய வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு தடாலடியாக உயர்ந்து 4967 டாலர்கள் என உச்சத்தை தொட்டது. ஒரு அவுன்ஸ் என்பது 28.34 கிராம் தங்கம் ஆகும். அப்படி பார்த்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 175 டாலர்கள், இந்திய ரூபாயின் மதிப்பில் 16,000 ரூபாய் ஆகும். இது வரலாற்றிலேயே இல்லாத உச்சம் ஆகும்.

Also Readதங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!தங்க நகையை அடகு வச்சு கடன் வாங்க போறீங்களா? பிப்ரவரி 1 மத்திய பட்ஜெட் வரை வெயிட் பண்ணுங்க!!

தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 5000 டாலர்களை எட்டி விடும் என்றுதான் பல்வேறு நிறுவனங்களும் கணித்திருந்தன ஆனால் இந்த மாத இறுதிக்குள்ளாகவே அந்த விலையை எட்டி விடுமோ சொல்லும் அளவுக்கு தங்கம் விலை என்பது உயர்வு கண்டிருக்கிறது. ஸ்பாட் கோல்டு ஒரு வார காலத்திலேயே சுமார் 7.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸ் கிட்டத்தட்ட 100 டாலர்களை நெருங்கி விட்டது. ஸ்பாட் சில்வர் விலை 98.70 டாலர்கள் என வரலாற்று உச்சத்தை தொட்டிருக்கிறது. ஒரே நாளில் ஸ்பாட் வெள்ளியின் விலை ஒரு 2.17 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த ஒரு வார காலத்தில் 11% உயர்வு கண்டிருக்கிறது.

Recommended For Youதங்கம், வெள்ளி விலை உயர்வில் லாபம் பார்க்கணுமா? முதலீடு செய்ய உகந்த Gold, Silver ETF திட்டங்கள்!! தங்கம், வெள்ளி விலை உயர்வில் லாபம் பார்க்கணுமா? முதலீடு செய்ய உகந்த Gold, Silver ETF திட்டங்கள்!!

அமெரிக்க டாலர் வலுவிழந்து இருப்பதே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டு இரண்டு முறை வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் அமெரிக்கா மத்திய வங்கி தலைவர் பதவியில் இருக்கும் ஜெரோம் பாவெல் அந்த பதவியில் இருந்து விலகுகிறார், டிரம்ப் தனக்கு சாதகமான ஒருவரை அந்த பதவியில் நியமனம் செய்யப் போகிறார்.

எனவே இந்த ஆண்டு அமெரிக்க மத்திய வங்கி மேலும் மேலும் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக தங்கம், வெள்ளி விலை உயர்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பொருளாதார மந்த நிலை, அமெரிக்க வேலை வாய்ப்பின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது, டாலர் குறியீடு இரண்டு வாரங்களில் இல்லாத சரிவை சந்தித்திருப்பது இந்த விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Share This Article English summary

Spot Gold Nears $5,000, Silver Hits Record Highs amid Global Tensions

On January 23, 2026, spot gold reached $4,967.50 per ounce while silver reached $98.89, both flirting with all-time highs driven by safe-haven demand, a weakening USD, and industrial needs. Story first published: Friday, January 23, 2026, 9:31 [IST] Other articles published on Jan 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *