உலக அரசியல்சூடு பிடித்தாலும், இந்தியாவுக்கு மட்டும் ஜாக்பாட் அடித்தது எப்படி? பிளாக் கோல்ட்காரணமா?
News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 22, 2026, 18:23 [IST] Share This Article
உலக வல்லரசு நாடுகளுக்கிடையே அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில், உலகப் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற நிபுணர்கள் எச்சரித்து கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவிற்கு மட்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது எனலாம். அதுதான் பிளாக் கோல்ட் என்று அழைக்கப்படும் கச்சா எண்ணெய்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவது, இந்திய கருவூலத்திற்கு ஒரு பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. உலகமே பதற்றத்தால் தத்தளிக்கும் போது, இந்தியா மட்டும் எப்படி இந்த நெருக்கடியைத் தன் முன்னேற்றத்திற்கான ஏணியாக மாற்றிக் கொள்ளும். இது வெறும் அதிர்ஷ்டமா அல்லது தொலைநோக்கு பார்வையின் வெற்றியா? கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் சமையலறை முதல் நாட்டின் ஜிடிபி வரை இந்த எண்ணெய் மேஜிக் நிகழ்த்தப்போகும் மாற்றங்களை எண்ணி பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இந்தியா இப்போது உலகரங்கில் அமைதியாகவும், வலிமையாகவும் இருப்பதன் பின்னணியை பார்ப்போம்.
நிம்மதி பெருமூச்சு?
மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வந்த போர் பதற்றமானது தற்காலிகமாகத் தணிந்துள்ளது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற பயம், சர்வதேச சந்தையையே ஆட்டம் காண வைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பல மாதங்கள் காணாத அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறியது. ஆனால் இப்போது அந்த அபாயம் குறைந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதன் விளைவாக சூடாக உச்சத்தில் இருந்த எண்ணெய் சந்தை, தற்போது குளிர்ச்சியடைய தொடங்கியுள்ளது. இந்த குளிர்ச்சியானது இந்தியாவுக்கு ஒரு ஜாக்பாட் போல வந்துள்ளது எனலாம். இது எரிபொருள் விலை குறைய உதவும் என்பதோடு, இந்திய பொருளாதாரம், பணவீக்கம், ரூபாய் மதிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை என அனைத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Share This Article English summary
Why do falling oil prices give India a reason to smile despite rising global tensions?
Cheaper crude lowers India’s import bill, strengthens the rupee, and cools inflation, boosting GDP growth while shielding the economy from global geopolitical and trade uncertainties. Story first published: Thursday, January 22, 2026, 18:23 [IST] Other articles published on Jan 22, 2026
